Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மனிதம் இன்னும் சாகவில்லை... 

மனிதம் இன்னும் சாகவில்லை…

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நம் சமூகத்தில் ஒரு சாதாரண அளவு பணக்காரனாய் இருந்தாலே போதும் சின்ன ஒரு விஷயம் என்றாலும் மூக்கில் கை வைத்துக் கொண்டு “சரியான தூசி எனா” என்பதும், கொஞ்சம் அழுக்கான ஒரு இடத்தைக் கண்டால் “சரியான நாத்தம் எனா” என்பதும் வழக்கம். ஆனால் கீழுள்ள படத்தில் உலகின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான Bill Gates கையில் ஒரு டப்பா மலத்தோடு காட்சியளிக்கிறார். இன்னொன்றில் ஒரு கொமட்டில் உட்கார்ந்திருக்கிறார். பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது. கொஞ்சம் தேடிப் பார்த்த போதுதான் விடையும் வியப்பளித்தது. விசித்திரமான அந்த விடையைத் தான் இந்தப் பதிவில் உங்களோடு பகிரப் போகிறேன்.

நாம் வருடா வருடம் ஒரு சில காலப்பகுதிகளில் குறிப்பாக மழைக்காலத்தில் அடிக்கடி கேள்விப்படுகிற ஒன்று தான் இந்த கொலோரா நோய், டெங்கு நோய், மலெரியாக் காய்ச்சல், கடும் வயிற்றுப் போக்கு (உயிர் பலி ஏற்படும் அளவு). இதனால் பலியாவோரின் கணக்குகள் ஒன்றிரண்டு என நம் காதுகளுக்கு வந்தாலும் உலகின் மொத்த தரவைப் பார்க்கையில் இலட்சங்களைத் தாண்டுகிறது. இதிலும் திகிலூட்டும் தகவல் என்னவெனில் கிட்டத்தட்ட 5 வயதைக் கடக்காத 5 இலட்சம் சிறுவர்கள் வருடம்தோறும் உயிரிழக்கின்றனர். அத்தோடு இந்த வகை நோய்களினால் பாதிக்கப் பட்டோருக்கான உலகின் வருடாந்த மருத்தவ செலவே $200 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் ஆகிறதாம்.

இதற்கான மூலகாரணங்களை தேடத் தொடங்கிய போதுதான் பாம்பு பொந்தலிருந்து வெளியேறுகிறது. சரியான நீர் வடிகால் வசதிகள் இல்லாமையும், கழிவுநீர் சுத்திகரிப்பு பற்றிய போதிய விழிப்புணர்வுப் பற்றாக்குறையும், போதுமானளவு இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான மலசலகூடங்களின் தட்டுப்பாடும் என விஷ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கிறது பாம்பு. உலகில் 4. 5 பில்லியன் பேர் ஒன்றில் முறையான மலசலகூட வசதிகள் இல்லாமலோ அல்லது இன்றும் கூட திறந்த வெளிகளில் தான் தமது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் என்றும் ஊர்ஜிதமான தகவல்கள் சொல்கின்றன.

அதிலும் ஆபிரிக்க நாடுகளில் நிலமை இன்னும் பயங்கரம். அங்கே பல இடங்களில் நேரடியாக மனிதக் கழிவுகள் நீரோடு கழந்து, நாட்கணக்கில் அப்படியே இருந்து சூழல் மாசடைவதை நினைக்கையில் எழுதும்போது எனக்கும் வாசிக்கும் போது உங்களுக்கும் மனம் அசூசையடைகிறது. துரதிர்ஷ்டவசமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையே இப்படித்தான் இருக்கிறது என்றால் எப்படி இருக்கும் நிலமை. இதனால் மற்றெல்லா நாடுகளையும் விட ஆபிரிக்க நாடுகளில் மேற்சொன்ன நோய்களினால் ஏற்படும் மரண வீதங்களும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. மனிதக் கழிவுகள் சார்ந்த பிரச்சினைகள் இவை மட்டுமல்ல இப்படியான துர்வாடைகளோடு காணப்படுகின்ற மலக்கிடங்குகளை மனிதனே பல நாடுகளில் துப்புறவு செய்ய நேர்ந்திருப்பதும் அதனால் அவர்கள் படும் பாடும் தனித்தலைப்பு.

பொதுவெளியில் காற்று விடுவதைப் பற்றியயே பேசக்கூச்சப்படும் இக்காலத்தில் தான் இந்த லட்சோப லட்ச மக்களின் அவல நிலை குறித்து வாசிக்கிறார்கள், யோசிக்கிறார்கள் இன்றைய உலகின் மிகப்பெரும் செல்வந்தக் குடும்பமான Bill Gates சும் அவரது மனைவி Melinda Gates சும். இதற்கு என்ன தீர்வு என சிந்திக்கிறார்கள். நாமென்றால் இலகுவாக எல்லோருக்கும் Toilets கட்டிக் கொடுத்தால் போதும் என்று சொல்லிவிடுவோம். அது அவ்வளவு சுலபமான தீர்வாக இருக்கவில்லை. ஏனெனில் இத்தனை லட்சம் பேருக்கும் Toilets கட்டுவது என்றால் அதற்கான பாரிய நிலப்பரப்புத் தேவை. அவற்றிலிருந்து வெளியேறும் மனிதக் கழிவுகளைத் தாங்க விசாலமான மலக்கிடங்குகள் அவசியம். இத்தோடு சேர்த்து இவற்றுக்கான நீரின் தேவையை கற்பனை செய்யவே முடியாது. நாமென்றால் யாருடைய பிரச்சினையோ இது. எந்த வழியிலும் இதைத் தீர்க்க முடியாது எனக்கூறி முயற்சியைக் கைவிட்டிருப்போம். இப்படி Bill Gates சும் யோசித்து விட்டு தன் வசந்த மாளிகையில் வாசனை நிறைந்த அறைகளுக்குள் சௌகரியமாக இருந்திருக்கலாம். ஆனாலும் எங்கோ ஒரு ஆபிரிக்க நாட்டில் ஒரு சாதாரண மனிதன் படும் பாடு இவருக்கு வலித்தது. ஜன்னல்கள் (Windows) என தன் கணினி நிறுவனத்துக்கு பெயர் வைத்தவர் தன் அறிவு ஜன்னல்களை திறந்து விடுகிறார் இந்தப் பிரச்சினைக்கு விடைதேடி.

எப்படி இவ்வளவு பணக்காரனாக Bill Gates ஆனார் என்பதன் ரகசியம் இங்கேதான் வெளிப்டுகிறது. சவால்களை ஏற்கிற மனம்தான் ஒரு வெற்றியாளனின் தாரகமந்திரம் என நிரூபிக்கிறார் Bill Gates. 2011 ல் Bill & Melinda Gates Foundation எத்தனை கோடியை செலவழித்தாவது இதற்கு முடிவு கொண்டுவர வேண்டும் என தீர்மானிக்கிறது. பல் துறை சார்ந்த பல நூறு விற்பன்னர்களோடு தொடரான கூட்டங்கள் நடைபெறுகின்றது. பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு தீர்வுகள் கோரப்படுகின்றன. கடைசியாக 16 ஆய்வாளர்கள் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு ஆய்வுகள் ஆரம்பிக்கின்றன. நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக விடாமுயற்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட 7 வருட அயராத உழைப்பின் பின் விடை கிடைக்கிறது. அந்த விடைத்தான் “Reinvent The Toilet”. 2018 ல் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இதுவரை $200 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது Bill & Melinda Gates Foundation. இதனை முழுவதுமாக முடித்து உலகிற்கு அறிமுகம் செய்ய இது போல இன்னொரு மனங்கு செலவாகும் என்று கருதுகிறார்கள்.

Reinvent the Toilet

அவர்கள் கண்டுபிடித்த அந்த “Reinvent the Toilet” டில் அப்படி என்னதான் இருக்கிறது? சுருக்கமாகச் சொன்னால் முன்னாள் சொல்லப்பட்ட சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் நான் அதன் சில பகுதிகளைச் சொல்கிறேன். இதன் முதற் சிறப்பு இது Waterless டாய்லெட் என்பதாகும். அப்ப தண்ணி ஊத்தத் தேவையில்லையா? எப்படி கழுவது என்று கேட்குறீர்களா? உங்கள் உறுப்புக்களை கழுவிக் கொள்ள மாத்திரம்தான் நீர் தேவை. கோப்பையை கழுவ வாலி வாலியாக நீர் ஊற்றத் தேவையில்லை,flash செய்து நீர் செலவழிக்கத் தேவையும் இல்லை.

அத்தோடு மனிதக் கழிவுகள் செல்ல பெரிய குளிகளோ பள்ளங்களோ தேவையில்லை. அப்படின்னா என்னதான் நடக்குது என்று நீங்கள் கேட்டால் அதற்குள்ளாக செய்யப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்ப செயற்திட்டத்தினூடாக நமது கழிவுகள் சில நிலைகளைக் கடந்து வெளியேறும் போது எந்த நாற்றமுமற்ற உரங்களாக வெளியாகின்றன அதேவேளை நாம் எம்மைச் சுத்தப்படுத்த பயன்படுத்திய நீர் மீண்டும் பதனிடப்பட்டு குடிநீராக மாறியே வெளியேறுகிறது. அந்த நீரை Bill Gates குடிக்கக் கூடிய காட்சிகள் கூட Youtube களில் காணக்கிடைக்கிறது. நீர்ப்பிரச்சினை, கழிவுகள் சேரும் சிக்கல், அவற்றால் ஏற்படும் சூழல் மாசடைவு, அவற்றை சுத்தம் செய்யும் பணி, என அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து அத்தோடு மேலதிகமாக நினைத்த இடங்களுக்கு கொண்டு செல்லக் கூடிய விதமாகவும் தயாரிக்கப்பட்டதுதான் “Reinvent the toilet” என்ற முறையில் உருவாக்கப்பட்ட இந்த மலசலகூடங்கள்.

நாம் கண்ணைத் திறந்தால் பார்ப்பதற்கும் தீர்ப்பதற்கும் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. 65 வயதில் ஒருவர் தன் சக மனிதனுக்காக இவ்வளவு உழைக்கிறான் என்றால் நமது வாலிபர்களும், திறமைசாலிகளும், வலவாளர்களும், அரசியல் தலைவர்களும் தமது திறன்களையும் வலங்களையும் வைத்து எவ்வளவு செய்ய வேண்டியிருக்கிறது. தம் தந்தையின் பணத்தில் நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு பெண்களை துஷ்பிரயோகம் செய்து அவற்றை Video எடுத்து ரசிக்கும் மனித மிருகங்கள் வாழும் உலகில் தன் சொத்தில் 27 சதவீதத்தை மக்களுக்காக ஒதுக்கிவிட்டு தன் முதுமையிலும் பிறருக்காக வாழ்பவர்கள் இருக்கிறார்கள் எனும் போது நெஞ்சம் நெகிழத்தான் செய்கிறது மனிதம் இன்னும் சாகவில்லை என நம்பத் தோன்றுகிறது.

குறிப்பு: இது பற்றி மேலதிகமாக அறிய விரும்புபவர்கள் sanitary revolution, Waterless toilets, Poop water,
Reinvent the toilet, போன்ற சொற்களைப் பயன்படுத்தி தேடிக் கொள்ளலாம்.

“We salute you sir Mr. Bill Gates”

இவன்: Ik (Ihsan kulam)

 


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


நம் சமூகத்தில் ஒரு சாதாரண அளவு பணக்காரனாய் இருந்தாலே போதும் சின்ன ஒரு விஷயம் என்றாலும் மூக்கில் கை வைத்துக் கொண்டு “சரியான தூசி எனா” என்பதும், கொஞ்சம் அழுக்கான ஒரு இடத்தைக் கண்டால்…

நம் சமூகத்தில் ஒரு சாதாரண அளவு பணக்காரனாய் இருந்தாலே போதும் சின்ன ஒரு விஷயம் என்றாலும் மூக்கில் கை வைத்துக் கொண்டு “சரியான தூசி எனா” என்பதும், கொஞ்சம் அழுக்கான ஒரு இடத்தைக் கண்டால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *