Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மனித நேயம் வாழும் ஊரில் மரண நேயம் வாழாதது ஏன்? 

மனித நேயம் வாழும் ஊரில் மரண நேயம் வாழாதது ஏன்?

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பேருவளை வந்தோரை வாழவைக்கும் ஊர். வாரி வழங்கும் ஊர். வள்ளல்கள் வாழ்ந்த ஊர். வள்ளல்கள் வாழும் ஊர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பேருவளை முஸ்லிம் மக்களால் ஒரு பாரிய ஜனாஸா எரிப்பு எதிர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இலங்கையிலே பாரிய ஒரு ஆர்பாட்டமாகவும், பக்கத்து ஊர்களான களுத்துறை மக்கொனை தர்கா நகர் போன்ற இடங்களில் இருந்தும் சுமார் 3000 மக்கள் திறல்வார்கள் என ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது. இதை தனிப்படுத்தல் சட்டங்களுக்கு அமைவாக தூரம் பேனி நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில் ஜனாஸா எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது .

சிந்திக்க வேண்டிய விடயம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக, செல்வாக்காக வாழும் ஊர். முஸ்லிம்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள ஊர். செல்வம் செல்வாக்கு செறிந்த ஊர்.

இத்தனைக்கும் மத்தியில் இலங்கை முஸ்லிம் ஜனாஸா எரிப்பு ஆர்பாட்டத்தால், London மாநகர் ஜனீவா உற்பட, உலகமே ஆடி நிற்கும் இவ்வேளையில், ஐ.நா உட்பட உலகெங்குலம் பேசுப் போருளாக இலங்கை ஜனாஸா எரிப்பு இருக்கும் நிலையில், முழு உலகத்தையும் உற்று நோக்கும் போது ஜனாஸா எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு தடை விதித்த உலகிலேயே ஒரே ஒரு ஊர் பேருவளை என்பது ஒரு புதிராகவே உள்ளது.

வெள்ளாட்டு மந்தையில் அந்த கருப்பாடு அது யார் யார்?

பேருவளையைப் பொருத்த வரையில், சமூகப் பிரச்சினை என வரும்போது அரசியலுக்கு அப்பால் செயற்படும் மக்களே வாழ்கின்றனர். விளைவுகள் விபரீதங்கள் என முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் போது, தோளோடு தோள் நின்று, கட்சி பேதமமின்றி உதவி செய்யும் உயர் குணம் கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.

இத்தனைக்கும் மத்தியில் ஜனாஸா எரிப்பு ஆர்பாட்டத்தை நிறுத்த முஸ்லிம் என்ற பெயரில் பின் நின்று உழைத்தவர்கள் யார்? மனித நேயத்திற்கு அப்பாற்பட்ட, எரிப்பதை ஆதரிக்கும் மத குருக்களுக்கும் இன வாதிகளுக்கும் இவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? இவர்கள் கற்பித்த இந்த வழி முறை இதன் பிறகு இனவாதிகளும் அனைத்து இடங்களிலும் கைக் கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நழீம் ஹஜியார் போன்ற மனித புனிதங்கள் பாதம் தொட்ட பாதையை தொட்டு வந்த பாவி யார்?

அவர் அல்லாஹ்வை பயந்து கொள்ளட்டும். எரிக்கப்பட்ட உறவுகளை நாடி, உணர்வுகளை புரிந்து கொள்ளட்டும்.

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்னலாபம். சொந்தந்தங்கள் சொல்லத்தானா ரத்தங்கள். சோதித்து பார்த்தால் வேறு அர்த்தங்கள்!

வெள்ளாட்டு மந்தையில் யார் அந்த கருப்பாடு சமூகத்தின் முன் கொண்டு வாருங்கள்.

பேருவளை
ஹில்மி 

பேருவளை வந்தோரை வாழவைக்கும் ஊர். வாரி வழங்கும் ஊர். வள்ளல்கள் வாழ்ந்த ஊர். வள்ளல்கள் வாழும் ஊர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பேருவளை முஸ்லிம் மக்களால் ஒரு பாரிய ஜனாஸா எரிப்பு…

பேருவளை வந்தோரை வாழவைக்கும் ஊர். வாரி வழங்கும் ஊர். வள்ளல்கள் வாழ்ந்த ஊர். வள்ளல்கள் வாழும் ஊர். நேற்று ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பேருவளை முஸ்லிம் மக்களால் ஒரு பாரிய ஜனாஸா எரிப்பு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *