Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மன்னிப்போம் மறந்துவிடுவோம் 

மன்னிப்போம் மறந்துவிடுவோம்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இவ் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் நம்மில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

மன்னிப்பு

இதில் என்ன புரிவதற்கு? கேட்கத்தோன்றுகிறது அல்லவா! ஆம் அனைவரின் உள்ளக்குமுறலும் நன்றாகக் கேட்கிறது.

சில சந்தர்ப்பங்கள் தான் சில விடயங்களை மனிதனுக்கு கற்றுக் கொடுக்கிறது. அவ்வாறே, எனக்கும் மன்னிப்பின் உள்ளார்ந்த தன்மையை சில மனிதர்களின் செயற்பாடுகள் கற்றுத்தந்துவிட்டது. நன்றி மக்காள்

தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன் தான் மனிதன் என்பதை மனிதப் புனிதர்கள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனோ புரியவில்லை இவ் உண்மையை பலர் புரியாமல் இருக்கிறார்கள். நீங்களும் புரியாத புதிராயின் தயவாய் வேண்டுகிறேன் புரிந்து கொள்ளுங்கள்.

தவறிழைத்த மாந்தனை மன்னிப்பது ஓர் உயர் பண்பு. அப் பண்பு உள்ளவன் சீதேவி தான். நீங்களும் அவ்வாரெனின் நீங்களும் சீதேவி தான்.

சீதேவிகளே! இப்பேதை சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்டுப்பாருங்களே!

அன்பர்களே! மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் ஏன் மன்னிப்பை வழங்குகின்றீர். ஓ. நீர் நல்லுள்ளம் படைத்தவர்களோ! இருக்கட்டும்.

மன்னிப்பை வழங்கிவிட்டு அந்த நற்கிரிகையின் உயர் பலனை அடையும் மாந்தராய் மாற முயற்சிப்போம் அன்புத் தோழர்களே!

“உன்னை மன்னித்துவிட்டேன்”

இவ் வார்த்தை எவ்வளவு ஆழமானது தெரியுமா? இவ் வார்த்தையை மொழிந்தவுடன் நீர் மன்னிப்பைக் கொடுத்தவனைப் பற்றி எந்தவொரு தப்பபிப்ராயமும் இருக்கக் கூடாதல்லவா? எனினும் எம் நிலை அவ்வாறோ. கொஞ்சம் கண்ணை மூடி சிந்தியுங்கள் பார்ப்போம். புரிந்திருக்குமல்லவா? எம் நிலை!

மன்னிப்பு என்பது வாயால் மொழியும் வார்த்தை அல்ல. செயற்பாடு ரீதியாக எம்முள் நுழையும் ஓர் அங்கம். மன்னிப்பு வழங்கி விட்டால் மீண்டும் அவன் செய்த தவறை சுட்டிப் பேசுவது. ஏனையோரிடம் அவன் இப்படிப்பட்ட தவறை செய்யக் கூடியவன் என்று சொல்வது. மன்னித்ததன் பிற்பாடும் அவனை கெட்டவன் போன்று நோக்குவது. என்பன நாம் செய்யக் கூடாத விடயங்கள். எனினும் எம் நிலை? தோழா உன் தவறை உணர்ந்துவிட்டாயா?

அன்பின் சகோதரர்களே! சகோதரிகளே! மன்னிப்பை உள்ளத்தின் ஆழத்திலிருந்து வழங்குங்கள். மாறாக வாய் மொழிச் சொல்லாக மாத்திரம் இருந்துவிடாதீர்.

மன்னித்து வாழ பழகும் மாந்தராய் இம் மண்ணில் வாழுங்கள்!

எழுத்தின் நேசகி
Zilfa Nalim

இவ் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் நம்மில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மன்னிப்பு இதில் என்ன புரிவதற்கு? கேட்கத்தோன்றுகிறது அல்லவா! ஆம் அனைவரின் உள்ளக்குமுறலும் நன்றாகக் கேட்கிறது. சில சந்தர்ப்பங்கள் தான் சில விடயங்களை மனிதனுக்கு கற்றுக்…

இவ் வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் நம்மில் பலர் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். மன்னிப்பு இதில் என்ன புரிவதற்கு? கேட்கத்தோன்றுகிறது அல்லவா! ஆம் அனைவரின் உள்ளக்குமுறலும் நன்றாகக் கேட்கிறது. சில சந்தர்ப்பங்கள் தான் சில விடயங்களை மனிதனுக்கு கற்றுக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *