Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மரணம் 

மரணம்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பலரது வாட்ஸ் ஸ்டேட்டஸில் ஒரு சகோதரியின் தாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு மரணித்ததையும் இன்று அதே சகோதரிக்கு திருமணத்திற்கு பேசி வைத்திருந்த ஆண்மகன் மரணித்ததையும் காணக்கிடைத்தது.

இயன்றவரை முயன்றும் அவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை என்னால் சம்பந்தப்பட்ட குடும்பத்தவரை தொடர்பு கொண்டு உறுதி செய்ய முடியவில்லை..நிறைய சகோதர சகோதரிகள் அந்த பெண்ணிற்காக துஆச் செய்ததைக் கண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.. அந்த சகோதரிக்கு இறைவன் பொறுமையையும் மன தைரியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.. நான் இங்கு இதை பதிவிடுவது இதை வாசிக்கும் உங்களுக்கு தான்.

ஸ்டேட்ஸில் பகிர்ந்து துஆச் செய்து சகோதரிக்கு ஆறுதல் கூறியதை தவிர வேறு என்ன செய்ய முடியும் உங்களால். நிச்சயமாக முடியாது. உங்களுக்கு தெரியுமா? உங்களது மரணம் எவ்வாறு தயார் படுத்தப்பட்டிருக்கிறது என்று. எங்கே எப்படி எந்நிலையில் எப்போது மரணிப்பீர்கள் என் உறுதியாக கூற முடியுமா?

 நபி அவர்கள் திடீர் மரணங்கள் அதிகரிக்கும் போது மறுமை நாளை எதிர்பாருங்கள் என்றார்கள். கொரோனா மரணமாக இருக்கலாம். இன்று நாம் பேசும் மரணமாக இருக்கலாம். இன்னும் ஏராளமான திடீர் மரணங்களை நாம் சந்தித்து விட்டோம். இந்தியாவில் கதற கதற கண்முன்னே தன் உறவுகள் உயிர் துறக்கின்றனர். காஸா சிட்டுக்குருவிகள் எல்லாம் கப்ரை நோக்கி செல்கின்றனர். இன்னுமா உங்களுக்கு புத்தி வரவில்லை.

நான் உறுதியாக சொல்கிறேன்.. நீங்களும் ஒரு நாள் மரணிப்பீர்கள். ஆனால் எப்போது எப்படி எங்கு என்று தெரியாது.

நான் கேட்பது இந்த நிமிடம் நான் மரணித்தால் எனது நிலை என்ன? நான் எனது கப்ருக்காக என்ன சேர்த்து வைத்து இருக்கிறேன் என இந்த மரண செய்திகள் எம்மை வந்தடைந்த போது சிந்தித்தோமா? அந்தத் தோழிக்கு ஆறுதல் கூறியதை தவறு என்று கூறவில்லை. அத்துடன் நிறுத்தியதை தவறு என்கிறேன். இறைவன் இவ்வாறான மரணங்களை எம் கண்முன் காட்டி எம்மை எச்சரிக்கிறான் என ஏன் எமக்கு தோன்றுவதில்லை. அந்த அளவு மரணத்தை மறந்தவர்களாவிட்டோம். உலக மோகத்திற்கு அடிமையாகி விட்டோம். மரணம் அது எந்த நேரத்திலும் எம்மை வந்தடையும். அதன் பிடியில் இருந்து தப்பியவர்கள் யாரும் கிடையாது.

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்..அதிகமாக பாவமன்னிப்பு வேண்டிக் கொள்ளுங்கள். மரணத்தின் பின்னராக வாழ்க்கைக்கு தயாராகுங்கள். இதை நான் ஏன் முன்னிலையில் சொல்கிறேன் என்றால் யாரும் விதிவிலக்கல்ல. எல்லோருக்கும் பொருந்தும்.

எனக்கும் நிச்சயமாக பொருந்தும். மரணம் அது எந்த நேரத்திலும் எம்மை வந்தடையும் என்பதை மறவாதீர்கள். அல்லாஹ்வின் திருப்தியின்றி உங்களால் சுவர்க்கத்தை நுகர முடியுமா என சிந்தியுங்கள். திருப்தியை பெற நீங்கள் செய்த அமல்கள் என்ன என்று சிந்தியுங்கள். நீங்கள் செய்த அமல்கள் இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதற்கான சான்றை தேடுங்கள். அப்போது வரும் மரணம் பற்றிய பயம். அதை மகிழ்ச்சியுடன் வரவேற்க தயாராகுங்கள். ரூஹ் மிக மெதுவாக உடலை விட்டு பிரிய ஆசைப்படுங்கள். நிச்சயமாக மரணத்தருவாயில் ஒவ்வொரு மனிதனும் நிலை காட்டப்படும். அப்போது கைசேதப்படாதீர்.

Faseem Ibnu Rasool

பலரது வாட்ஸ் ஸ்டேட்டஸில் ஒரு சகோதரியின் தாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு மரணித்ததையும் இன்று அதே சகோதரிக்கு திருமணத்திற்கு பேசி வைத்திருந்த ஆண்மகன் மரணித்ததையும் காணக்கிடைத்தது. இயன்றவரை முயன்றும் அவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை…

பலரது வாட்ஸ் ஸ்டேட்டஸில் ஒரு சகோதரியின் தாய் இரண்டு வாரங்களுக்கு முன்பு மரணித்ததையும் இன்று அதே சகோதரிக்கு திருமணத்திற்கு பேசி வைத்திருந்த ஆண்மகன் மரணித்ததையும் காணக்கிடைத்தது. இயன்றவரை முயன்றும் அவர்கள் பற்றிய உறுதியான தகவல்களை…