Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாத்தறையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம் - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

மாத்தறையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் பயங்கரமான இராணுவ ஆட்சி போன்றவற்றுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னேடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாத்தறை மாவட்டத்தில் இன்று (26.06.2021) இடம்பெறுகின்றது.

மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புந்திக பதிரண, முன்னாள் வெலிகம நகரபிதா ரெஹான் ஜெயவிக்ரம உட்பட ஐக்கிய மக்கள் சக்தி மாத்தறை மாவட்ட பிரபலங்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்,

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் பயங்கரமான இராணுவ ஆட்சி போன்றவற்றுக்கு எதிரான எமது ஆர்ப்பட்டம் பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கும் வௌியேயும் தொடரும் என்றார் பாராளுமன்ற உறுப்பினர் புந்திக பதிரண.

மேலும் ஒன்லைன் கல்வி வழங்க முடியாத அரசு ஒன்லைன் சாராயம் வழங்கி கொரோனாவில் மரணிக்காதவர்களை சாரயத்தின் மூலம் மரணிக்கச் செய்வதாக புந்திக தெரிவித்தார்.

நாம் தற்போது பலமான எதிர்கட்சியாக உள்ளோம். 2010 ஆம் ஆண்டு ரணிலின் எதிர் கட்சியில் அரசியலமைப்பு மாற்றத்தில் எதையும் மாற்ற முடியவில்லை ஆனால் 20 ஆம் திருத்தத்தில் அரைவாசிக்கு அரைவாசி திருத்தினோம். அவ்வாறே துறைமுக சட்டத்திலும் திருத்தங்களை ஏற்படுத்தினோம். மேலும் பல சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தினோம்.

மேலும் பயணகட்டுப்பாட்டு தளர்த்தி இரண்டாம் நாள் இன்று குறித்த முதலாவது ஆர்ப்பாட்ட அணி  தெற்கில் மாகந்துரையில் ஆரம்பித்து மாத்தறையில் வரை செல்கின்றது. இரண்டாவது அணி தெனியாவில் இருந்து மாத்தறை நோக்கி செல்கின்றது. அவ்வாறே வெலிகம, ஹக்கமன, தெவிநுவர பிரதான வீதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட ஊர்வவலம் மாத்தறை நோக்கி செல்கின்றனர். LNN Staff

 

 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் பயங்கரமான இராணுவ ஆட்சி போன்றவற்றுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னேடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாத்தறை மாவட்டத்தில் இன்று (26.06.2021) இடம்பெறுகின்றது. மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நாட்டில் பயங்கரமான இராணுவ ஆட்சி போன்றவற்றுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டமொன்றை முன்னேடுத்துள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் மாத்தறை மாவட்டத்தில் இன்று (26.06.2021) இடம்பெறுகின்றது. மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…