Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாறாாத மாற்றங்கள் 

மாறாாத மாற்றங்கள்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்தின் போது என்னுள் ஏதாவது ஒரு மாற்றத்தினை கொண்டு வரனும் என எண்ணுகின்றேன். ஆனால் அதுவோ பீர்பாலும் பிறந்தநாள் மாற்றமும் போன்றே ஆகிவிடுகின்றது. அது என்ன பீர்பால் கதை என்று தானே கேட்க போறீங்க? பிரபலமான விகடகவியான பீர்பால் சிறு வயதிலிருந்தே மிகவும் குறும்புக்காரனாக இருந்தான்.

குறிப்பாக மற்றவர்கள் அவனிடம் ஒன்றை செய்ய சொன்னால் அதை செய்யாமல் அதற்கு எதிராகாவே செய்து வைப்பான். உதாரணமாக வலதால் செல் என்றால் இடதாலும், இடதால் வா என்றால் வலதாலும் செல்பவன்அவன். இதனை அனுபவத்தில் உணர்ந்த அவனது பெற்றோர் மற்றும் ஊரார் அனைவரும் அவனிடம் ஏதேனும் ஒரு வேலை வாங்க வேண்டி ஏற்பட்டால் மாற்றியே சொல்வார்கள்.

இப்படி செல்லும் போது அவனது 15வது பிறந்தநாளும் வந்தது. அவன் வேண்டும் என்று தான் மாற்றி மாற்றி செல்லும் வேலைகளை செய்து வந்தமையால் இந்த பிறந்த நாளிலிருந்து ஒழுங்காக இருக்க வேண்டும், எதை சொல்கின்றார்களோ அதனையே செய்ய வேண்டும் என உறுதி கொண்டான்.

அன்று சந்தை நாள் தான் உற்பத்தி செய்த அரைத்த கோதுகை மாவினை சந்தைப்படுத்த பீர்பாலின் தந்தையும் தயாரானார். கழுதையின் மேல் பொதியினை சுமத்திய பீர்பாலின் தந்தை பொதியின் வலது புறத்தில் சிறிய ஓட்டை ஒன்றில் இருந்து மா கீழே சிறிது சிறிதாக விழுவதை கண்ணுற்றார். அவர் கழுதையின் ஏறி இருந்தமையால் சுற்றும் முற்றும் யாராவது வருகிறார்களா என பார்க்க நம்ம பீர்பால் அந்த பக்கம் வருவதனை கண்டு அருகே அழைத்தார்.

மகனின் மனமாற்றம் தெரியாத அவரோ பீர்பாலிடம் அந்த பொதியின் இடது புறத்தினை உயர்த்தி கட்டுமாறு கூற பீர்பாலும் நல்ல பிள்ளையாய் இடது புறத்தினை உயர்த்த ஏற்கனவே ஓட்டை விழுந்திருந்த பொதியின் வலது புறம் மேலும் கீழே சரிந்ததால் நிறைய மா கீழே மண்ணில் விழுந்து அநியாயமாகியது. பீர்பாலின் தந்தைக்கோ வந்தததே கோவம் பின்ன இருக்காதா? பல மாத உழைப்பு அல்லவா? இறங்கி வந்து கையில் கிடைத்த தடியால் விலாசத் தொடங்கினார்.

அழுது கொண்டே ஏன் பா அடிக்கீற? நீங்க சொன்னத தானே நா செஞ்சன் என்றானாம். ஏன்டா நீ இப்படி தானே எப்பவும் மாத்தி தானே செய்வாய் இண்டக்கி மட்டும் ஏ சரியா செஞ்ச என அவனின் தந்தை கேட்க அவன் தன் மனமாற்றத்தை கூறினார். பீர்பாலின் தந்தையோ தலையில் கையை வைத்து கொண்டார்.

இப்படி தான் நாம் ஏதும் மாற நினைப்போம். சமூகம் ஏற்காது. அதை விட பரிதாபம் நாம் மாறினது நமக்கே மறந்து போவது.

Shifana Zameer

ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்தின் போது என்னுள் ஏதாவது ஒரு மாற்றத்தினை கொண்டு வரனும் என எண்ணுகின்றேன். ஆனால் அதுவோ பீர்பாலும் பிறந்தநாள் மாற்றமும் போன்றே ஆகிவிடுகின்றது. அது என்ன பீர்பால் கதை என்று…

ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்தின் போது என்னுள் ஏதாவது ஒரு மாற்றத்தினை கொண்டு வரனும் என எண்ணுகின்றேன். ஆனால் அதுவோ பீர்பாலும் பிறந்தநாள் மாற்றமும் போன்றே ஆகிவிடுகின்றது. அது என்ன பீர்பால் கதை என்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *