Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?… செருப்பு கூட காரணமாகலாம்!… இதை கவனியுங்கள்! 

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?… செருப்பு கூட காரணமாகலாம்!… இதை கவனியுங்கள்!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

Back pain: முதுகு வலி போன்றவை வருவதற்கு நாற்காலியும், செரும்பும் கூட காரணமாக இருக்கலாம்.

சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கி கொண்டிருந்த வலி தற்போ து 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை. பலருக்கும் முதுகு வலி மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த முதுகு வலி ஒருவருக்கு ஏன் வருகிறது, அதற்கான காரணங்கள் என்ன, இதற்கு பல காரணங்கள் இருக்கிறது.

சாதாரண முதுகு சுளுக்கிலிருந்து நாள்பட்ட தீவிர சியாடிகா, ஆர்த்ரைட்ஸ் அல்லது புற்றுநோயாக கூட இருக்கலாம். முதுகுவலி வருவதற்கு வயதும் ஒரு காரணமாகும். வயதாகும் போது முதுகின் கீழ்ப்பகுதியில் உள்ள இணைப்புகள் மற்றும் எலும்புகள் இடம் மாற தொடங்குகின்றன. நாளடைவில் இந்த வட்டுகள் உடைகின்றன. இந்த மாற்றத்தின் காரணமாகவே அவ்வப்போது வலி உண்டாகிறது. உங்களுக்கு முதுகு வலி இருந்தால், அது லேசாக இருக்கிறதா அல்லது இரவு தூங்கவிடாமல் தீவிரமாக இருக்கிறதா? என பார்ப்பது நல்லது.

முதுகுவலி வரும் போது சும்மாவே உட்கார்ந்திருந்தாலும், வேலை செய்துகொண்டே இருந்தாலும் கூட வலியின் தீவிரம் இருந்துகொண்டே இருக்கும். உட்கார்ந்த இடத்தில் மணிக்கணக்கில் ஒரே நிலையில் அமர்ந்திருப்பதும் கூட பொருந்தும். இன்று பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யும் இளைய தலைமுறையினர் 80 % பேர் இந்த முதுகுவலி பிரச்சனையை சந்தித்துவருகிறார்கள். எனவே அமரும்போது நாற்காலியில் முதுகு நன்றாக படியும்படி அமர்கிறோமா என்பதை கவனியுங்கள். ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை 5 நிமிடம் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ் செய்துகொள்ளுங்கள். இருப்பினும் மேலும் தொல்லை இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.

இதேபோல், நம்மில் பெரும்பாலானோர் முக அழகுக்குக் கொடுக்கிற அக்கறையில் பாதியைகூடக் காலுக்குக் கொடுப்பதில்லை. டூவீலர் பயணத்தில் தலையைக் காக்க ஹெல்மெட் எவ்வளவு அவசியமோ, அதேபோல நடக்கும்போது கால்கள் பாதுகாப்புக்கு செருப்புகள் அவசியம். அதிலும், ஒவ்வொருவரும் அவரவர் பாதங்களுக்கு ஏற்ற, பொருத்தமான செருப்புகளைத்தான் அணிய வேண்டும். செருப்பு பொருத்தமானதாக இல்லாவிட்டால், முதுகுவலி, கணுக்கால்வலி போன்றவை ஏற்படலாம்.

குதிகால்வலி ஏற்பட முக்கியக் காரணம், தரமற்ற செருப்புகளை அணிவதுதான். தரமற்றச் செருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கணுக்காலுக்கு மேல் எலும்பும் சதையும் இணையும் இடத்தில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த இடமே இறுகிப்போய்விடும். இதை ‘கால்கேனியல் பர்சிட்டிஸ்’ (Calcaneal bursitis) என்று மருத்துவத்தில் குறிப்பிடுவோம். குதிகால்வலி ஏற்படாமல் தவிர்க்க, எம்.சி.ஆர் (Microcellular rubber), எம்.சி.பி ( Microcellular polymer) செருப்புகளை அணிய வேண்டும்.

குதிகால் எலும்பு வளர்வதை ‘கால்கேனியல் ஸ்பர்’ (Calcaneal spur) என்போம். நம் உடலில் இருக்கும் கால்சியம் சத்து, சில நேரங்களில் குதிகால் எலும்பில் போய் சேர்ந்துவிடும். இது ஓர் ஊசி மாதிரி மாறி, கால்களைக் குத்திக்கொண்டே இருக்கும். இதனாலும் வலி ஏற்படலாம். இதைத் தவிர்க்க சற்று உயரமான எம்.சி.ஆர் செருப்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

Readmore: 40 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து!… 12 பேர் பலி!… ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

The post முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா?… செருப்பு கூட காரணமாகலாம்!… இதை கவனியுங்கள்! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” Back pain: முதுகு வலி போன்றவை வருவதற்கு நாற்காலியும், செரும்பும் கூட காரணமாக இருக்கலாம். சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக…

[[{“value”:” Back pain: முதுகு வலி போன்றவை வருவதற்கு நாற்காலியும், செரும்பும் கூட காரணமாக இருக்கலாம். சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *