முதுமையின் தேவை என்னவென்று தெரியுமா? 03

  • 11

ஓர் மனோவியியல் அணுகுமுறை

  1. பகுதியளவிலான நினைவுக் குறைபாடு.
  2. பெயர்களைச் சரியாக நினைவுகூர்தலில் அடிக்கடி தவறிழைத்தல்.
  3. சம்பவங்களை நினைவுறுத்தலில் ஏற்படும் சிரமம்.
  4. பார்வை சார்ந்த ஞாபக மறதி.

உ+ம் : பொருட்களை எந்த இடத்தில் வைத்தேன் என்ற மறதி.

மேற்குறிப்பிட்டவை போன்ற பல சந்தர்ப்பங்கள் வயோதிபர்களிடையே அவர்களது முதுமை காரணமாக ஏற்படக்கூடிய அறிகை (Cognitive)க் குறைபாடுகளாகக் காணப்படுகின்றன. மூளையிலுள்ள நியுரோன்கள் பொதுவாக மறதிக்கு வழிவகுக்கும். முதுமையில் அது அதிகமாகக் காணப்படும். (தன்னையே மறந்த நிலை – Dementia / முதுமையில் ஏற்படும் Alzheimer இற்கு வேறு காரணங்களும் காணப்படுகின்றன.)

உடலுறுப்புக்களின் இயங்கா நிலை அல்லது பலவீனங்கள் உள்ளத்தில்ப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இத்தகைய உடல்நிலை மனதில் அசௌகரியமான நிலையை ஏற்படுத்தும் இதன்காரணமாக அவர்கள் எப்போதும் எரிச்சல்ப்பட்டுக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பார்கள். இவ்வாறு மறதி, எரிச்சல் நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் அதிருப்திகொள்ளும் நிலைமைகளும் ஏற்படுகின்றன.

இன்னும் குறிப்பாக Chronic Illness எனப்படக்கூடிய (நாட்பட்ட நோய்கள்) காரணமாகவும் அவர்களது உடல் மிகவும் பலவீனப்பட்டதாகக் காணப்படும். ஆய்வுகளினடிப்படையில் 65 வயதிற்கு மேற்பட்டோர்களில் 85% ஆனவர்களுக்கு குறைந்தது ஒரு நாட்பட்ட நோயாவது காணப்படும். மேலும் 65 வயதிற்கு மேற்பட்டோரில் 68% ஆனவர்களுக்கு குறைந்தது இரண்டு நாட்பட்ட நோயாவது காணப்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இவ்வாறு ஏற்படும் உடல் ஆரோக்கியத்தின் பலவீனம் நேரடியாக அவர்களது உள ஆரோக்கியத்தில்ப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

  1. எதிலும் பிடிப்பற்ற நிலை
  2. எதிர்மறையான எண்ணங்களின் அதிகரிப்பு.
  3. இறப்பெய்துவது மேலென்ற எண்ணம்

போன்ற எண்ண நிலைகள் அவர்களது உளநிலையைக் கட்டமைத்திருக்கும். இதனை மாற்றியமைப்பதற்காக பின்வரும் நான்கு பகுதிகளிலனூடான பராமரிப்பை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

  1. அறிகை சார்ந்த மாற்றம் ( Cognitive Change)
    அவர்களிடத்தில்க் காணப்படும் வாழ்க்கை பற்றிய எதிர்மறையான ( negative thoughts)ஐ நீக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளல்.
  2. உடலியல் மாற்றம். (Physiological Change)
    உதாரணமாக கேள்வி (Auditory) மற்றும் பார்வை (Visual) புலன்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்.
  3. சுகாதார மாற்றம். (Health Change)
    ஆரோக்கியமானதும் சுத்தமானதுமான உணவுப்பழக்கவழக்கங்கள் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பேணிவரச் செய்தல்.
  4. சமூக ரீதியான மாற்றம். (Social change)
    குடும்ப அங்கத்தவர்களது அன்பு மற்றும் கணிவான பராமரிப்பு மிக மிக அவசியமானது.

பல நாடுகள் Care Givers Service – முதியவர்களைப் பராமரிப்பதற்காக சேவையாளர்களைப் பணிக்கமர்த்தும் கலாசாரத்தைக் கொண்டு செயற்பட்டு வருகின்றன. 2030களில் இந்நிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவைக்கலாசாரம் சில அணுகூலங்களைத் தந்தோபதிலும் பிரதிகூலங்களையும் ஏற்படுத்தவே செய்கின்றது.

பணத்திற்காக சேவையாற்றுபவர்களிடம் நிபந்தனையற்ற அன்பையும் அக்கறையும் எதிர்பார்க்க முடியாது என்ற ஏக்கம் மேலும் அவர்களது மனோநிலையைப் பலவீனப்படுத்தவும் செய்யும்.

தொடரும்….
A.B.M Waseem (Naleemi)


ஓர் மனோவியியல் அணுகுமுறை பகுதியளவிலான நினைவுக் குறைபாடு. பெயர்களைச் சரியாக நினைவுகூர்தலில் அடிக்கடி தவறிழைத்தல். சம்பவங்களை நினைவுறுத்தலில் ஏற்படும் சிரமம். பார்வை சார்ந்த ஞாபக மறதி. உ+ம் : பொருட்களை எந்த இடத்தில் வைத்தேன்…

ஓர் மனோவியியல் அணுகுமுறை பகுதியளவிலான நினைவுக் குறைபாடு. பெயர்களைச் சரியாக நினைவுகூர்தலில் அடிக்கடி தவறிழைத்தல். சம்பவங்களை நினைவுறுத்தலில் ஏற்படும் சிரமம். பார்வை சார்ந்த ஞாபக மறதி. உ+ம் : பொருட்களை எந்த இடத்தில் வைத்தேன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *