Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முதுமை- சிறுமை இரண்டும் மனித வாழ்வில் இரு முனைகள்! 

முதுமை- சிறுமை இரண்டும் மனித வாழ்வில் இரு முனைகள்!

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முதுமை- சிறுமை இரண்டும் மனித வாழ்வில் இரு முனைகள். பொதுமையாக இவை இரண்டையும் பேனுவதன் அவசியத்தை சர்வதேச  சட்டங்களும் விழுமியங்களும் அதீதம் வழியுருத்துகிறது. அதே தற்க சமயத்தில் மதங்களும் கலாச்சாரங்களும் அதைவிட்டு மாற்றுக்கருத்துக்களில் நிற்கவில்லை. இஸ்லாமிய மதம் சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரையும் முதியவர் மீது மரியாதை செய்யதாவரும் எம்மைச்சார்ந்தவர் இல்லை என இஸ்லாமிய விழுமியங்களில் ஒன்றாக சிறுமைப்பருவம் , முதுமை பருவத்தின் உரிமை பேணலை வலியுறுத்துகிறது.

அவற்றில் குறிப்பாக சிறுவர்கள் என்பவர்கள் மனித வளர்ச்சியில் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள். அவர்களது நலன் தொடர்பான கரிசனை எதிர்கால தலைமுறையின் நலனிற்கான முன் ஏற்பாடாகும். சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது உரிமை மதிப்பு தொடர்பில் நவகால ஆய்வுகள் மற்றும் கருத்தியல்கள் அதிகம் வலியுறுத்தத்தக்கவகையில் அமைவதுடன் அதனுடைய தேவையும் அவசியப்பாடும் மறுப்பதற்கு முடியாத விதத்தில் அமைந்துள்ளன என்பதில் சமூதாய அவதானிகளிடத்தில் இருகருத்து நிலவ முடியாதவையாகும். சர்வதேச சங்கங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடக்கம் தேசிய உரிமை ஆவணங்கள் மற்றும் ஆக்கங்கள் தொடக்கம் இது தொடர்பில் அதிகவன பார்வையுடன் நோக்கப்படும் விடயாமகும்.

அவற்றில் குறிப்பாக சர்வதேச சிறுவர் உரிமைகள் தொடர்பில் பேசும் முதல் பிரகடனம் 1924 அங்கீகரிக்கப்பட்டது.  அதனை தொடர்ந்து 1959 ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் (Convention on the Rights of the Child) சிறுவர் உரிமைகளை வலுச்சேர்க்கும் விதத்தில் அமைந்தன. 1979 ஆம் ஆண்டு சர்வதேச சிறுவர் ஆண்டாக கொண்டாடியதன் மூலம் இது தொடர்பான பரந்த விழிப்புணர்வு பரவியதுடன் 1989 ஆம் ஆண்டில் சிறுவர் உரிமைகள் தொடர்பான சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அதனை தொடர்ந்த பலவேறு வெளியாகிய சாசனங்களை 1992 இல் இலங்கையும் ஏற்றுக்கொண்டது.

இலங்கையில் சிறுவர் தொடர்பான சட்டமும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் சிறுவர்களின் வயதெல்லையினை பதினெட்டாக வரையறை செய்துள்ளன. இதனடிப்படையில் இலங்கையில் 18 வயதைவிடக்குறைந்தவர்களிற்கு எதிராக நடைபெறும்  வன்முறை, சுரண்டல், தீங்கிழைத்தல்  மற்றும் புறக்கணிப்பு ஆகியவற்றில் இருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு ஆரோக்கியமாக உயிர் வாழ மற்றும் உடல், மன வளர்ச்சி பெற்று தனித்தன்மையுடன் வளர அனுமதிப்பது குழந்தை பாதுகாப்பாக கருதப்படும்.

பிள்ளை ஒன்றின் மீது பிரயோகிக்கப்படும் எல்லா வகையான துன்புறுத்தல்களும் சிறுவர் துஷ்பிரயோகமாகும். அதாவது 18 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளை உடல், உள ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தல் மற்றும் அவர்களை பராமரிப்பின்றி விடுதல் சிறுவர் துஷ்பிரயோகமாகும் என வரையருக்கலாம். ஒரு சிறுவருக்கு நேரடியாக ஏற்படுத்தும் செயல்களும் அவற்றின் பயனாக அச்சிறுவனின் ஆரோக்கியத்தில், மேம்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களும் சிறுவர் துஷ்பிரயோகமாகும். சிறுவர் உழைப்பு, கொடுமைப்படுத்தல், பாலியல் வன்முறைகள், தீங்கினை விளைவித்தல் என்பன துஷ்பிரயோகத்திலடங்கும். மேலும் சிறுவர்களின் உடல் உள ஆரோக்கியத்திற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தலும் துஷ்பிரயோகமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் பின்வரும் விடயங்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களாகும்.

இன்று வெறும் சிறுவர் நலன் பேணுவது என்பது அவர்களது பாலியல் தொந்தரவை தவிர்ப்பதாக மாத்திரம் வசனம் பேசும் அளவிற்கு வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக உடலியல் வன்முறை,  பாலியல் பலாத்காரம் தொட்டு உணர்வு ரீதியான பலாத்காரம் மற்றும் அவர்களிற்கு சென்றடைய வேண்டிய அடிப்படைகளை முறையாக அடைய வைக்காமையும் சிறுவர்  உரிமை மீறலே. சிறுவர்களை அவர்களது இயலுமைகளின் எல்லையில் கொண்டாடுவோம். அவர்களது தேவையின் வரையறையில் ஒத்துழைப்போம்.

சிறுவர் தின வாழ்த்துக்கள்.
முதியோர் தின வாழ்த்துக்கள்
Afra binth akram
இஸ்லாஹிய்யா வளாகம்- புத்தளம்
வியூகம் வெளியீட்டு மையம்

முதுமை- சிறுமை இரண்டும் மனித வாழ்வில் இரு முனைகள். பொதுமையாக இவை இரண்டையும் பேனுவதன் அவசியத்தை சர்வதேச  சட்டங்களும் விழுமியங்களும் அதீதம் வழியுருத்துகிறது. அதே தற்க சமயத்தில் மதங்களும் கலாச்சாரங்களும் அதைவிட்டு மாற்றுக்கருத்துக்களில் நிற்கவில்லை.…

முதுமை- சிறுமை இரண்டும் மனித வாழ்வில் இரு முனைகள். பொதுமையாக இவை இரண்டையும் பேனுவதன் அவசியத்தை சர்வதேச  சட்டங்களும் விழுமியங்களும் அதீதம் வழியுருத்துகிறது. அதே தற்க சமயத்தில் மதங்களும் கலாச்சாரங்களும் அதைவிட்டு மாற்றுக்கருத்துக்களில் நிற்கவில்லை.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *