Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சமூகம்... 

முன்னுதாரணமாக இருக்க வேண்டிய சமூகம்…

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள், உணர்வுகள் இயல்பானவை. ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? அதனூடாக சமூகத்திற்கு பயனுடையதாய் ஏதாவது செய்ய முடியுமா? என்பதை சிந்திப்பதே காலத்தின் தேவையாகும்.

உலகையே ஆட்டிப்படைத்த வல்லரசுகளை திக்குமுக்காடச் செய்து, இன்றுவரை செய்வதறியாது திகைக்க வைத்துக் கொண்டிருக்கும் வல்லவனின் அற்பமான படைப்பே கொரோனா எனும் கொடிய நோய். அவனே நோய்களை அழிப்பவனும், அவற்றிலிருந்து மீளும் வழிகளை அளிப்பவனாகவும் உள்ளான்.

எத்திக்கையும் திகைக்க வைத்த கொரோனா, மனித உள்ளங்களில் தித்திக்கும் பல பாடங்களையும் கற்றுத்தர மறக்கவில்லை. மனிதாபிமானம் மற்றும் தேசப்பற்று பற்றி இன்று மனிதன் உணர ஆரம்பித்திருக்கும் இத்தருணத்தில், மானிலத்திற்கே முன்னுதாரணமாய் வாழ்ந்து காட்டிய மாநபி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூட ஒரு மாபெரும் தேசாபிமானி என்ற வகையில் “தன்னை, தான் பிறந்து வளர்ந்த இவ்வூர்(மக்கா) மக்கள் விரட்டியனுப்பாவிட்டால், தான் ஒருபோதும் அதனைவிட்டு வேறிடம் சென்றிருக்க மாட்டேன்.”என்று தனது தேசப்பற்றை ஹிஜ்ரத் செல்லும் போது வெளிப்படுத்தினார்.

சுமார் ஆயிரத்து நாநூறு(1400) வருடங்களுக்கும் மேலான வரலாற்றையுடைய முஸ்லிம்களாகிய நாம், நம் தாய்நாட்டிற்கு இந்நெருக்கடியான நிலையிலிருந்து மீண்டெழ ஏனைய அனைத்து சகோதரமதத்தினரோடும் இணைந்து ஒன்றாய் தோள் கொடுப்பதே முஸ்லிம் என்ற வகையில் நம் அனைவரினதும் கடமையாகும்.

ஏனைய சமூகத்தினருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இச்சமயத்தில், எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் ஊரடங்கு சட்டத்தை மீறி ஊர்சுற்றியும், கூடிக் குழாவியும் மீண்டும் மீண்டும் நம்மைப்பற்றிய தப்பெண்ணத்தையே மாற்றுமத சகோதரர்களின் மனங்களில் விதைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்தோமா?

தன் குடும்பத்தினரை விட்டு பிரிந்து, பல நாட்கள் தூக்கத்தை மறந்து, மக்களின் உயிர்காக்க தம் உயிரை அடைமானம் வைத்து போராடும் வைத்தியர்கள், தாதிமார் மற்றும் காவற்றுரையினரதும் தியாகத்தை ஒருகணம் சிந்தித்து தேசப்பற்றுடன் நாட்டுச்சட்டத்தை மதித்து, மனிதாபிமானத்துடன் ஏழைகளின் துன்பம்நீக்க நாம்மாலான உதவிகளை செய்து நாம் இழந்த நம்பிக்கையை மீண்டெடுப்போமாக!

நன்றி

M.I.M.  ISMAIL
Chinafort,
Beruwala

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள், உணர்வுகள் இயல்பானவை. ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? அதனூடாக சமூகத்திற்கு பயனுடையதாய் ஏதாவது செய்ய முடியுமா? என்பதை சிந்திப்பதே காலத்தின் தேவையாகும். உலகையே ஆட்டிப்படைத்த வல்லரசுகளை திக்குமுக்காடச் செய்து,…

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஆசைகள், உணர்வுகள் இயல்பானவை. ஆனால் அவற்றை எவ்வாறு பயன்படுத்தவேண்டும்? அதனூடாக சமூகத்திற்கு பயனுடையதாய் ஏதாவது செய்ய முடியுமா? என்பதை சிந்திப்பதே காலத்தின் தேவையாகும். உலகையே ஆட்டிப்படைத்த வல்லரசுகளை திக்குமுக்காடச் செய்து,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *