முஸ்லிம் சமூகத்திற்கு வரலாற்றுத் துரோகம் இழைத்த முஸ்லிம் கட்சிகள்

  • 8

இன்று முஸ்லிம் அரசியலில், அரசியல்வாதிகளின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது சமூகத்தின் உரிமைகளையும் தனித்துவத்தையும் பாதுகாப்பது எவ்வாறாயினும், இலங்கை சரித்திர வரலாற்றில் தற்காலத்தில் நடந்தது போன்ற மிக மோசமான துரோகத்தனமான கேவலமான சமூக அரசியல் ஏமாற்றத்தையும், துரோகத்தையும் எந்த அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல் தலைமைகளோ இதற்கு முதல் செய்ததில்லை.

அதாவது திருத்தச்சட்ட மூலத்தில் சமூகத்திற்கு எவ்வளவு தூரம் பாதிப்புகள், பாதகங்கள் இருகின்றது, எவ்வளவு தூரம் உரிமைகள் பறிக்கப்படுகின்றது என்பதை தெரிந்து கொண்டு, திட்டம் தீட்டி சமுகத்தை ஏமாற்றி துரோகம் செய்த இவர்களை முஸ்லிம்கள் முஸ்லிம் பிரதிநிதிகள் என்று சொல்வதற்கே வெட்கப்பட வேண்டியுள்ளது.

இதற்கும் மேலாக இன்று தெருச் சண்டையாக மாறியுள்ள முஸ்லிம் அரசியல்களம், இவர்களின் சுயநலவாதம் காரணமாக அழிந்து போகும் நிலையை நெருங்கியுள்ளது.

அதாவது பல நூறு வருடம் சென்றாலும் உலக வரலாறு பேசப் போகும் ஜனாஸா எரிக்கும் நிலையில் கூட, அரசியல் லாபத்தை தேடிய கேவலமான அரசியல் தலைமைகள். மலை அளவு தங்கத்தை கொடுத்தாலும் மாறாதிருந்திருக்க வேண்டிய முஸ்லிம் அரசியல் தலைமைகள், இன்று முஸ்லிம் சமூகம் வடிக்கும் கண்ணீருக்கும் வடிக்கப்போகும் கண்ணீருக்கும் முதல் காரணமாக அமைந்தும் அமையப்போவதும் தனி பெரும் முஸ்லிம் வாக்குகளால் தனித்துவம் காக்க வந்த முஸ்லிம் கட்சிகளே.

நமது சமூகத்தில் வாழ்ந்து சென்ற, சமூக தலைவர்களின் சரித்திரங்களை படிக்கும் போது, அவர்கள் சமூகத்திற்கு பெற்றுத்தந்த உரிமைகளை விற்றுப் பிழைக்கும் இவர்களின் திட்டமிட்ட நடவடிக்கையானது, யகூதிகளின் நடவடிக்கைக்கு ஒப்பானதாகவே காணப்படுகின்றது. அதைவிட கீழ்தரமானது என்றாலும் தப்பில்லை.

கட்சியின் முடிவிற்கு துரோகம் செய்து விட்டார்கள் என ஒரு நடிப்பு. ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தலைவர் கிழக்கு விரைந்தார் என ஒரு நடிப்பு. தலைவரின் ஆசீர் வாதத்துடனே வாக்களித்தோம் என ஒருவர், நூற்று என்பது ஜனாஸாக்ளை அநியாகமாக எரித்து விட்டார்கள் என பாராளுமன்றத்திலும், ஜனாஸா பெட்டிகளையே எரித்தார்கள் என பாராளுமன்றத்திற்கு வெளியிலும் பைத்தியங்களைப்போல் உலரும் அளவிற்கு இன்றைய முஸ்லிம் தலைமைகள். முஸ்லிம்களின் அறிவுத்தகைமைகளையும் அரசியல் தரத்தையும் மிகவும் கீழ்த்தரமான நிலையில் ஏனைய சமூகங்கள் எடைபோடும் அளவுக்கு இவர்கள் நடந்து கொள்ளும் முறை அரசியலில் இவர்கள் மட்டும் அல்ல ஏனையவற்றிலும் முழு சமூகமும் கேவலப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைமைகள் என்றால் வரப்பிரசாதங்களுக்காக வாலாட்டும் கூட்டம் எனவும் cheap ஆக வாங்கி விடலாம், குறைந்த விலைக்கு விலை போகும் சமுகம் என மற்றவர்களின் நூறு வீத நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பெருமதியற்ற நிலைக்கு முஸ்லிம் சமூகத்தை கீழ் தள்ளியுள்ளது.

எனவே தகுதியற்றவர்களை சமூக பற்றில்லாத அரசியல் வியாபாரிகளை பதவியில் அமர்த்தும் முஸ்லிம் சமூகம் இனியாவது சிந்திக்குமா?

பேருவளை ஹில்மி

இன்று முஸ்லிம் அரசியலில், அரசியல்வாதிகளின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது சமூகத்தின் உரிமைகளையும் தனித்துவத்தையும் பாதுகாப்பது எவ்வாறாயினும், இலங்கை சரித்திர வரலாற்றில் தற்காலத்தில் நடந்தது போன்ற மிக மோசமான துரோகத்தனமான கேவலமான சமூக அரசியல்…

இன்று முஸ்லிம் அரசியலில், அரசியல்வாதிகளின் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கும் போது சமூகத்தின் உரிமைகளையும் தனித்துவத்தையும் பாதுகாப்பது எவ்வாறாயினும், இலங்கை சரித்திர வரலாற்றில் தற்காலத்தில் நடந்தது போன்ற மிக மோசமான துரோகத்தனமான கேவலமான சமூக அரசியல்…