Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முஸ்லிம் சமூகத்தை சீரழிக்கும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 

முஸ்லிம் சமூகத்தை சீரழிக்கும் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் ஜானாஸாக்களை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவோம். குர் ஆன் மதரஸாக்களை தடை செய்வேம். முஸ்லிம் உரிமைகளை தடை செய்வோம் என்று சில இனவாதிகள் சூளுரைக்கும் நிலையிலும், நமது வரப்பிரசாதங்களுக்காக சமூகத்திற்கு துரோகமிழைத்த, முஸ்லிம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட பாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பதை நாம் கண்டோம்.

இந்நிலையில் தாம் செய்த துரோகத்தை மூடி மறைக்க சமூகத்தின் மத்தியில் பல போலியான காரணங்களையும் கதைகளையும் சொல்லி சமூகத்தை ஏமாற்றி வந்ததையும் நாம் அறிவேம். இவர்களின் துரோகத்தை மூடிக்கொள்ள இவர்கள் கைக் கொண்ட முக்கிய விடயம் கொரோனா ஜனாஸா எரிப்பாகும்.

அதாவது அரசாங்கம் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுதிப்போம் எனும் போது, தாம் இதற்காகவே 20 வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினோம் என கூச்சளிடுவதும், அரசு அதை மறுக்கும் போது போன இடம் தெரியாது வாய் பொத்தி நிற்பதும் இவர்களுக்கு ஒரு பிழைப்பாகவே மாறிவிட்டது.

நேற்று பாராளுமன்றத்தில் பிரதமர் கோள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குவேம் என்ற நிலையில், மீண்டும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர்,

“நாம் இதற்காவே 20 க்கு ஆதவு தெரிவித்தோம் மக்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை” என வானம் பிளக்க கூச்சலிட்டதையும் அறிக்கைகள் விட்டதையும் நாம் கண்டோம்.

இந்நிலையில் பிரதம மந்திரி அலுவலகம் இதை மறுத்த நிலையில் இவர்கள் மீண்டும் மூக்கு உடைந்து போய் நிற்பதை காணமுடிகின்றது.

இவர்களின் இவ்வாறான சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகள், இவர்களின் அறிக்கைகளால் ஏனைய சமூகத்தின் மத்தியில் முஸ்லிம் சமூகம் தலைகுனிந்து நிற்க வேண்டியுள்ளது.

கடந்த காலங்களில் மாற்று மத பாராளுமன்ற அங்கத்தவர்களால் இவர்கள் கேலி செய்யப்பட்ட போதிலும் இவர்கள் இன்னும் திருந்தியதாக தெரியவில்லை. சமூகத்தில் உள்ள அனைவரும் மடையர்களாக கருதியே இவர்களின் செயற்பாடு உள்ளது. ஒரு சமூகத்தை அடையாளப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஓருவரின் செயற்பாடுகள் எவ்வளவு தூரம் மறியாதையானதாகவும், அறிவுத்திறன் உள்ள பேச்சுக்களாகவும் அமைய வேண்டும் என்பதை மக்கள் அறிவர்.

தலைமைகளின் செயற்பாடுகளை வைத்தே ஒரு சமூகத்தின் அறிவு மட்டம் அளவீடு செய்யப்படும். இவ்வாறான நிலையில் இவர்களின் சிறு பிள்ளைத்தனமான பொறுப்பற்ற செயற்பாடுகளை சமூகத்தின் நலனையும் மறியாதையும் கருதியாவது இவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தலைமையின் ஆசீர்வாதத்துடனே நாம் ஆதரவளித்தோம் என உறுப்பினர்கள் கூற, நாம் அனுமதி அளிக்கவில்லை என தலைமைகள் கூறிய நாடகம் ஒன்றையும் அண்மையில் நாம் ரசித்தோம். தலைமைக்கு கீழ்படாத சீடர்களா? இதனால் கேவலம் முஸ்லிம் சமூகத்திற்கே.

இவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிகை எடுக்க
தலைவர் கிழக்கு விரைந்தார் என வந்த செய்திக்கு இன்னும் பதில் இல்லை. ஆக ஒட்டு மொத்த சமூத்தையும் ஒட்டு மொத்த தலைவர்களும் சீடர்களும் தொடர்ந்தும் ஏமாற்று வதையே நாம் காண முடிகின்றது.

பேருவளை ஹில்மி

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் ஜானாஸாக்களை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவோம். குர் ஆன் மதரஸாக்களை தடை செய்வேம். முஸ்லிம் உரிமைகளை தடை செய்வோம் என்று சில இனவாதிகள் சூளுரைக்கும் நிலையிலும், நமது…

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும் ஜானாஸாக்களை எரிக்கும் நிலையிலும், முஸ்லிம் தனியார் சட்டத்தை நீக்குவோம். குர் ஆன் மதரஸாக்களை தடை செய்வேம். முஸ்லிம் உரிமைகளை தடை செய்வோம் என்று சில இனவாதிகள் சூளுரைக்கும் நிலையிலும், நமது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *