Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
முஸ்லிம் மக்களே வாருங்கள் எமது வரலாறை பாதுகாப்போம் 

முஸ்லிம் மக்களே வாருங்கள் எமது வரலாறை பாதுகாப்போம்

  • 97

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

புகைப்படம் மாத்தறை நூரானியா மத்ரஸா சுதந்திரம் தின நிகழ்வின் போது எடுக்கப்பட்டது.

நமது இலங்கை நாட்டு வரலாற்றை எடுத்து நோக்கும் போது முஸ்லிம்களின் வரலாறு மிகவும் முக்கியமான இன்றியமையாததாக, நாட்டின் சுதந்திரத்துடன், அரசியலுடன், இன்னும் அபிவிருத்தியுடனும் பின்னிப் பிணைந்ததாக காணப்படுகிறது.

இலங்கை எனும் நாமத்தில் இருந்து முஸ்லிம்களின் வரலாற்றை பிரிக்க முடியாதளவு பின்னிப் பிணைந்ததாக முஸ்லிம்களின் வரலாறு இந் நாட்டில் காணப்படுகிறது. அதாவது உலக வரலாற்றில் மண்ணின் வரலாறும், மனிதகுல வரலாறும், ஆரம்பித்த காலம் முதல், உலகில் தோன்றி மறைந்த பல நூறு மதங்கள், பல ஆயிரம் கொள்கை கோட்பாடுகளின் வரலாறுகள் அனைத்தும் பாதுகாக்கப்படாத போதிலும், சுமாரான ஒரு காலப்பகுதியின் வரலாறுகள் இன்றும் தடயங்களாவும், மேலும் சில வரலாறுகளாகவும், இன்றும் இலங்கையில் காணப்படுகின்றன.  இந்த அடிப்படையில் இஸ்லாமிய வரலாறு எப்போது ஆரம்பிக்கின்றதோ,  அன்று தொடக்கம் முஸ்லிம்களின் வரலாறு இந்த நாட்டு வரலாற்றுடன் பின்னிப்பிணைந்து ஆரம்பிக்கின்றது.

மன்னர்கள் ஆட்சி செய்த காலம் தொடக்கம், அக்கால மன்னர்களால் நபியவர்களுக்கு இலங்கையில் இருந்து அனுப்பப்பட்ட கடிதங்களின் வரலாறுகள் உள்ளன.

அநுராதபுரத்தை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த  அக்கால மன்னர் இரண்டாம் அக்ரபோதி என்பவரால் அனுப்பப்பட்ட கடிதங்களும் இன்றும் இவற்றுக்கு சாட்சி கூறுகின்றன. இலங்கையில்  வியாபார நோக்கத்தில் வந்து இறங்கிய, குடியேறிய, அரேபியர்களுக்கு  இஸ்லாத்தை போதிக்க ஒரு குழுவை அனுப்பி வைக்குமாறு நபியவர்களுக்கு எழுதப்பட்ட  கடிதம் ஒன்றும் மதீனாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதை ஒரு முறை பேராதனை பல்கலைக்கழக  வரலாற்றுப் பேராசிரியர் தயா அமரசேகர என்பவரும்  விரிவுரை ஒன்றின் போது உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும்  மன்னர்களுக்கு பணிவிடை செய்த முஸ்லிம்களின் வரலாறுகள், சில ஊர்களை முஸ்லிம்களின் சேவைகளை மெச்சுவதற்காக, அவர்களை பாராட்டுவதற்காக, நன்றிக்காக முஸ்லிம்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட வரலாறுகள் உள்ளன. உதாரணமாக பேருவளை பகுதியில் மாளிகை சேனை என்று அழைக்கப்படும் கிராமம் இலங்கை முஸ்லிம் வரலாற்றுடன் சம்பந்தப்பட்டதாக வரலாறுகள் சான்று பகர்கின்றன.

மேலும் கடல் பிரயாணத்தில் வியாபார நோக்கத்தில் பயணம் செய்த பதினேழு அரேபியர்கள், கடல் பிரயாணத்தில் நிர்க்கதியான போது கரையை தேடி அலைந்ததாகவும், கரையை கண்ட சந்தோஷத்தில் அரோபிய மொழியில் பர் பர்  (கரை கரை) என கூச்சலிட்டதாகவும். அதன் பெயரே அரேபிய மொழியில் பர்பரீன் (இறங்கு துறை) என்று பெயர் பெற்றதாகவும், இதுவே இன்று சிங்கள மொழியில் இறங்கு துறை  (பே. ருவள) என சிங்கள இலக்கியத்தில்  பே.  என்பது இறங்குதல் ருவள என்பது இறங்கும் இடம் (துறை) என்பதை குறிக்கின்றது. இதற்கான வரலாற்று நூல்கள் இன்றும் காணப்படுகின்றன.  இன்றும் பேருவளையின் பண்டைய கால பெயர் அரேபிய மொழியில் பர்பரீன் (கரை, இறங்கு துறை) என இன்றும்  அழைக்கப்படுகிறது. இவ்வாறு அக்குறனை உட்பட இன்னும் பல ஊர்களின் சரித்திரங்கள் முஸ்லிம்களின் வரலாறோடு பின்னிப் பிணைந்ததாக உள்ளன.

அந்நிய நாட்டு படையெடுப்பின் போது முஸ்லிம்கள் அக்கால மன்னர்களுடன் இருந்து எதிர்ப்புக்களை சந்தித்தமை தன்னுயிரைக் கொடுத்து மன்னர்களை பாதுகாத்தமை போன்ற உண்மையான வரலாறுகள் இன்றும் கதைகளாகவும் காவியங்களாகவும் காணப்படுகின்றன.

மேலும் நபியவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டாக பிளந்ததை தன் கண்களால் கண்ட  இந்தியாவை ஆட்சி செய்த மன்னர் பஸ்கர ரவி வர்மா என்பவர் இதற்கான விளக்கத்தை தேடியலைந்ததாகவும், இதற்கான சரியான விளக்கம் தனக்கு கிடைக்கவில்லை எனவும் இறுதியில் இலங்கை வந்த அந்த வர்த்தக இஸ்லாமிய தூதுக்குழுவிடமே அதற்கான பதில் மன்னருக்கு கிடைத்ததாகவும்,  அந்த இஸ்லாமிய வர்த்தகக் குழு இது எமது நபியவர்கள் காட்டிய அற்புதங்களில் ஒன்று என சரியான விளக்கம் அளித்ததாகவும், அதை கேட்ட மன்னன் உடனே நபியவர்களை சந்திக்க மதீனாவை நோக்கி புறப்பட்டதாகவும் இந்திய வரலாற்று பேராசியர் ஹுஸைன் என்பவர் தனது மாப்பில்ல முஸ்லிம் என்ற நூலில் ஆதாரபூர்வமாக எழுதி வைத்துள்ளார். ஆக இலங்கையில் இருந்த பதினேழு பேர் கொண்ட வர்த்தக குழுவிடம் கேட்டு அறிந்ததன் மூலம் இஸ்லாத்தின் ஆரம்ப காலம் முதல் அல்லது அதற்கும் முற்பட்ட காலம் முதல் இலங்கையில் முஸ்லிம் வரலாறு இருந்துள்ளதாக சான்றுகள் குறிப்பிடுகின்றன.

மேலும் அதைத் தொடர்ந்து வந்த காலத்தில் மன்னர்களின் ஆலோசகர்களாக இருந்த முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு செய்த அர்ப்பணிப்புக்கள், உயிரைக்கூட கொடுத்து மன்னர்களை காப்பாற்றிய வரலாறுகள், நாட்டிற்கு நமது முஸ்லிம் சமூகம் செய்த தியாகங்கள் என நாம் தேடிப்பார்க்கும் போது ஒவ்வொரு ஊரிலும் நாம் வியப்படையும் அளவுக்கு ஒவ்வெரு சரித்திரங்கள் காணப்படுகின்றன.

இத்தோடு நம் நாட்டின் காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்ட கால வரலாறுகளும், இதைத் தொடர்ந்து நம் நாடு அடைந்த சுதந்திரம், சுதந்திரத்திற்காக நமது முஸ்லிம் பெருந்தகைகள் செய்த அர்ப்பணிப்புக்கள், அதை அடுத்து ஆட்சிக்கு வந்த சுதந்திர நாட்டின் அரசாங்கங்கள், அக்கால அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் என  அத்தனையும் பூமியில் புதைந்து கிடக்கும் புதையல்களாக, தேடப்படாத முத்துக்களாக, அகழப்படாத இரத்தினங்களாக நம்மில் புதைந்திருக்கின்றன.

உதாரணத்திற்கு இன்று கொண்டாடப்படும் பொலிஸ் தினம். இதில் நாட்டின் முஸ்லிம்கள் சம்பந்தமாக பெரும் வரலாற்றுச் சரித்திரமே புதைந்து கிடக்கின்றன .

இன்று இதை கொண்டாடும் போது நமது முஸ்லிம் வீரர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்பு, உயிர் தியாகம், அந்நிய நாட்டு ஆதிக்கத்திற்கு எதிராக, நாட்டின் சுதந்திரத்தையும் இந்நாட்டு  மக்களின் சுதந்திர வாழ்கையையும் நாடி, நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியின் எதிரிக்கு எதிராக நீட்டிய முதல் துப்பாக்கியை ஏந்திய  வரலாறு மம்மலே மரிக்கார் என்ற ஒரு முஸ்லிமில் இருந்தே ஆரம்பிக்கின்றது.

அதேவேளை தனக்கு விசுவாசமான தன் நண்பனான சரதியலை தன்னுரை துச்சமாக மதித்து காப்பாற்றிய நம்பிக்கைக்கு பாத்திரமான வரலாறும் நம்மிடமே உள்ளன.

மறுபுறம்  நாட்டின் பொலிஸ் பாதுகாப்புத் துறையில் உயிரிலும் மேலாக உத்தியோகத்தையும்  கடமையையும் சட்டத்தையும் நீதியையும் மதித்து, தன் இனத்தைச் சேர்ந்த  துவான் ஸ்பான் எனும் ஒருவருக்கு எதிராக துப்பாக்கியை நீட்டிய வீரரின் சேவையின் வரலாறு அந்நிய ஆதிக்கமாக இருந்தாலும் ஆட்சிக்கு விசுவாசமான சேவை.  இவரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய இடத்தில் இந்த நாமங்கள் இன்று  திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன.

இலங்கை வரலாற்றில் முக்கியமாக அந்நிய ஆதிக்கத்திற்கு எதிராக முதல் துப்பாக்கியை நீட்டிய  முஸ்லிம் வீரரின் நினைவுகள் மறைக்கப்பட்டாலும்,  இந்த அர்ப்பணிப்பின் வரலாறே இதன் முக்கிய கருப்பொருளாக இன்று பொலிஸ் தினம் கொண்டாடப்படுகின்றது.  இவை போன்று பல நூறு வரலாறுகள் இன் நாட்டில் நம்மில் புதைந்திருக்கின்றன.

1946 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சியில் இலங்கை முதல் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்ட்டபோது இலங்கை முதல் பொலிஸ் அதிகாரியான ரிசர்ட் அலுவிஹர அவர்களால் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ளும் யோசனை முன்வைக்கப்பட்டது. இவரது அலோசனை சுதந்திரத்திற்கு பி்ன்னர் 1953 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு முதலில் பரீட்சார்த்தமாக நான்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டார்கள். இதில் இரண்டாம் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக வெலிகமையைச் சேர்ந்த ஸம்ஸுதீன் பன்கீர் ஜுன்ஜீ என்ற மலாய் தம்பதிகளுக்கு ஒரே மகளாக பிறந்த லய்லா பக்கீர் என்ற வீரப் பெண் இணைந்து நாட்டிற்கான முஸ்லிம்களின் பங்களிப்பைச் செய்தார். இவரே முதலாவது முஸ்லிம் பொலிஸ் பெண் அதிகாரியாவார். அண்மையில் காலஞ்சென்ற இவரது ஜனாஸா, அண்மையில் சில மாதங்களுக்கு முன் தெஹிவளை பெரிய பள்ளி மையவாடியில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது நம்மில் எத்தனை பேருக்குத்தான் தெரியும்?

மேலும் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டமும், அந்நிய ஆதிக்கமாயினும் அரசுக்கு விசுவாசமான சேவையின் வரலாறும் முஸ்லிமில் இருந்தே ஆரம்பிக்கின்றன.

மேலும் இலங்கை வரலாற்றில், நாடு அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர் நோக்கிய போது தனி ஒரு நபராய் நின்று சொந்தப் பணத்தை கொடுத்து நாட்டை காப்பாற்றினார் காலஞ் சென்ற பெருந்தகை நளீம் ஹாஜியார். இதற்கான சாட்சிகள் உள்ளன.

மேலும் இன்று அரசாங்கத்தில் உள்ள, விலை மதிக்க முடியாத பல சொத்துக்கள், பிரபுக்களின் மாளிகைகள், தலைநகரில் காணப்படும் பிரதான பிரேத மயானமான பொரல்ல கனத்தை, சபாநாயகரின் வாசஸ்தளமான மும்தாஜ் மஹால், ஐக்கிய தேசியக் கட்சியின் காரியாலயம் ஸ்ரீ கொத்த,  கொழும்பு நூதன சாலை, மருதானை புகையிரத நிலையம் உட்பட இன்னும் நாம் அறிந்திராத பல பொக்கிஷங்கள்  நமது முன்னோர்களால்  வழங்கப்பட்டவைகளாகும். ஆனால் இவற்றை இன்று நாம்,  இந்த இடம் இவரால் வழங்கப்பட்டது. இந்தமாளிகை அவரால் வழங்கப்பட்டது. என்று நமக்குள் வாய் மொழிதலால் மாத்திரம் N.D.H. அப்துல் கபூர் அதைக் கொடுத்தார். வாப்புச்சி மறைக்கார் இதைக் கொடுத்தார் என பெருமைப்பட்டுக் கொள்கிறோமே தவிர, இதை பாதுகாக்கவே அல்லது நமக்குப் பின் வரும் நமது எதிர்கால சந்ததிக்கு இவை பற்றி அறிய வாய்ப்புக்களை ஏற்படுத்தவே இல்லாமல், நாம் சுயநலவாதிகளாக காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம்.

எனவே நம் முஸ்லிம் உறவுகளே, இவ்வாறான வரலாற்றுக்கு உரிமையுடைய நமது சரித்திரத்தின் முக்கியத்துவத்தை நாம் அறியாத நிலையில், இவற்றின் முக்கியத்துவத்தை அறிந்த சில  சக்திகள் இன்று இவற்றை திட்டமிட்டு சூட்சகமான முறையில் திட்டமிட்டு அழிக்கவும் மறைக்கவும், மறக்கடிக்கவும் முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

இவை அத்தனை நற் பெயர்களும் தமது வரலாறாக நம் நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டும். இவை அத்தனையும் இந்நாட்டில் நமக்கு முஸ்லிம்களுக்கு இலகுவாக, இலவசமாக கிடைத்த இயற்கை சான்றுகள் அல்ல.

நமது மூதாதையர்களின் வியர்வையில் விழைந்த விழைச்சல்கள், முயற்சிகளினால் குளித்த முத்துக்கள், நம்பிக்கையினால் வென்ற நற் சான்றுகள், தியாகங்களுக்காக கிடைத்த  தீர்ப்புக்கள். இவை அத்தனையும் இந்நாட்டில் நமது நிம்மதியான வாழ்கைக்காக நம் பெரியவர்கள் நமக்காக செய்த முதலீடுகள்.

இதன் வரலாறுகளை பாதுகாப்பது நம் மீதும் நம் படித்த சமூகத்தின் மீதும் பதவிகளில் அல்லாஹ் அறிவாளிகளாக அவதரிக்க வைத்த அத்தனை பெயரினதும் தலையாய  கடமையாகும்.

இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்

நம் சமூகத்தில் உள்ள படித்தவர்கள் பேராசிரியர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஓய்வு பெற்றவர்கள், எதிர்கால சமூக, சந்ததிகளின் நலன் கருதி இவற்றை தொகுத்து பாதுகாக்க முன்வர வேண்டும். இதற்காக முஸ்லிம்களின் வரலாற்றுத் தொகுப்பு மையம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலமாக நமது வரலாறுகள் தேடித் தொகுக்கப்பட வேண்டும். அவை நமது வருங்கால சந்ததிகள் அறிய பாதுகாக்கப்பட வேண்டும். இது இவர்களின் தலையாய கடமையாகும். பல ஊர்களில் உள்ள சரித்திரம் அறிந்த மக்களை இதற்காக ஒரு அமைப்பாக ஒன்று சேர்க்கப்பட வேண்டும். கட்சி பேதம், மார்க்க கொள்கை வேறுபாடுகள் அத்தனையையும் தாண்டிய ஒரு தியாக சிந்தனையோடு இவற்றுக்காக முன்வர வேண்டும்.

அத்தோடு வரலாறு அறிந்த நற்குணம் நற்பண்புள்ள நமது சகோதர இனங்களின் விரிவுரையாளர்களின்,  வரலாற்று ஆசிரியர்களின் உரைகளையும் காணொளிகளையும் அவ்வப்போது நாம் சமூக வலைத்தளங்களில் காண்கின்றோம்.

இவர்கள்  நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் வரலாற்று விரிவுரையாளர்களாக கடமை புரிகின்றனர். இவர்களையும் நமது முயற்சியில் ஒன்று சேர்த்து அவர்களின் உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்று இதற்கான ஒரு உழைப்பை முஸ்லிம் சமூகம் செய்ய வேண்டும். இவை அத்தனையும் ஊர் ஊராக சேர்க்கப்பட வேண்டும். இது ஒரு ஒழுங்கமைப்பாக ஒழுங்கு படுத்தப்பட்டு ஆதாரத்துடனான பதிவுகளாக தொகுக்கப்பட்டு பேணிப் பாதுகாக்கப்பட்டு, இந்நாட்டின் நமது எதிர்கால உரிமைக்கான சாட்சியங்களாக பத்திரப்படுத்தி பதுகாக்கப்பட வேண்டும்.  முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் இதற்கான வாய்ப்புக்களையும் இட ஒதுக்கீடுகளையும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்திக் கொடுத்து இதற்கான முயற்சிகளுக்கு முன் வரவேண்டும் .

இன்ஷா அல்லாஹ் இதற்கான ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் அர்ப்பணிப்புக்களையும் வழங்க முன்வரும் உறவுகள் பின்வரும்  தொலைபேசி இலக்கங்களுடன்  தொடர்பு கொள்ளுங்கள்.

இதற்கான ஒருங்கிணைப்புக்களை செய்து உங்கள் அனைவரையும் தொடர்புபடுத்தி ஒன்றுபடுத்தும் முதல் நடவடிக்கையாக நடவடிக்கை  மேற்கொள்ள நம் சகோதரர்கள் தயாராக உள்ளனர் .

இன்ஷா அல்லாஹ் இவற்றில் நமக்கு அல்லாஹ் நன்மையை நாடி இருந்தால் இதற்கான வாய்பையும் வசதியையும் வளங்களையும் வாரி வழங்கி வெற்றியை அளிப்பானாக.

Galhinna
M H M NIYAS
Ex Director
Lanka salt LTD.
Ministery of samurdhi
0777814108
0727566544

பேருவளை ஹில்மி 

புகைப்படம் மாத்தறை நூரானியா மத்ரஸா சுதந்திரம் தின நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. நமது இலங்கை நாட்டு வரலாற்றை எடுத்து நோக்கும் போது முஸ்லிம்களின் வரலாறு மிகவும் முக்கியமான இன்றியமையாததாக, நாட்டின் சுதந்திரத்துடன், அரசியலுடன், இன்னும்…

புகைப்படம் மாத்தறை நூரானியா மத்ரஸா சுதந்திரம் தின நிகழ்வின் போது எடுக்கப்பட்டது. நமது இலங்கை நாட்டு வரலாற்றை எடுத்து நோக்கும் போது முஸ்லிம்களின் வரலாறு மிகவும் முக்கியமான இன்றியமையாததாக, நாட்டின் சுதந்திரத்துடன், அரசியலுடன், இன்னும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *