Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
லீசோவின் காவியம் 

லீசோவின் காவியம்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆசை இல்லை, இது எம் ஆயுள்

யாருமில்லை என்றே உன்னிடம்
உலறுகிறேன் நீயாவது கேட்பாயா!
என் பசியின் ஓலத்தை.

புல்லாங்குழலும் ஒப்புதல் கொண்டது
ஏழ்மையின் வலியை
நானும் உரைக்கிறேன்
உலகிற்கு இது என் காணிக்கையன்றோ!

உலகக் கணவான்கள்
உணரமாட்டார்கள் இதனை
நானும் அவர்களின் வாரிசு என்று,

எந்தன் ஆளுமைகளும்
அழுகையாலே! கரைந்தொழுகுகின்றன
ஆனாலும் இவ்வெந்நீரில் கசிந்த
கர்வமுள்ள பாதங்கள் ஏறெடுத்தும்
கவனிப்பாரில்லை எம்மை இங்கு.

உறவுகள் விரட்டிய பின்னே
இந் நிலமை என்றால்
இதுவும் கொடுமையே!
பிறப்பிலும் இந்நிலமையானதால்
பழகிவிட்டேன் நானும் இதற்கு,

என் தாய் அறிவேனா!
என் தந்தை அறிவேனா!
இவர்கள் இவ்வுலகத்திலா?
ஊற்றெடுத்தவர்கள் என்று.

வானம் தொடும் கட்டிடம்,
உலகையாளும் நவீனம்,
விசித்திரமான புதுமைகள் கொண்டு
இவ்வையகம் நிறைந்தாலும்,

ஒரு ஏழையின் கண்ணீரில்
கணவான்களின் உயர்வு
ங்கு ஊற்றெடுக்கின்றது என்றால்
நாசம் கொண்ட வழியில் தான்
அவர்களின் பயணம் செல்கிறது.

ஆணின் வெற்றியின் பின்னால்
ஒரு பெண்ணும் இல்லை,
பெண்ணின் வெற்றியின் பின்னால்
ஒரு ஆணும் இல்லை.

அவர்களின் வெற்றியின் இரகசியமாக
அவமானமும், கேலிகளும்,
புறக்கணிப்புக்களுமே தான் இருக்கும்,
இவைகளை இயல்பிலேயே
கற்றுக் கொள்பவர்கள்
எம்மைப் போன்ற சிறார்கள் தான்.

யாருமற்ற அநாதை எனக்கு
கடவுள் சொல்லி அனுப்பி வைத்தான்
உனக்காக நால்வரை நான் படைதுள்ளேன்
அவர்களே உன்னை அணைப்பார்கள் என்று.

உன்னைப் போன்ற அநாதையவன்
உன் தோழனாவான்.
ஒட்டிய வயிறுடன் அன்றே
உழைத்து உன்னும் ஒரு ஏழை,
பணம் கண்டே உறவுகளெல்லாம்
ஒதுக்கிய ஒரு ஏமாற்றமடைந்த ஞாணி,
இறைவனுக்காக உனக்கென்றே செலவழிக்கும்
சொற்பத்திலும் சொற்பமானவர்கள்.

இவர்களே தான் இவ் உலகத்தில்
உனக்கான உறவுகள்,
இவர்களிடத்தில் தான் நீ
என் அருளை அதிகம் அதிகம் காண்பாய் என்று.

எக்குலமும் இறைவனிடத்தில் ஒன்றுதானே!
பின்னே எதற்கு சாதி,பேதம் என்று
அவர்களும் சிதறி.
ஒன்றும் அறியாத எம்மையும்
தெருவில் உதறுகிறார்கள்.

உண்மையில் அறிவாலும்,
நெறியாலும் நாதியற்றவர்கள்
இவர்கள் தான்.

ஒன்றை மட்டும் மறவாதீர்கள்
நாளைய தீர்ப்பை மாற்றும்
வலிமையானவர்கள்
ஏழ்மையின் சிகரத்தில் தான்
உதித்தவர்கள் என்று.

உறவற்றவர்கள் அநாதைகள் அன்று,
அன்பின் ஏக்கம் கொண்ட
உறவுள்ளவர்களும் அநாதைகள் தானே!.

ஒரு போராட்டத்தினால்
யுகத்தை மாற்றுவதை விட,
ஏழையின் ஒரு வாய்ப் பசியை போக்கி
தியாகி ஆகுவதே சாலச் சிறப்பன்றோ!.
இதுவே நீதி காக்கும் ஆத்மீக தலைவனின்
வீர தந்திரமன்றோ!.

சிந்திப்போம், சீரமைப்போம்.

P.M.A.ALEESHAN.
SOUTH EASTERN UNIVERSITY OF SRI LANKA .

ஆசை இல்லை, இது எம் ஆயுள் யாருமில்லை என்றே உன்னிடம் உலறுகிறேன் நீயாவது கேட்பாயா! என் பசியின் ஓலத்தை. புல்லாங்குழலும் ஒப்புதல் கொண்டது ஏழ்மையின் வலியை நானும் உரைக்கிறேன் உலகிற்கு இது என் காணிக்கையன்றோ!…

ஆசை இல்லை, இது எம் ஆயுள் யாருமில்லை என்றே உன்னிடம் உலறுகிறேன் நீயாவது கேட்பாயா! என் பசியின் ஓலத்தை. புல்லாங்குழலும் ஒப்புதல் கொண்டது ஏழ்மையின் வலியை நானும் உரைக்கிறேன் உலகிற்கு இது என் காணிக்கையன்றோ!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *