Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வசந்தத் திருநாள் 

வசந்தத் திருநாள்

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இறை அருளை பெற்று
மறை நாமத்தை ஓதி
நெறி தவறாமல் வாழ
வந்துதித்த வசந்தமே
ரமழனே!

கந்தை துணியை கசக்கி
கட்டி
வறுமை நிழலில்
தலை சாய்த்து
பட்டிணியில் வாடி வதங்கி
காலத்தை ஓட்டும் ஏழைகளின்
உள்ளம் உணர்ந்து
உதவி கரம் நீட்டி மகிழ்ந்திட
உதித்த வசந்தமே
ரமழானே!

உன் வருகையிலே,
உள்ளம் குளிர்வித்து,
உன் விடை பெறுதலிலே
உறவுகளை ஒன்று சேர்த்து,
மக்கத்து மாந்தர்களின்
மனங்கவர்ந்த மக்கமா
மண்னை துறந்து
மதீனாவின் மடியினிலே,
அண்ணலாருடன் அவர்கள்
கொண்டாடி மகிழ்ந்த்திட்ட
முதற் திருநாளை நினைவு
கூர்ந்து!

இருக்கும் உடையினில்
நல்லதை அணிந்து,
இறைவன் கொடுத்த
வரத்தை பொருந்தி
மானிட உள்ளத்தில்
சமத்துவத்தை விதைத்து
எம் பொருநாளை
எளிமையின் நிழலில்
கொண்டாடி தீர்க்க
வழிகாட்டியாக வந்துதித்த
வசந்தமே
ரமழானே!

உன்னாலே உள்ளம்
தூய்மையாகியது!
உயர்ந்தவன் தந்த
பெருநாளும்
உயர்வாகியது!

Ramzi Mubarak
Rambuke-Ela

இறை அருளை பெற்று மறை நாமத்தை ஓதி நெறி தவறாமல் வாழ வந்துதித்த வசந்தமே ரமழனே! கந்தை துணியை கசக்கி கட்டி வறுமை நிழலில் தலை சாய்த்து பட்டிணியில் வாடி வதங்கி காலத்தை ஓட்டும்…

இறை அருளை பெற்று மறை நாமத்தை ஓதி நெறி தவறாமல் வாழ வந்துதித்த வசந்தமே ரமழனே! கந்தை துணியை கசக்கி கட்டி வறுமை நிழலில் தலை சாய்த்து பட்டிணியில் வாடி வதங்கி காலத்தை ஓட்டும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *