Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வறுமை எனும் பிடியினிலே 

வறுமை எனும் பிடியினிலே

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பிஞ்ஞாக இருக்கையிலே
பிதாவினை தொலைத்து விட்டு
பித்தான தன் தாயை
பத்திரமாய் பார்த்திடவே
பிறந்ததோ ஓர் பாவை.

அறியாத தன் வயதில்
அடையாத துன்பமில்லை.
அதை சொல்ல இங்கு ஓர்
அழகிய வார்த்தையில்லை…

அநாதையாய் வாழ்வதற்கே
அவதாரமாய் அவதரித்தாளே.
அற்பமான பாரினிலே
அடிமையாய் வாழ்வதற்கு.

பல கோடி ஓட்டைகள்
பரவசமான அரண்மனையில்
மழைகாலம் நடுநடுங்க
மரநிழலே துணையாகும்.

ஒட்டுப் போட்ட தாவணியில்
ஓவியமாய் அவளிருக்க
ஓராயிரம் வார்த்தைகள்
ஓசையின்றி வசை பாடும்.

கல்வி கற்க காகிதமில்லை.
பள்ளி செல்ல பாதணியில்லை.
இருந்தும் கற்கிறாள்
அனுபவம் எனும் பள்ளியில்
வறுமையை பாடமாக.

காலங்கள் சென்றாலும்
காத்திருப்பு நீண்டாலும்
வறுமை எனும் பிடிநிலையோ
விட்ட பாடில்லை அவள் வாழ்வை.

பருந்தாக பறக்கின்றாள்.
புது வசந்தம் தேடி அங்கே
கண்டபாடில்லை இன்னும்
காணாத சொத்தாக

நீளுமா அவள் நாட்கள்
இல்லை தீருமோ
அவள் வாழ்க்கை.
வறுமையின் கோரப்பிடியில்.
வசந்தமற்ற அவள் வாழ்வு.

Shima Harees
Puttalam

பிஞ்ஞாக இருக்கையிலே பிதாவினை தொலைத்து விட்டு பித்தான தன் தாயை பத்திரமாய் பார்த்திடவே பிறந்ததோ ஓர் பாவை. அறியாத தன் வயதில் அடையாத துன்பமில்லை. அதை சொல்ல இங்கு ஓர் அழகிய வார்த்தையில்லை… அநாதையாய்…

பிஞ்ஞாக இருக்கையிலே பிதாவினை தொலைத்து விட்டு பித்தான தன் தாயை பத்திரமாய் பார்த்திடவே பிறந்ததோ ஓர் பாவை. அறியாத தன் வயதில் அடையாத துன்பமில்லை. அதை சொல்ல இங்கு ஓர் அழகிய வார்த்தையில்லை… அநாதையாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *