Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வாக்குரிமை 

வாக்குரிமை

  • 43

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தேர்தல் என்ற தேர்வினிலே
தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து
தன்னுரிமையாய் புள்ளடியிட்டு
துல்லியமாய் புள்ளி வழங்கிடும்
குடிமக்களின் உரிமையிது

நாளைய எம் எதிர்காலம்
கறையில்லா நிறை வாழ்வாகிட
நம் விரல் நுனியதனை
நீலக் கறை கொண்டு நனைத்திடும்
தேர்தலின் அடையாளமிது

எட்டுத் திசைகளிலும்
திட்டுத் திட்டாய் படிந்திருக்கும்
அகலா அரசியல் அழுக்குகளை
துகிலுரித்திடும் ஆயுதமிது

வாழும் தலைமுறையின்
வளமான வருங்காலத்துக்காய்
தாயகம் நல்கிடும்
தாய்மையின் ஓர் அங்கமிது

நாளைய எம் விடியலுக்காய்
நாம் செலுத்தப் போகும் வாக்கு
நயவஞ்சக அரசியல்வாதிகளுக்காய்
நாமிடும் தூக்கு

வாய்மை வலிமை பெற்றால்வாக்குரிமை மதிக்கப்படும்
வேட்பாளர்களின் வாய் வாக்குகளும்
வையகத்தில் நிஜமாகிடும்

வேலியே பயிர் மேயும்
கலியுகமிது….
வாக்கினை விலைபேசும்
வஞ்சகர்களின் நஞ்சம்புகளுக்கு அஞ்சிடாது
உரிமையை உய்திடச் செய்து
உலகெங்கும் வெற்றியை முழங்கிடுவோம்

தழைக்கும் விலைவாசியும்
முளைக்கும் இன முறுகலும்
நிலைக்கா தேசம் வேண்டி
அலையெனத் திரண்டிடுவோம்
ஒற்றை விரல் புரட்சிக்காய்

வாக்குரிமை என்றும்
எம் வாழ்வுரிமை….

ILMA ANEES
SEUSL
2ND YEAR

தேர்தல் என்ற தேர்வினிலே தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து தன்னுரிமையாய் புள்ளடியிட்டு துல்லியமாய் புள்ளி வழங்கிடும் குடிமக்களின் உரிமையிது நாளைய எம் எதிர்காலம் கறையில்லா நிறை வாழ்வாகிட நம் விரல் நுனியதனை நீலக் கறை கொண்டு…

தேர்தல் என்ற தேர்வினிலே தலைசிறந்த தலைமையைத் தேர்ந்து தன்னுரிமையாய் புள்ளடியிட்டு துல்லியமாய் புள்ளி வழங்கிடும் குடிமக்களின் உரிமையிது நாளைய எம் எதிர்காலம் கறையில்லா நிறை வாழ்வாகிட நம் விரல் நுனியதனை நீலக் கறை கொண்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *