விஜயதாஸ ராஜபக்ஷக்கு கோட்டாபய ராஜபக்‌ஷா தொலைபேசி அழைப்பு – அச்சுறுத்தலா?

  • 13

இன்று காலை ஜனாதிபதி தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும், என்றாலும் அது அரச தலைவர்களின் அழைப்பு போல் இருக்கவில்லை அவர் கதைத்த விதம் கீழ்த்தரமானது என விஜேதாஸ ராஜபக்‌ஷா தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (16.04.2021) தெரிவிக்கையில்,

இந்நாட்டில் வழங்கப்படுகின்ற பதவி உயர்வுகளை அவதானிக்கையில்  திருடர்களுக்கு ஊழல் மோசடியாளர்களுக்கும் மாத்திரமே இரண்டு அரசிலும் மதிப்பு உள்ளதாக தெரிகின்றது.

மேலும் நான் நேற்று ஊடகவியாளர் மாநாடொன்றில் கொழும்பு துறை முக நகர சட்டமூலத்தின் ஆபத்தான நிலவரங்கள் பற்றிதௌிவு படுத்தினேன். இந்நிலையில், இன்று காலை ஜனாதிபதி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.

துறைமுக நகரம் தனிநாடக அங்கீகரிக்கும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது – விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், அவர் அரசியல் அனுபவம் குறைந்தவர் என்பது தெரியும். எனவே இது தொடர்பாக சுமுகமானதொரு கலந்துரையாடலை ஏற்படுத்தி நாட்டிற்கு நன்மை பயக்கும் விதத்தில் எவ்வாறு செயற்படுத்தலாம் என ஆலோசனை கேட்பார் என எதிர்பார்த்தேன்.

என்றாலும் அவர் கதைத்த விதம் கீழ்த்தரமானது. அரச தலைவருக்கு பொருத்தமற்ற விதத்தில் ஆவேசமான முறையில் உரையாடினார். எனவே விருப்பமில்லாவிடினும் அவர் பேசிய விதத்திலே நானும் பேச வேண்டியேற்பட்டது. இது கெட்ட விடயம்.

பாராளுமன்ற உறுப்பினர் அடிப்படையில் மக்கள் எதிர்பார்ப்பது நாட்டின் சுபிட்சமாகும். நான் உரையாடியது தவறென நாட்டின் தலைவர் நினைத்தால் நாட்டை சரியான இடத்திற்கு கொண்டு செல்வது எவ்வாறு?

நான் பசில் ராஜபக்ஷா பற்றியும் அவர் ஊழல் மோசடியாளர் என குறிப்பிட்டுள்ளேன். அதனை அவரது பிள்ளைக்கு கூறியதாக தவறாக நினைத்து உரையாடினார். பிள்ளைகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு வாழ்வதற்கு சுபிட்சமான நாட்டை உருவாக்குமாறு கூறினேன்.

ஆனால்  கொழும்பு துறைமுக நகர சட்டத்தின்படி எதிர்காலத்தில் நமது நாட்டு பிள்ளைகளுக்கு வாழ நாடில்லாத நிலமை ஏற்படும்.அ எனவே இது பற்றி ஊடக மாநாட்டில் உரையாடியதற்காக பாராளுமன்ற உறுப்பினரொருவரை கீழ்த்தரமான முறையில் அச்சுறுத்துவது  பயங்கரமான நிலைமையாகும்.

ஜனாதிபதியொருவர் அச்சுறுத்தும்போது எனது உயிர் மற்றும் குடும்பம் உறுப்பினர்களின் உயிர் பற்றி அச்சமுள்ளது. எனவே இதுபற்றி ஊடக கலந்துரையாடலில் தெரிவித்தேன். இது பற்றி பொலிஸுக்கும் அறிவித்துள்ளேன்.

இந்நாட்டு மக்களுக்காக எப்போதும் சேவையாற்றிய நமக்கு இவ்வாறு அரசாங்கம் கவனித்தால், எனது உயிரின் பாதுகாப்பை நாட்டு மக்களுக்கு எடுக்குமாறு கூறுகிறேன்.

இதற்கு முன்னர் கோப் அறிக்கை சமர்பிக்கும்போது, எனது வீட்டுக்கு வந்து, துப்பாக்கிச் சூடு நடாத்திவிட்டுச் சென்றனர். பாராளுமன்றத்தில் சமர்பிக்கும்போது பொலிஸ் அதி விசேட படையால் (STF) எமது வீடு சுற்றிவளைக்கப்பட்டது. மேலும் அக்காலப்பகுதியில் எமது வீட்டுக்கு வரும் அழைப்புகள் இராணுவத்தினால் பதிவு செய்யப்பட்டது.

என்றாலும் நாட்டுக்காக எடுத்துள்ள பொறுப்பை நிறைவேற்ற பொறுமையாக உள்ளேன்.

முழுமையான உரையாடலுக்கு

LNN Staff 

இன்று காலை ஜனாதிபதி தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும், என்றாலும் அது அரச தலைவர்களின் அழைப்பு போல் இருக்கவில்லை அவர் கதைத்த விதம் கீழ்த்தரமானது என விஜேதாஸ ராஜபக்‌ஷா தெரிவித்தார். இது தொடர்பாக…

இன்று காலை ஜனாதிபதி தனக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்ததாகவும், என்றாலும் அது அரச தலைவர்களின் அழைப்பு போல் இருக்கவில்லை அவர் கதைத்த விதம் கீழ்த்தரமானது என விஜேதாஸ ராஜபக்‌ஷா தெரிவித்தார். இது தொடர்பாக…