Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
விடியல் 

விடியல்

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கரு மேகங்கள் வானை சூழ்ந்து வருகின்ற அந்திப் பொழுது அது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரலாம் என்பதன் முன்னறிவிப்பாக எனக்கு தோன்றிற்று. நானோ சிந்தனைகள் விண் தொடர ஒற்றையடிப் பாதையினூடு நடை பயின்று கொண்டிருக்கிறேன். திடீரென கைப் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது, எடுத்துப் படித்தேன் அதில், “பல்கலைக் கழகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படும்” என்றிருந்தது. அப்பொழுதே வந்தது கொரோனா மீது தீராத கொலை வெறி எனக்கு.

நானோ உயர் தரம் எழுதி ஒன்றரை வருடங்கள் தவமிருந்து இந்த வருடமாவது பல்கலைக் கழகம் செல்லலாம், என மனப்பால் குடித்துக் கொண்டிருந்தேன். பின்பு தான் கொரோனா எனும் அணுகுண்டு மெதுவாக கசியத் தொடங்கியது. ஆரம்பத்தில், சீக்கிரம் குணமாகும் என எண்ணிய என் குறுட்டு நம்பிக்கையும் வீண் போயிற்று. வருட முடிவில் தான் அனைத்தும் சீராகும் என்ற ஒரு எண்ணம் எனக்கு.

இது இவ்வாறு இருக்க அயலவர்கள், உறவினர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியே அலுப்புத் தட்டி விட்டது எனக்கு. இது தவிர இடைஇடையே திருமணப் பேச்சுக்களை எடுக்கவும் என் உறவினர்கள் தவறவில்லை. இவர்களையெல்லாம் கடித்துக் குதறி விடும் எண்ணத்தில் தான் நான் நோக்குவேன். மனம் எனும் மரந்தாவும் குரங்கு என் குடும்பத்தினரிடமும் மாறித் தாவுமோ என்ற பீதி வேறு எனக்கு. எது எவ்வாறு இருப்பினும் பாரதி பார்த்த மடமைப் பெண்களைப் பார்க்கும் வாய்ப்புகள் எனக்கும் அவ்வப்போது கிட்டின.

இவ்வாறு இருக்க கையில் பொல்லுடன் தான் பட்டமளிப்பு விழாவிற்கு செல்ல வேண்டி வருமோ என்ற பயம் வேறு. எவ்வாறிருப்பினும் இமைக்க மறுக்கும் என் கண்கள் நிச்சயம் பல்கலைக்கழக கடிதம் கிடைத்தவுடன் சீராகும் என எண்ணுகிறேன். கொரோனா எனும் கொலைகாரியை வென்று நிலமைகள் சீராகி பல்கலைக் கழகம் எனும் புதிய விடியலுக்காக காத்திருக்கிறேன்.

Mishfa Sadhikeen.

கரு மேகங்கள் வானை சூழ்ந்து வருகின்ற அந்திப் பொழுது அது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரலாம் என்பதன் முன்னறிவிப்பாக எனக்கு தோன்றிற்று. நானோ சிந்தனைகள் விண் தொடர ஒற்றையடிப் பாதையினூடு நடை பயின்று…

கரு மேகங்கள் வானை சூழ்ந்து வருகின்ற அந்திப் பொழுது அது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரலாம் என்பதன் முன்னறிவிப்பாக எனக்கு தோன்றிற்று. நானோ சிந்தனைகள் விண் தொடர ஒற்றையடிப் பாதையினூடு நடை பயின்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *