Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வெற்றியின் இரகசியம் 

வெற்றியின் இரகசியம்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அது 1993 ஆம் ஆண்டு,

1992 ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தீர்மானிக்கும் பொறுப்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேர்வின் இறுதிச் சுற்றில் தேவர் மகன் படத்துக்கு இசையமைத்த அப்போதைய இசை உலகின் தனிக்காட்டு ராஜா இளையராஜாவும், ரோஜா திரைப்படத்துக்கு இசையமைத்த புதுமுக இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் சம வோட்டுக்கள் பெற.

யாரிவன்? தனது முதல் படத்திலேயே இளையராஜாவுடன் போட்டி போடும் இளைஞன்? கண்டிப்பாக இவன் வளர வேண்டும் எனும் உயரிய நோக்கத்தில், தனது நெருங்கிய நண்பர், தனது எல்லா திரைப்படங்களையும் இசையால் தூக்கி நிமிர்த்தியவர், அப்போதைய முன்னணி இசையமைப்பாளர் போன்ற அத்தனை அம்சங்களையும் ஒருபுறம் வைத்துவிட்டு ஏ.ஆர். ரஹ்மானை பரிந்துரை செய்தார் பாலுமகேந்திரா.

பின்னர் நடந்தவை அனைத்தும் சரித்திரம். இந்தச் சம்பவம் பல படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

  1. திறமைதான் தொடர்தேர்ச்சியான, நிலைபேறான வெற்றியின் மூலதனம்.
  2. நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, மற்றவர்கள் வளர வேண்டும் என்கிற திறந்த மனது கொண்டவர்கள் அவசியம்.
  3. கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ள ஆழ்ந்த இறைபக்தியும், மிகக் கடினமான உழைப்பும், தற்பெருமையற்ற குணாம்சங்களும், பணிவோடு நடந்து கொள்ளும் பக்குவமும் முக்கியமானவை.

வாய்ப்புள்ள இடங்களில் பாலுமகேந்திரா போன்று மற்றவர்களை உயர்த்துவதில் மகிழ்ச்சி காணும் நபராகவும், வாழ்வின் அனைத்து நிலையிலும் ஏ.ஆர். ரஹ்மான் போன்று இறைபக்தியுடன் கூடிய அசுர உழைப்பும், அதீத பணிவும் கொண்ட நபராகவும் நம்மை தகவமைத்துக் கொண்டால் வையகமும், வாழ்வும் வளம்பெற்று ஒளிரும்.

எப்.எச்.ஏ. ஷிப்லி

அது 1993 ஆம் ஆண்டு, 1992 ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தீர்மானிக்கும் பொறுப்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேர்வின் இறுதிச் சுற்றில் தேவர் மகன் படத்துக்கு இசையமைத்த அப்போதைய இசை…

அது 1993 ஆம் ஆண்டு, 1992 ஆம் ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தீர்மானிக்கும் பொறுப்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் ஒப்படைக்கப்படுகிறது. தேர்வின் இறுதிச் சுற்றில் தேவர் மகன் படத்துக்கு இசையமைத்த அப்போதைய இசை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *