Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட் - Youth Ceylon

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காணாமல் போன பொலிஸ் சார்ஜென்ட்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் எனும் பொலிஸ் அதிகாரி சுகவீனம் காரணமாக கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அன்றைய தினமே அவர் காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து கம்பளை பொலிஸ் நிலையத்தில் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் அவர் கண்டுபிக்கப்பட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, நான்கு நாட்களாக தேடப்பட்டு வரும் தனது தந்தையை மீட்டுத்தருமாறு அவரது மூத்த மகனான இளங்கோவன் அபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோட்டன் ஒஸ் போன் தோட்டத்தை பிறப்பிட்டமாகவும் தலவாக்கலை பூண்டுலோயாவை வசிப்பிடமாகவும் கொண்ட இவரது மனைவி ஒரு ஆசிரியை.

மூன்று பிள்ளைகளின் தந்தையான 56 வயதுடைய செல்லையா இளங்கோவன் கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றிவரும் சிறந்த கரப்பந்தாட்ட வீரருமாவார்.

33 வருடம் பொலிஸ் சேவையில் கடமையாற்றும் இவர், கடந்த ஆரு வருடங்களாக நுவரெலியா பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றி பின்பு இடமாற்றமாகி கொத்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்தார். இவர் மலையக அரசியல்வாதிகளின் பாதுகாவலராகவும் கடமையாற்றியவராவார்.

இவர் கடந்த மாதம் 10 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளார். பின்னர் இவர் உட்பட்ட குடும்பத்தினர் அனைவரும் சுகாதார பரிசோதகர்களினால் 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் மேற்கொண்ட PCR பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடந்த 07 ஆம் திகதி திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 08ஆம் திகதி முற்பகல் 6 மணியளவில் 1990 அவசர அழைப்பு நோயாளர் காவு வண்டியில் கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது மகன் தெரிவிக்கையில்,

10.30 மணிவரை நானும் சின்னம்மாவும் வைத்தியசாலையில் இருந்துவிட்டே வந்தோம் அதன் பின்னர் பிற்பகல் 2.00 மணியளவில் வைத்தியசலையிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பி சென்று விட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

எனது தந்தை வைத்தியசாலையிலிருந்து தப்பியோட அவசியம் இல்லை எனது தந்தையை மீட்டுத்தாருங்கள் என, அவரது மூத்த மகனான இளங்கோவன் அபிநாத் கோட்டுக்கொண்டார்.

சம்பவம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கையில், பொலிஸ் சார்ஜென்ட் இளங்கோவன் நோயுற்ற நிலையில் பயம் காரணமாக நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீடுகளுக்கு சென்றிருக்கலாமென சந்தேகிக்கின்றர்.

இது தொடர்பில், கம்பளை மற்றும் கொத்மலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர். TK

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் எனும் பொலிஸ் அதிகாரி சுகவீனம் காரணமாக கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்றைய…

கொத்மலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்டாக கடமையாற்றி வந்த சுப்பையா இளங்கோவன் எனும் பொலிஸ் அதிகாரி சுகவீனம் காரணமாக கடந்த செப்டெம்பர் 08ஆம் திகதி கம்பளை மாவட்ட வைத்தியசாலையில் உறவினர்களினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அன்றைய…