Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஷஃபான் ரமழானுக்கான தோரணை வாயில் 

ஷஃபான் ரமழானுக்கான தோரணை வாயில்

  • 27

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஷஃபான் மாதம் சிறப்புக்களும் அருள்களும் நிறைந்த மாதமாகும். அதற்குப் பின்னால் வரப்போகும் பாக்கியங்கள் நிறைந்த புனித ரமழான் மாதத்திற்கு நன்மைகளின் தோரணை வாயிலாக அது அமைந்துள்ளது.

ஷஃபான் மாதத்தின் மகிமை

ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஷஃபான் மாதம் முழுதும் நோன்பு வைத்தார்கள் என்று கூறுமளவுக்கு சில சமயம் நோன்பு நோற்பார்கள். அதேபோல் சிலசமயம் நோன்பு நோற்கமாட்டார்கள் எனக் கூறும் அளவுக்கு நோன்பின்றியும் இருப்பார்கள். நபியவர்கள் ரமழானில் மாத்திரம்தான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றிருக்கின்றார்கள். அதனையடுத்து ஷஃபானைத் தவிர வேறு எந்த மாதத்திலும் அவர்கள் அதிக நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை’ (புஹாரி)

இன்னொரு அறிவிப்பில் ‘நபியவர்கள் ஷஃபானின் சிலநாட்கள் தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்று பதிவாகியுள்ளத.(முஸ்லிம்)

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் ஷஃபான் மாதத்தில் நோன்பு வைப்புது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லையே’ எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘ரஜப், ரமழான் ஆகிய இரண்டு மாதங்களுக்கிடையில் (ஷஃபானாகிய) இம்மாதத்தை மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள், அடியார்களது செயல்கள் இறைவனிடம் எடுத்துக் காண்பிக்கப்படும் மாதம் இது. எனவே நான் நோன்பாளியாக இருக்கும் போது எனது செயல்கள் இறைவனிடம் உயர்த்தப் படுவதை நான் விரும்புகிறேன்’ எனக் கூறினார்கள். (நஸாஈ)

இந்த ஹதீஸ் முக்கிய இரண்டு விடயங்களை கற்றுத்தருகின்றது:

  1. நன்மையான விடயங்களை தேடிப் பெறுவதில் நபித்தோழர்களிடம் அலாதியான ஆர்வம் காணப்பட்டது.
  2. மக்கள் மறந்து கவனம் செலுத்தத் தவறும் காலப்பகுதிகளில் அதனை நன்மைகள் கொண்டு உயிர்ப்பிப்பது

விரும்பத்தக்க செயலாகும். அப்படியான சந்தர்ப்பங்களில் செய்யப்படும் வணக்க வழிபாடுகளுக்கு பாரிய கூலியுமுண்டு.

உதாரணமாக சந்தையில் சந்தடிகளுக்கு மத்தியில் திக்ர் செய்வது பொதுவாகவே மக்கள் மறந்துவிடக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகும். அந்த வகையில் யார் சந்தையில் இறை நினைவை சிந்தைக்கு எடுக்கின்றாறோ அவருக்கு உயர்ந்த கூலி கிடைப்பதாக நபிகளார் கூறியுள்ளார்கள். யார் சந்தைக்குள் நுழையும் போது:

لا لا إِلهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لا شَريكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ، يُحْيِي ويُمِيتُ وَهُوَ حَيٌّ لا يَمُوتُ، بِيَدِهِ الخَيْرُ وَهُوَ على كُلّ شَيْءٍ قَدِيرٌ

என்று கூறுகின்றாறோ அவருக்கு அல்லாஹ் ஆயிரமாயிரம் நன்மைகளை எழுதுவான், அவரின் ஆயிரமாயிரம் பாவங்களை மன்னிப்பான், இன்னும் அவருக்கு ஆயிரமாயிரம் அந்தஸ்துக்களை உயர்த்துவான் எனநபி (ஸல்) கூறியதாக உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள்.

மேலும் நபி ( ஸல்) கூறியதாக மஃகல் பின் யஸார் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ‘மக்கள் பொடுபோக்காக விட்டு விடக்கூடிய சீர்கெட்ட காலங்களில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள் என்னை நோக்கி பயணிக்கும் ஹிஜ்ரத் ஆகும்’ (முஸ்லிம்)

எனவே ஷஃபான் மாதத்தை ரமழானுக்குரிய பாதையாக அமைத்துக் கொள்வதற்கு பின்வரும் நடைமுறைப் பயிற்சிகளை கடைப்பிடிப்போம்.

  1. அதிகமாக நோன்புநோற்றல். ஷஃபானில் நோன்பு நோற்பது ரமழான் நோன்புக்கான ஒரு ஆரம்ப பயிற்சியாகவும் ஒத்திகையாகவும் அமையும்.
  2. ஐங்காலத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுவதை பேணிவருதல்.
  3. அல்குர்ஆனை முழுமையாக ஒருமுறை ஓதி முடித்தல்
  4. முஸ்லிம்களின் முதல் கிப்லாவான மஸ்ஜிதுல் அக்ஸாவை ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலிருந்து மீட்டித் தருமாறு அல்லாஹ்விடம் மண்டியிட்டு பிரார்த்தித்தல். ஏனெனில் ஷஃபான் மாதத்தில் தான் முஸ்லிம்களின் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து மஸ்ஜிதுல் ஹராம் நோக்கி மாற்றப்பட்டது. இந்நிலையில் அதன் பரிதாப நிலையை நினைவு கூறுவதற்கு இதுவே பொருத்தமான தருணமாகும்.
  5. இரவுநேரத் தொழுகைகளில் கவனம் செலுத்துதல்.
  6. சண்டை சச்சரவுகளை மறந்து சமாதானமாகுதல். மனிதர்களது செயல்கள் இறைவனிடம் எடுத்துக் காண்பிக்கப்படும் இம்மாத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பையும் அருளையும் பெற விரும்புவோர் குரோதங்களையும் பகைமைகளையும் மறந்து மன்னித்து புது வாழ்வை துவங்க ஷஃபானை சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்ளட்டும்.
  7. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் அனைத்தையும் முற்றுமுழுதாக கடைப்பிடித்தல்.
  8. உலகை ஆட்டிப்டைக்கும் உயிர்க்கொல்லி நோயான கொரோனா பீடையில் இருந்து உலக மக்கள் யாவரையும் பாதுகாக்குமாறும் இந்த சோதனையையும் துன்பத்தையும் முற்றாக அகற்றி விடுமாறும் வல்ல அல்லாஹ்விடம் மன்றாடி பிராத்திப்போம்.

அன்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் யாவருக்கும் புனித ரமழான் வாழ்த்துக்கள்!

முஹம்மத் பகீஹுத்தீன்

ஷஃபான் மாதம் சிறப்புக்களும் அருள்களும் நிறைந்த மாதமாகும். அதற்குப் பின்னால் வரப்போகும் பாக்கியங்கள் நிறைந்த புனித ரமழான் மாதத்திற்கு நன்மைகளின் தோரணை வாயிலாக அது அமைந்துள்ளது. ஷஃபான் மாதத்தின் மகிமை ஆயிஷா (ரழி) அவர்கள்…

ஷஃபான் மாதம் சிறப்புக்களும் அருள்களும் நிறைந்த மாதமாகும். அதற்குப் பின்னால் வரப்போகும் பாக்கியங்கள் நிறைந்த புனித ரமழான் மாதத்திற்கு நன்மைகளின் தோரணை வாயிலாக அது அமைந்துள்ளது. ஷஃபான் மாதத்தின் மகிமை ஆயிஷா (ரழி) அவர்கள்…