Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஸகாத்தை முற்படுத்திக் கொடுத்தல் 

ஸகாத்தை முற்படுத்திக் கொடுத்தல்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொரோனா வைரஸ் இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருவதன் காரணமாக ஊரடங்குச் சட்டம் அரசினால் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரதும் அன்றாட வாழ்வு பாதிப்படைந்திருக்கும் இக்கட்டத்தில் ஸகாத் எனும் இஸ்லாமிய வணக்கம் பெரும் பங்காற்ற முடியும் என்ற கருத்து இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் உரையாடப்பட்டு வருகிறது. இப்பின்னணியில் ஸகாத்துடன் தொடர்பான பல கேள்விகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அவ்ற்றுள் ஒன்றுதான் ஒரு வருடம் பூர்த்தியாக முன் ஸகாத்தை கொடுக்க முடியுமா? என்ற கேள்வியும்.

ஸகாத் கடமையாகுவதன் மிக அடிப்படையான நிபந்தனைகளில் ஒன்று “ஒரு வருடம் பூர்த்தியாதல்” ஆகும். குறிப்பாக கால்நடைகள், பணம், வியாபார பொருட்கள், சேமிப்புக்காக வைத்திருக்கும் நகை போன்றவற்றுக்கு ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “எந்தவொரு செல்வத்துக்கும் ஒரு வருடம் பூர்த்தியாக முன் ஸகாத் கடமையாகாது” (இப்னு மாஜா).

இந்த ஹதீஸை மையமாக வைத்து மாலிகி மத்ஹபினர் ஒரு வருடம் பூர்த்தியாக முன் ஸகாத்தை வழங்க முடியாது எனக் கருதுகின்றனர். சுப்யான் அஸ்-ஸவ்ரி போன்றவர்களும் இக்கருத்தில் உள்ளனர். எனினும் தேவையேற்படும் கட்டத்தில் வருடம் பூர்த்தியாக குறுகிய காலம் இருக்குமாயின் முற்படுத்தி கொடுப்பது தடுக்கப்பட்டதாகவன்றி ‘மக்ரூஹ்’ என்ற கட்டத்தை அடையும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். வருடம் பூர்த்தியாக ஒரு மாத காலப்பிரிவு அல்லது அதனை விட குறைந்த காலப்பிரிவு இருப்பின் ஸகாத்தை முற்படுத்தி கொடுப்பது தடுக்கப்பட்டது எனும் நிலையிலிருந்து வெறுக்கப்பட்டது எனும் நிலைக்கு வந்து விடுகிறது என சுப்யான் அஸ்-ஸவ்ரி கருதுகிறார்.

நியாயமான காரணங்களுக்காக ஸகாத்தை முற்படுத்தி கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு ஹனபி, ஷாபிஈ, ஹன்பலி மத்ஹபைச் சார்ந்த அறிஞர்கள் “முடியும்” எனக் கூறுகின்றனர். அப்பாஸ் (ரழி) தனது ஸகாத்தை வருடம் பூர்த்தியாக முன்னரே எடுத்துக் கொள்ளும்படி நபியவர்களிடம் வேண்ட அவரது வேண்டுதலை நபியவர்களும் நிறைவேற்றினார் என்ற கருத்தில் வரும் ஹதீஸை இவ்வறிஞர்கள் ஆதாரம் காட்டுகின்றனர். இந்த ஹதீஸ் ஹசன் தரம் கொண்டது என ஷெய்க் அல்பானி கருதுகிறார்.

மேற்கூறிய இரு நிலைப்பாடுகளையும் ஆராயும் நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பின்வரும் முடிவுகளுக்கு வருகின்றனர்:

  1. கால்நடைகள், பணம், வியாபார பொருட்கள், சேமிப்புக்காக வைத்திருக்கும் நகை போன்ற பொருட்களுக்கு “ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்க வேண்டும்” என்ற நிபந்தனை பொது விதியாக கருதப்பட்டு சாதாரன, சுமூகமான சூழலில் பின்பற்றப்படும்.
  2. அனர்த்தம், தொற்றுநோய் பரவல் போன்ற அசாதாரன சூழல் தோற்றம் பெற்று பணத்துக்கான “அவசர தேவை” உருவாகுமாயின் அல்லது முற்படுத்தி கொடுப்பது “பெரும் நலன்” ஒன்றை பெற்றுக் கொடுக்குமாயின் ஸகாத்தை முற்படுத்தி எடுப்பது அல்லது கொடுப்பது அனுமதியளிக்கப்படுகிறது.

இவ்விரு முடிவுகளையும் நாம் இன்றைய இலங்கை சூழலில் பிரயோகிப்போமாயின் விதிவிலக்காக தோற்றம்பெற்றிருக்கும் இவ் அசாதாரன சூழலில் முற்படுத்தி கொடுப்பது அனுமதிக்கப்படுவதாக கொள்ளலாம். முஸ்லிம் தலைமை நிறுவனங்கள் இக்கருத்தை மக்கள்மயப்படுத்தி, ஸகாத்தை பேசுபொருளாக்கி அதனை திரட்டுவதில் அவசரமாக ஈடுபடுவதுடன் திரட்டியவற்றை பகிர்ந்தளித்தல் விடயத்தில் பொருளாதார நிபுனர்களுடன் இணைந்து, கலந்துரையாடல்களை மேற்கொண்டு யூசுப் நபியுடைய மிகக் கவனமான திட்டமிடலை ஒத்த திட்டமிடலொன்றை வகுக்க வேண்டியுள்ளது என்ற கருத்தை வலியுறுத்துகிறோம்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்


கொரோனா வைரஸ் இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருவதன் காரணமாக ஊரடங்குச் சட்டம் அரசினால் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரதும் அன்றாட வாழ்வு பாதிப்படைந்திருக்கும் இக்கட்டத்தில் ஸகாத் எனும் இஸ்லாமிய வணக்கம் பெரும் பங்காற்ற…

கொரோனா வைரஸ் இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வருவதன் காரணமாக ஊரடங்குச் சட்டம் அரசினால் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரதும் அன்றாட வாழ்வு பாதிப்படைந்திருக்கும் இக்கட்டத்தில் ஸகாத் எனும் இஸ்லாமிய வணக்கம் பெரும் பங்காற்ற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *