Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் - வௌிவரும் அதிர்ச்சித் தகவல்கள் 

15 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – வௌிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அமில விமலசூரிய
தமிழில் :- எம். எஸ. முஸப்பிர்

உலகில் மனிதர்களாகப் பிறந்த சிலரது நடவடிக்கைகள் மிருகங்களை விடவும் மிக மோசமானதாகும். தனது வயிற்றில் பிறந்த பிள்ளைகளை விற்கும் தாயைப் போன்று தனது இரத்தத்தில் பிறந்த பிள்ளைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் தந்தைமாரும் இந்த பூமியில் வாழ்கின்றார்கள் என்பது இப்போது நன்றாகத் தெரிந்திருக்கின்றது.

கல்கிஸ்ஸவில் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை அவ்வாறான ஒரு சோக நிகழ்வாகும். மலரத் துடித்த மொட்டான 15 வயதுடைய சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, இன்னும் பல மனிதாபிமானமற்றவர்களுக்கு விற்பனை செய்யும் துயர நிலைக்கு அடிப்படையாக இருந்தது அச்சிறுமியின் தந்தையும் தாயுமாகும். கடந்த சில நாட்களாக நாட்டில் பேசுபொருளாக ஆகியிருந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மிருகத்தனமான செயற்பாடு தொடர்பில் கடந்த 7ம் திகதி புதன் கிழமையாகும் போது 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களுள் இரு பெண்களும் அடங்குகின்றனர்.

இதுவரையில் இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் 45 வயதுடைய முஹம்மது அஷ்மலி என்ற மாலைத்தீவு பிரஜை ஒருவரும் அடங்குகிறார். அவர் அந்நாட்டின் முக்கிய பிரமுகராகும். அஷ்மலி கொழும்பு பிரதேச சொகுசுமாடி வீட்டில் 2018ம் ஆண்டிலிருந்து தங்கியுள்ளார். தனது மனைவியுடன் மாணவர் வீசாவில் அஷ்மலி இந்நாட்டின் முன்னணி தனியார் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தார்.

சிறுமியின் கைப்பேசியில் இருந்த இலக்கங்களைத் தொடர்பு கொண்டு விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து கைது செய்யப்பட்ட அஷ்மலி, பல சந்தர்ப்பங்களிலும் லங்கா எட்ஸ் டொட் கொம் என்ற இணையத்தளத்தின் ஊடாக அச்சிறுமியை விலைக்கு வாங்கி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது இருபதாயிரம் ரூபாய் பணத்தைச் செலுத்தி கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலொன்றுக்கு அழைத்துச் சென்றாகும். அஷ்மலி கைது செய்யப்பட்டு கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் அவரது உண்மையான விபரங்களை மாலைதீவின் ஊடகங்கள் வெளியிட்டன. அஷ்மலி மாலைதீவின் முன்னாள் நிதி அமைச்சராவார். அதேபோன்று அவர் மாலைதீவின் முன்னணி தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனமான திராகு நிறுவனத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளதோடு, அந்நாட்டின் தேசிய டெண்டர் சபையின் தலைவராகவும் செயற்பட்ட ஒருவராகும்.

கடந்த காலங்கள் முழுதும் மனிதாபிமானமற்றவர்களால் துவம்சம் செய்யப்பட்ட சிறுமி இவ்வருடத்தில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருந்த மாணவியாகும். மனித மிருகங்களால் துவம்சம் செய்யப்பட்ட இச்சிறுமி தற்போது மருத்துவ சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலரத் துடித்துக் கொண்டிருந்த ஒரு மலரான இச்சிறுமிக்கு நேர்ந்த இவ்வாறான துன்பகரமான சம்பவம் இவ்வாறு விரிகின்றது.

சிறுமியின் தாய் சமிலா பிரியங்கனி. 31 வயதுடைய அத்தாய் தற்போது 3 மாதக் கர்ப்பிணியாகும். தெல்கொட, கந்துபொட பிரதேசத்தைச் சேர்ந்த இவர் முச்சக்கர வண்டிச் சாரதியான நிமல் என்பவரைத் திருமணம் செய்திருந்தார்.

நிமல் அயல் வீட்டுக்காரர் ஒருவருடைய முச்சக்கர வண்டியை வாடகைக்கு எடுத்தே தனது தொழிலை செய்து வந்துள்ளார். சமிலா இச்சிறுமியை 2005ம் ஆண்டு செம்டெம்பர் 24ம் திகதி பிரசவித்துள்ளார்.

சில வருடங்களின் பின்னர் மற்றொரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார். இவ்வாறு காலம் ஓடிக் கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன்னர் நிமல் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தார். அதன் பின்னரே சமிலாவின் குடும்ப வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. அதன் பின்னர் அவர்கள் தமது வதிவிடத்தை மாற்றிக் கொண்டு பியகம பிரதேசத்திற்கு குடி பெயர்ந்துள்ளார்கள். சமிலா ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்ததோடு நிமல் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்ததால் தனது முச்சக்கர வண்டி ஓட்டும் தொழிலையும் இழந்திருந்தார்.

இதனிடையே அவர்களது குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக சமிலா, தனது கணவர், பிள்ளைகளை கை விட்டுவிட்டு மற்றவர்களின் உதவியை நாடிச் செல்லத் தொடங்கினார். அதே நேரம் நிமலும் தனது இரண்டு குழந்தைகளுடன் அப்பிரதேசத்தில் அமைந்துள்ள ரம்புட்டான் தோட்டம் ஒன்றில் வேலைக்குச் சென்றார். வீட்டைவிட்டுச் சென்ற சமிலாவை கணவரும், பிள்ளைகளும் சென்று அழைத்துக் கொண்டு வந்தாலும் சமிலா மீண்டும் மீண்டும் வீட்டை விட்டுச் சென்றாள். இவ்வாறு சமிலா பல சந்தர்ப்பங்களிலும் வீட்டை விட்டுச் சென்றிருந்தாள். ஒருநாள் ரம்புட்டான் தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டில் இருந்த நிமல், கடும் போதையில் இருந்த போது தனது மகளையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். அதுவே அச்சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உள்ளான முதல் சந்தர்ப்பமாகும். அந்நேரம் சமிலாவும் தவறான வழியில் சுற்றித்திரிந்ததால் பொலிஸாரிடம் சிக்கியிருந்தாள்.

இவ்வாறு காலம் கடந்து சென்ற போது ஆறு வருடங்களுக்கு முன்னர் சமிலாவுக்கு மொரட்டுவை, லக்ஷபதி பிரதேசத்தைச் சேர்ந்த ரஜீவ் ஜயநாத் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். சமிலா அனுபவித்து வரும் அனைத்து துயரங்களையும் ரஜீவிடம் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் நாடு முழுவதிலும் சுற்றித்திரிந்து மகிழ்ச்சியுடன் வாழத் தொடங்கினர். தானும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டு தனக்கும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளதாக ரஜீவ் சமிலாவிடம் கூறியுள்ளார். “சமிலா நாமிருவரும் ஒன்றாக வாழ்வோம். நீ உன் இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு என் வீட்டுக்கு வா. எனது இரு பிள்ளைகளுடனும் சந்தோஷமாக வாழ்வோம்.” என்றான் அவன். தான் வாழ்ந்து கொண்டிருந்த மோசமான வாழ்விலிருந்து தன்னையும், பிள்ளைகளையும் மீட்பதற்கு கடவுள் அனுப்பிய வரமாக ரஜீவைப் பார்த்த சமிலா, ரஜீவின் யோசனைக்கு இணங்கினாள். சொகுசான வாழ்க்கை வாழும் ஆசையில் சமிலா தனது இரு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு ரஜீவின் லக்ஷபதி பிரதேச வீட்டுக்குச் சென்றுள்ளார். என்றாலும் ரஜீவின் உண்மை முகத்தைக் காண்பதற்கு சமிலாவுக்கு நீண்டநாள் எடுக்கவில்லை. அவன் தவறான சிந்தையுடையவன் என்பதையும், தான் மீண்டும் படுமோசமான ஒருவர் வெட்டிய குழியில் வீழ்ந்து விட்டதையும் சமிலாவுக்கு அறிந்த போது எல்லாமே நடந்து முடிந்து போயிருந்தது.

ரஜீவ் வசித்து வந்த லக்ஷபதி பிரதேச வீடும் ஒரு வாடகை வீடாகும். அந்நேரம் ரஜீவும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தான். அவனது இரு பிள்ளைகளும் இரு மனைவிகளுக்குப் பிறந்தவர்களாகும். ரஜீவின் ஒரு மனைவி அந்நேரம் டுபாயில் பணியாற்றிக் கொண்டிருந்தாள் சமிலாவின் இரு பிள்ளைகளுடன் நான்கு பிள்ளைகளையும் பராமரித்துக் கொண்டு சமிலாவையும் பார்த்துக் கொள்வதற்கு போதிய பணம் இல்லாதததால் ரஜீவ், எப்படியோ மனிதர்களின் உடற் தேவைகளுக்காக விற்பதற்கு சமிலாவை இணங்க வைத்தான். அவளுக்கும் அது புதிய தொழிலாகத் தெரியவில்லை.

நாட்டில் முதலாவது கொரோனா அலை ஆரம்பமாவதற்கு முன்னர் டுபாயிலிருந்த ரஜீவின் மனைவியும் நாட்டுக்கு வந்து, லக்ஷபதி பிரதேச வீட்டிலேயே வசித்துள்ளார். ஒருநாள் ரஜீவ் கடும் போதையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டில் டுபாயிலிருந்து வந்த மனைவியோ, சமிலாவோ இருக்கவில்லை. அப்போது கடும் போதையிலிருந்த ரஜீவ் சமிலாவின் மகளான அந்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி மீண்டும் அச்சிறுமியை படுகுழியில் தள்ளியுள்ளான்.

இந்நிலையில் லக்ஷபதி பிரதேச வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களினால் விடுக்கப்பட்ட பல்வேறு அழுத்தங்களின் காரணமாக ரஜீவ் அவ்வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதன் பின்னரே அவர்கள் கல்கிஸ்ஸ பிரதேசத்திற்கு சென்றுள்ளனர். கல்கிஸ்ஸ புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள மாடி வீட்டை 80 ஆயிரம் ரூபாய் மாத வாடகைக்குப் பெற்று அங்கு அவர்கள் குடியமர்ந்துள்ளார்கள். அந்நேரம் பல்வேறு தராதரத்தில் உள்ளவர்களுக்கு சமிலாவை விற்று ரஜீவ் கைநிறைய பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தான். அன்றாடம் போதுமானளவுக்கு போதைப்பொருள் பாவித்து அதிக போதையில் வீட்டுக்கு வரும் ரஜீவ், அவனது டுபாயிலிருந்து வந்த மனைவியின் முன்பாகவே சமிலாவின் மகளான சிறுமியை ஈவு இரக்கம் இல்லாமல் துவம்சம் செய்து வந்தான்.

இவ்வாறு காலம் செல்ல ஒரு நாள் சமிலா அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த நடுத்தர வயது தொழிலதிபருக்கு விற்கப்பட்டிருந்தாள். அந்நபர் சமிலாவுடன் ஓரளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அந்நேரம் சமிலா தனது பரிதாபகரமான வாழ்க்கையினைப் பற்றி அந்த தொழிலதிபரிடம் ஒன்று விடாமல் கூறியிருக்கின்றாள். “சமிலா உன்னை என் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.” “ஐயோ சேர் அது எப்படி முடியும்? ரஜீவ் நம்மிருவரையும் கொன்று விடுவான்”. “இல்லை நான் ரஜீவிடம் உன்னை வாங்கிக் கொள்கிறேன்.” “அது ஒருபோதும் நடக்காது சேர் நான் அவனிடமிருந்து சென்று விட்டால் அவனால் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ முடியும்? இனி அந்த சின்னஞ்சிறுசுகள் பட்டினியால் வாடுவார்களே” இவ்வாறு அவர்களது உரையாடல் சென்றிருக்கின்றது.

எப்படியோ அந்த தொழிலதிபர் ரஜீவுடன் இது தொடர்பில் பேசியுள்ளார். ரஜீவ் முதலில் இதற்கு விரும்பாத போதும் அதிகளவு பணம் தருவதாக அந்த தொழிலதிபர் கூறியதையடுத்து ரஜீவ் சமிலாவை 21 இலட்சத்திற்கு விற்றுள்ளான். அதன் பின்னர் தனது இரு பிள்ளைகளையும் கல்கிஸ்ஸ வீட்டில் ரஜீவிடம் விட்டுவிட்டு சமிலா அந்த தொழிலதிபருடன் அவிசாவளை வீட்டுக்குச் சென்றுள்ளார். எப்படியோ இந்தக் கொடுக்கல் வாங்கலில் ரஜீவுக்கு கிடைத்தது 18 இலட்சமேயாகும். சமிலா அண்மையில் கைது செய்யப்பட்ட போது அவள் அவிசாவளை தொழிலதிபரின் வீட்டில் வசித்து வந்ததோடு, தொழிலதிபரினால் 3 மாதக் கர்ப்பிணியாக இருந்ததும் தெரிய வந்துள்ளது.

சமிலாவை விற்ற பணம் கிடைத்ததும் ரஜீவ் தனது சொகுசான வாழ்க்கையை மேலும் உயர்த்துவதற்காக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளான். சமிலாவும் தனது பிள்ளைகளின் செலவுகளுக்காக சில மாதங்கள் ஒரு தொகை பணத்தை அனுப்பியுள்ளார். எனினும் அது மூன்று மாதத்துடன் நின்று போனது. ரஜீவின் போதைப்பொருள் பாவனையும், தனது விளையாட்டுத்தனமாக வாழ்க்கையின் காரணமாக சமிலாவை விற்று பெற்றுக் கொண்ட பணமும் சில மாதங்களிலேயே கரைந்து போனமைக்கான காரணம் இவ்வாறான பாவகரச் செயல்களின் மூலம் கிடைக்கும் பணம் ஒரு போதும் தங்கிநிற்காது என்பதனாலாகும்.

பணப் பிரச்சினை தோன்றிய போது சில நாட்கள் ரஜீவுக்கு மாத்திரமின்றி பிள்ளைகள் நால்வருக்கும் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நேரத்தில் ரஜீவுக்கு பணம் சம்பாதிப்பதற்கு இருந்த ஒரே சொத்து சமிலாவின் 15 வயது மகளாகும். பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட அச்சிறுமி இவ்வாறு கூறியிருந்தார்,

“அந்நாளில் ரஜீவ் மாமாவுக்கும் சாப்பிட ஒன்றுமிருக்கவில்லை. எமக்கும் சாப்பாடில்லை இவ்வாறான நிலையில்தான் ஒருநாள் அப்படியென்றால் நானும் அம்மா செய்த தொழிலைச் செய்கிறேன் என ரஜீவ் மாமாவிடம் கூறினேன்” தனது தாய் தன்னை மனிதர்களுக்கு விற்று கொண்டு வரும் கட்டுக் கட்டான பணத்தை தான் தனது கண்களால் பார்த்ததாகவும் அச்சிறுமி பொலிஸாரிடம் மேலும் கூறியுள்ளார். என்றாலும் அவள் இளம் வயது சிறுமியாகும். அவளது விருப்பமோ, விருப்பமின்மையோ அவசியமில்லை. இளம் வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தவோ அல்லது மனித மோசடிகளில் ஈடுபடுத்தவோ எவருக்கும் சட்டத்தில் அனுமதியில்லை. இதைப் பற்றி ரஜீவ் கணக் கெடுக்கவேயில்லை. அவன் இச்சிறுமியை விற்பதற்கு முயன்றான். ரஜீவ் இச்சிறுமியை முதன் முதலில் விற்றது மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த சாதாரண ஒரு வியாபாரிக்கு ஐயாயிரம் ரூபாவுக்காகும். பின்னர் நாட்டில் கொரோனா தொற்று நிலை ஏற்பட்டு பயணத்தடை பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தான் பாலித ரஜீவைச் சந்தித்துள்ளான். பாலித சில காலமாகவே ரஜீவின் பெண்களை விற்கும் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ரஜீவின் நண்பனாகும்.

“ரஜீவ் அண்ணா என் நண்பர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு இண்டர்நெட் வேலைகள் தெரியும்.  நாம் அவளைப் பற்றி இணையத்தளங்களில் விளம்பரம் போடுவோம். அப்புறம் பிஸ்னஸ் சூடு பிடிக்கும்”

இதனடிப்படையில் ரஜீவ் சிறுமியை விற்பனை செய்வதற்கு சில இணையத்தளங்கள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிறுமியின் புகைப்படங்களுடன் தொலைபேசி இலக்கங்களையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்தான். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்கள் வந்து குவியத்தொடங்கியுள்ளன. குறுகிய காலத்திற்குள் அச்சிறுமியைப் பலருக்கு விற்றுள்ள ரஜீவ், பாலித உள்ளிட்டவர்களின் பணத்தை அள்ளிக் கொண்டிருந்துள்ளார்கள். என்றாலும் அச்சிறுமிக்கு பணத்தை நிர்வகிப்பதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை. இணையத்தளத்தின் ஊடாக சிறுமியை விலைக்கு வாங்குபவர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திற்குச் சிறுமியை அழைத்துச் சென்று ஒப்படைப்பதற்கும் சிலர் இணைந்திருந்தார்கள்.

காலம் கடந்து கொண்டிருந்தது. கல்கிஸ்ஸவில் ரஜீவின் இடம் மிகவும் பிரபலமாகியிருந்தது. ஒருநாள் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலிப் பெரேராவுக்கு ரஜீவின் பிஸ்னஸ் தொடர்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் அவ்வப்போது ரஜீவின் வீட்டுக்கு அண்மையில் வசிப்போரும் அங்கு நடக்கும் ஒழுக்கக்கேடான செயற்பாடுகளைக் கண்டு பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியிருந்தனர்.

இது தொடர்பான அனைத்து விபரங்களையும் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் கல்கிஸ்ஸ பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான கமல் புஷ்பகுமாரவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து வாடிக்கையாளரைப் போன்று வேடமிட்ட ஒருவரை பொலிஸார் ரஜீவின் வீட்டுக்கு அனுப்பி அவ்வீட்டை கடந்த 7ம் திகதி புதன்கிழமை இரவு முற்றுகையிட்டனர். அதன் போது ரஜீவ் கைது செய்யப்பட்டதோடு விளக்கமறியலில் வைக்கப்பட்டான். சிறுமி பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு அச்சிறுமியின் கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

சிறுமியினால் தெரிவிக்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் அச்சிறுமியின் கைபேசியிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் இச்சிறுமி வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டமை போன்றன பாரியளவிலான மோசடிகளாக பொலிஸாருக்கு தெரிய வந்தது.

இதன் விசாரணைகள் உயர் பொலிஸ் அதிகா ரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் கல்கிஸ்ஸ பொலிஸாரால், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருமதி தர்ஷிகா குமாரியின் உத்தரவில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொகுஹெட்டி கேயின் தலைமையில் அப்பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் சமரசேகர உள்ளிட்ட தரப்பினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த விசாரணைகளின் போது கடந்த 30ம் திகதியாகும் போது இச்சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் பணத்திற்கு விற்பனை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடையே சிறுமியின் தந்தை, தாய், சிறுமியை விற்பனை செய்த ரஜீவ், கோடீஸ்வர வியாபாரிகள், பௌத்த துறவி ஒருவர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் அடங்கியிருந்தனர். கிரிபத்கொடை பிரதேசத்தில் அமைந்துள் விகாரையின் தேரர் ஒருவரான குறித்த பௌத்த துறவி இச்சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்.

அதே போன்று கைது செய்யப்பட்‌டுள்ள பொலனறுவை பிரதேச கோடீஸ்‌ வர வர்த்தகர்‌, அரசியல்வாதி எனக்‌கூறிக்‌ கொண்டு இச்சிறுமியை ரஜீவ்‌ மற்றும்‌ பாலித ஆகியோரிடமிருந்து, மூன்று இலட்சம்‌ ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்‌. இந்தளவு பெரும்‌ தொகை விலை பேசப்பட்டது தனக்கு ஒரு கன்னிப்‌ பெண்‌ வேண்டும்‌ என குறித்த கோடீஸ்வர வியாபாறி கேட்டதனாலாகும்‌. பின்னர்‌ இச்சிறுமி ஒரு கன்னிப்‌ பெண்‌ எனக்‌ காட்டுவதற்கு ரஜீவ்‌ உள்ளிட்ட தரப்பினர்‌ போலி வைத்‌தியர்‌ ஒருவரிடம்‌ பெற்றுக்‌ கொண்ட போலி வைத்திய சான்றிதழையும்‌ அந்த கோடீஸ்வர வர்த்தகருக்கு காட்டியிருப்பதாகவும்‌ தெரிய வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின்‌ போது கடந்த முதலாம்‌ திகதியாகும்‌ போது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய விசாரணைகளில்‌ சிக்கியவர்களுள்‌ மிஹிந்தலை பிரதேசசபையின்‌ உப தலைவரான லலித்‌ எதிரிசிங்க என்பவரும்‌ அடங்குகிறார்‌. இவர்‌ கடந்த காலத்தில்‌ அரசியல்‌ செயற்பாடுகளுக்காக கொழும்புக்கு வந்திருந்த சந்தர்ப்பத்தில்‌ இணையத்தளத்தில்‌ வெளியான விளம்பரத்தைப்‌ பார்த்து இச்சிறுமியை 20 ஆயிரம்‌ ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார்‌. பின்னர்‌ அவர்‌ இச்சிறுமியை கொள்ளுப்பிட்டி யில்‌ அமைந்துள்ள ஹோட்டல்‌ ஒன்‌றிற்கு அழைத்துச்‌ சென்றுள்ளார்‌.

இதனிடையே இந்தக்‌ குற்றச்‌ செயலின்‌ தீவிரத்தன்மையின்‌ பிரகாரம்‌ விசாரணைகளை மேலும்‌ விரிவுபடுத்துவதற்காக பாலிஸ்‌ குற்‌றவியல்‌ விசாரணை திணைக்களத்‌தையும்‌ இணைத்துக்‌ கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர்‌ சந்தன விக்ரமரத்ன ஆலோசனை வழங்கியிருந்‌தார்‌.

இதனடிப்படையில்‌ பத்தாயிரம்‌ரூபாய்‌ முதல்‌ இருபதாயிரம்‌, முப்பதாயிரம்‌ ரூபாய்க்கு உட்பட்ட தொகைக்கு சிறுமியை விலைக்கு வாங்கிய அனேகமானோரிடம்‌ சி.ஐ.டியின்‌ கணினி விசாரணைப்‌ பிரிவினர்‌ மேற்கொண்ட விசாரணைகளின்‌ போது சிறுமியின்‌ ஆபாசப்‌ படங்களை இணையத்‌ தளத்‌தில்‌ பதிவிட்டு அச்சிறுமியை விற்பனை செய்வதற்குப்‌ பயன்படுத்தப்பட்ட ஐந்து
இணையத்தளங்கள்‌ எதாடர்பான தகவல்களையும்‌ விசாரணை அதிகாரிகள்‌ பெற்றுக்‌ கொண்டனர்‌.

இதன்‌ போது lankadads.com என்ற இணையத்தளத்தை நடாத்திச்‌ சென்ற பாணந்துறையைச்‌ சேர்ந்த துமிந்த சம்பத்‌ என்பரும்‌, அந்த இணையத்தயத்தின்‌ நிதிப்‌ பொறுப்பாளராகச்‌ செயற்‌பட்ட பண்டாரகம பிரதேசத்தைச்‌ சேர்ந்த தனுஷ்க கௌசல்ய என்பரும்‌ கைது செய்யப்பட்டுள்ளனர்‌. இதனிடையே இச்சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்‌திய சம்பவம்‌ தொடர்பில்‌ கடந்த 6ஆம் திகதி அதிகாலை வரையில்‌ கைது செய்‌யப்பட்டிருந்த 33வதும்‌, 34வதுமான நபர்களாக கைது செய்யப்பட்டிருந்தவர்களாக, சிறுமியின்‌ கைபேசியில்‌ “டொக்டர்‌ திமுது” என பதியப்பட்டிருந்த இந்திக திமுத்து த சில்வா என்ற வைத்‌தியரும்‌, 38 வயதுடைய தனுஷ்க புஷ்பகுமார என்பவரும்‌ இச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கும்‌ அழைத்துச்‌ என்ற கிரிவத்துடுவ பிரதேசத்தைச்‌ சேர்ந்த முச்சக்கர வண்டிச்‌ சாரதியுமாகும்‌.

குறித்த வைத்தியர்‌ பண்டாரகம பிரதேசத்தைச்‌ சேர்ந்த 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின்‌ தந்தையாகும்‌. கடற்படையின்‌ லெப்டினன்ட்‌ கொமாண்‌டரான அந்த வைத்தியர்‌ கடற்படையின்‌ வெலிசரை வைத்தியசாலைக்குப்‌ புறம்‌பாக ஜயவர்தனபுர மற்றும்‌ கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைகளிலும்‌ பணியாற்றிய வைத்தியராகும்‌. அவர்‌ இருதய நோய்‌ தொடர்பான விசேட வைத்திய நிபுணருக்கான கற்கையினை மேற்கொண்டவருமாகும்‌. இவ்வைத்தியர்‌ இச்சிறுமியை இரு தடவைகள்‌ முப்பதாயிரம்‌ ரூபாய்‌ பணம்‌ கொடுத்து வாங்கியிருக்‌கின்றார்‌. இவர்‌ ஒரு தடவை இச்சிறுமியை விலைக்கு வாங்கிக்‌ கொண்டு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி ப்ளாஸாவுக்கு. அருகில்‌ தனது காரில்‌ ஏற்றிக்‌ காண்டு கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில்‌ அமைந்‌துள்ள ஹோட்டலுக்கு அழைத்துச்‌ சென்‌றுள்ளார்‌.

சிறுமியை வல்லுறவுக்கு உட்பட்‌திமை மற்றும்‌ இணையத்தளத்தின்‌ ஊடாக பாலியல்‌ தொழிலாளியாக விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்‌டுக்களின்‌ கீழ்‌ இன்னும்‌ சிலரைக்‌ கைது செய்ய உள்ளதாக பொலிஸ்‌ ஊடகப்‌ பேச்சாளர்‌ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்‌ அஜித்‌ ரோஹன தெரிவித்தார்‌. இவர்களிடையே அரசியல்வாதிகள்‌, தொழிலதிபர்கள்‌, பிரமுகர்கள்‌ உட்பட பொலிஸ்‌ அதிகாரிகளும்‌ அடங்குவதாவும்‌ தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமிமைய பாலியல்‌ துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அனைவரையும்‌ தராதரம்‌ பாராது கைது எய்து அவர்களுக்கு எதிராகச்‌ சட்டத்தை நடைமுறைப்‌படுத்தியமை தொடர்பில்‌ அனைவரையும்‌ பாராட்ட வேண்டும்‌.

அதே போன்று இவ்வாறான இழிவான, படுமோசமான செயல்கள்‌ சமூகத்தில்‌ இடம்‌பெற்றுக்‌ கொண்டிருக்கின்றன என்பதுதான்‌ நிஜமாகும்‌. சிறுவர்‌ துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்களும்‌ முடிந்த எல்லா சந்தர்ப்பங்‌களிலும்‌ சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தகவல்களை வழங்க வேண்டியது கடமையாகும்‌.

அதேபோன்று சிறுவர்‌ துஷ்பிரயோகங்களுடன்‌ தொடர்புடைய இணையத்தளங்கள்‌ தொடர்பில்‌ உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது சம்பந்தப்பட்ட அனைவரினதும்‌ பொறுப்பாகும்‌ என்பதையும்‌ குறிப்பிட வேண்டும்‌.

அமில விமலசூரிய தமிழில் :- எம். எஸ. முஸப்பிர் உலகில் மனிதர்களாகப் பிறந்த சிலரது நடவடிக்கைகள் மிருகங்களை விடவும் மிக மோசமானதாகும். தனது வயிற்றில் பிறந்த பிள்ளைகளை விற்கும் தாயைப் போன்று தனது இரத்தத்தில்…

அமில விமலசூரிய தமிழில் :- எம். எஸ. முஸப்பிர் உலகில் மனிதர்களாகப் பிறந்த சிலரது நடவடிக்கைகள் மிருகங்களை விடவும் மிக மோசமானதாகும். தனது வயிற்றில் பிறந்த பிள்ளைகளை விற்கும் தாயைப் போன்று தனது இரத்தத்தில்…