Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
24 வருட சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவையில் தீர்வு - ஏற்க மறுக்கும் ஆசிரியர் சங்கம் - Youth Ceylon

24 வருட சம்பள முரண்பாட்டுக்கு அமைச்சரவையில் தீர்வு – ஏற்க மறுக்கும் ஆசிரியர் சங்கம்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம்

ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அதுவரையில் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதத்தில் கடமையில் ஈடுபடும் ஆசிரியர், அதிபர்களுக்கு ரூ. 5,000 விசேட கொடுப்பனவை வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

அமைச்சரவை உப குழுவின் முன்மொழிவிற்கு அமைய, (30) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

‘அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப செயற்குழு அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் 33 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.

  • அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை கொள்கை ரீதியாக அங்கீகரித்தல்
  • ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை வரைவிட்ட சேவையாக 2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடல்
  • அமைச்சரவை உப செயற்குழு மூலம் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சம்பளத் திருத்தங்கள், 2022 வரவ செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
  • 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000 ரூபா விசேட கொடுப்பனவு செலுத்துதல்
  • உப செயற்குழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சர்

ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோசகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை மூடிய சேவையாக (Closed Service) மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் 2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000 ரூபா விசேட கொடுப்பனவு செலுத்த இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இங்கு விளக்கமளித்தார்.

43 இலட்சம் மாணவர் சமூகத்தினதும் எதிர்கால சந்ததியினதும் எதிர்காலம் குறித்து சிந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட உபகுழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அதிபர்-ஆசிரியர் சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல்’ தொடர்பாக ஆராய்ந்து அமைச்சரவைக்கு பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு, அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களின் 33 தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு கீழ்வரும் தீர்மானங்களை எட்டியுள்ளது.

அமைச்சரவை உபசெயற்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகரித்துள்ளது. ஆசிரியர் சேவை, ஆசிரியர் ஆலோகர் சேவை மற்றும் அதிபர் சேவைகள் போன்றவற்றை மூடிய சேவையாக (Closed Service )2021 நவம்பர் மாதம் 20 திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவை உப செயற்குழு மூலம் அதிபர்-, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட சம்பளத் திருத்தங்கள், 2022 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

கொரோனா தொற்றினால் பாரிய பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையிலும் 2021 செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் தமது கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 5,000 ரூபா விசேட கொடுப்பனவு செலுத்தவும் உப செயற்குழுவின் இதர யோசனைகள் மாகாண சபைகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் இணைந்து கல்வி அமைச்சின் மூலம் 06 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தமது கடமைகளை மாணவர் சமூகத்திற்காக தடையின்றி முன்னெடுப்பார்கள் என அரசு எதிர்பார்க்கிறது.

சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பது பல்வேறு அரசுகளில் பேசப்பட்டாலும் எமது அரசு எதிர்வரும் 04 வருட காலத்தினுள் கட்டம் கட்டமாக இதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கும்.

இந்த முடிவுகளை செயற்படுத்த தேவையான நிதியை நிதி அமைச்சு ஒதுக்கும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரதமரின் ஆசிர்வாதத்துடனும் அமைச்சர்களின் ஏகோபித்த ஆதரவுடனும் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்றார்.

அமைச்சரவை தீர்மானத்தை ஆசிரியர் சங்கம் நிராகரிப்பு

அமைச்சரவை முன்மொழிந்த 5000 ரூபாய் இடைக்கால கொடுப்பனவை தாம் ஏற்றுக்கொள்ளபோவதில்லை எனவும் தமது கோரிக்கையான சுபோதினி பரிந்துரையை வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலேயே நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமெனவும் அதுவரையில் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசு தீர்மானித்திருப்பது எம்மை ஏமாற்றும் செயல்.

இது ஒரு பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. எனவே நாம் அமைச்சரவையின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளபோவதில்லை. இதனை முழுமையாக நிராகரிக்கின்றோம். எமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என்றார். LNN Staff

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை…

அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் ஆசிரியர், அதிபர் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் நவம்பரில் முன்வைக்கவுள்ள 2022 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் மூலம் கட்டம் கட்டமாக தீர்வு வழங்க அமைச்சரவை…