Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜயந்த கெட்டகொட இராஜினாமா – ஜுலை 08ஆம் திகதி பசில் பாராளுமன்றம் பிரவேசம் 

ஜயந்த கெட்டகொட இராஜினாமா – ஜுலை 08ஆம் திகதி பசில் பாராளுமன்றம் பிரவேசம்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06.07.2021) எழுத்துமூலம் அறிவித்தார்.

அதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட அவர்கள் 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும் கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைய வழி வகுக்க ஜயந்த கெட்டகொட ராஜினாமா செய்ததாக பொதுஜன பெரமுனா பொதுச் செயலாளர் சாகரா கரியவாசம் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதுடன், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் நிதி இராஜாங்க அமைச்சுக்களை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி, மற்றும் நகர மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் இவரின் அமைச்சுக்குக் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (08.07.2021) தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள இவர், அன்றைய தினமே அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்பாரென்று அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக பதவி வகித்த இவரின், தற்போதைய அரசியல் வருகை, பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06.07.2021) எழுத்துமூலம்…

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06.07.2021) எழுத்துமூலம்…