Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டல் வெளியீடு 

பாடசாலைகளுக்கான சுகாதார வழிகாட்டல் வெளியீடு

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை உறுப்பினர் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் ஒன்றின் மூலம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறித்த வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

  1. கொவிட் தொற்று தொடர்பான அறிகுறிகள் இனங்காணப்படும் தொற்றாளரை அல்லது சந்தேகத்திற்குரிய நபரை ஏனையோரிடமிருந்து அகற்றி பாடசாலையின் நோயாளர் அறை அல்லது தனிமைப்படுத்திய அறையொன்றில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  2. குறித்த அறை உரிய காற்றோட்டம் மிக்காக இருக்க வேண்ம். குறித்த மாணவர் அல்லது ஊழியர் முகக் கவசம் அணிந்திருப்பது அவசியம். அவர்கள் பரிவுடனும், அன்புடனும் நடாத்தப்பட வேண்டும்.
  3. மாணவர்/ மாணவியாக இருந்தால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்குத் தெரியப்படுத்தி, சாத்தியமாகுமாயின், அவர்களை பாடசாலைக்கு அழைத்தல்
  4. நோய் அறிகுறியுள்ள மாணவரை அல்லது ஊழியரை சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அல்லது பொதுச் சுகாதார அதிகாரி (PHI) உடன் தொடர்பு கொள்ளுதல்.
  5. சந்தேகிக்கப்படும் COVID-19 தொற்றாளர் தொடர்பான, பாடசாலை கட்டமைப்பில் முகாமைத்துவம் செய்யும் வகையிலான விளக்கப்படத்தை MOH பின்பற்ற வேண்டும்.
  6. அறிகுறிகள் உள்ள தொற்றாளருக்கு கொவிட்-19 தொடர்பான ரெபிட் அன்டிஜன் சோதனையை, அப்பகுதியின் MOH மூலம் ஏற்பாடு செய்தல் அல்லது பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்குரிய நபரை ரெபிட் அன்டிஜன் சோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லல்.
  7. மாணவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அவர் எப்போதும் பெற்றோர்/ பாதுகாவலர்/ ஆசிரியருடன் இருக்க வேண்டும்.

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை உறுப்பினர் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம்…

பாடசாலைகளில் கொவிட் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் அல்லது படசாலை உறுப்பினர் தொடர்பில் நடந்து கொள்ள வேண்டிய வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. மாகாண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள சுற்று நிருபம்…