தல்கஸ்பிடியவில் இரத்ததானமுகாம்

அரனாயக தல்கஸ்பிடியவில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்று இன்று சனிக்கிழமை 2021.10.16 தல்கஸ்பிடிய முஸ்லிம் மஹாவித்தியாலயத்தில் நடைபெற்றது. தல்கஸ்பிடிய தாஜ்மஹால் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்இரத்ததான முகாமிற்கு இனமத பேதமின்றி பெருந்திரளான ஊர்மக்கள் கலந்துகொண்டு இந்நற்பணியில் இணைந்துகொண்டமை உண்மையில் பாராட்டத்தக்கது. உதிரம் கொடுத்து உயிர்காக்கும் நல்உள்ளங்களுக்கு தாஜ்மகால் நலன்புரிச்சங்கம் மரக்கன்றை பரிசாக வழங்கி பூமி காக்கும் பணியிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. பின்த் அமீன்

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி

ஏறாவூர் பகுதியில் 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்துக்கு அரசாங்க நிதி குழு அனுமதி இந்நாட்டுக்கு பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை கொண்டுவரக்கூடிய 400 ஏக்கர் பரப்பில் புதிய விசேட துணி உற்பத்தி வலயத்தை அமைக்க கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாபா தலைமையில் கடந்த 11 ஆம் திகதி முற்பகல் இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க செயல்நுணுக்க …