2013 முதல் எரியும் முஸ்லிம்களின் வீடுகளும், உடல்களும் – சர்வதேச மன்னிப்பு சபை

இலங்கையில் 2013 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியான பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. இது சிறுபான்மை குழுவை வெளிப்படையாக குறிவைக்கும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (18.10.2021) வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. எரியும் வீடுகள் முதல் எரியும் உடல்கள் வரை இலங்கையில் முஸ்லிம் துன்புறுத்தல், பாகுபாடு மற்றும் வன்முறை, தேசியவாதத்தின் மத்தியில் 2013 முதல் இலங்கையில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வின் …