எனது ஆட்சி தோல்வி என்றால் பழையவர்களை தேட வேண்டாம் புதியவர்களை கொண்டு வரவும் – ஜனாதிபதி

“கனவுகளுக்கு உயிரூட்டும் நிகழ்காலம்” எனும் தொனிப்பொருளில் 2021க்கான தேசிய விஞ்ஞான தினம் கொண்டாடப்பட்டது. நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் மனோபாவத்தைத் தான் எதிர்பார்க்கவில்லை என இங்கு உரையாற்றும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாடு திறக்கப்பட்டு புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அனைத்துச் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போராட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் காரணமாக மீண்டும் கொவிட் தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. …