இறைக்கருவூற்றில் இருந்து.
ஆலமரவிழுதுகளாய்
அதன் ஒவ்வொரு
திரைக்குப் பின்னும்
மறைந்த செவ்வெறும்புகளாய்
தீராத அறிவுப்பசியைத்
தணிக்க
ஓரிரு நாளிகைகள்
அறிவுக்கலாசாலை
நிழலில் தொடரும்
மாமிசப்பிண்டத்தை வருடி
உண்ணும் உயிர் வளர்ந்து
பெருத்துச் சிரிக்கும்
சில வசந்த காலங்ளிலும்
சிறகடிக்கும் பட்டாம் பூச்சின்
வர்ணஜாலங்கள் பூக்க
இதமான தென்றலும்
உடலை வருடிச்செல்லும்
இறையருளின் துமிகள்
உடலை உறுத்தும்
தித்திக்கும் உன்னத
தருணங்கள்
நிலவின் ஒளியும்
விலைக்கு வாங்கி விற்று
நட்சத்திர ஒளியைத் தேடும்
மின்மினிகள் பல
கதிரவனின் கற்றைனில்
பட்டுத்தெறிக்கும் சிதறல்களாய்
மணவானின் புள்ளிகளைக்
கண்ட நயனங்களும் உண்டோ?
உறகக் கண்களுடன்
குட்டித்தூக்கம் போட்டுக்கிடக்கும்
வியர்வை வாடையாய்
வீசும் சுயநலத்தோடு
கருமேகத்தில் பளிச்சிடும்
ஒளிக்கீற்று
மனக்கிடங்கிலிருந்து கட்டவிழும்
ரகசியமொழியை விளங்கி
தனிமையிலும் உற்ற துணையாய்
அத்தியந்தமாய் ஆத்மார்த்தமாய்
காதோரமாய் கணதினான
பாடங்களைச் கிள்ளை மொழியில்
சொல்லித் தந்து
சொல்லி கண்களை நனைக்கும்
அவ்வுன்னத உறவு
எதுவெனத் தேடுகிறாயா ?
அவன் தான் நித்திய ஜீவனாய்
அனைத்தையும் தன்
அறிவால் சூழ்ந்த நிகரற்றவன்