அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 08

  • 60

நடந்தது எதுவும் புரியாமல் அலைஸ் ரியூகியை மெல்ல அழைத்தாள்.

“ரியூகி…..!!!”

“மன்னிச்சிடுங்க இதை தவிர வேற வழி… தெரியல்ல…”

என்று அவன் சொன்னதும் என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அவனை நன்றி உணர்வோடு பார்த்த அதே சமயம் வெட்கமாகவும் இருந்தது. அலைஸ் அங்கிருந்த ஆடைகளை எடுத்து கொண்டு சென்று விட ரியூகியும் குளித்து முடித்து விட்டு அவளுக்கு முன்னமே மாஸ்டர் கிட்ட வந்து நடந்த விடயங்களை சொல்லி கொண்டிருந்தான். அவளுக்கு பழக்கமில்லாத ஆடைகள் என்பதால் அதிக நேரம் எடுத்து கொண்ட அலைஸ் அவற்றை அணிந்து கொண்டு அங்கே வந்த போது,

“இது உங்களுக்கு உண்மையிலேயே பொருத்தமாக இருக்கிறது ” என்றார் ஷா.

அப்போது தான் அவளை திரும்பி பார்த்த ரியூகிக்கு இமை வெட்டாமல் அப்படியே அவளை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது.

“அடச்சே முட்டாள் அது நம்ம பிரின்சஸ் டா”

என்று தனக்கு தானே சொல்லி கொண்டு சுதாரிக்க அவள் அவனது மேலாடையை திருப்பி கொடுத்து நன்றி சொன்னாள்.

“ரியூகி என்ன நடந்தது என்று சொன்னான். உங்களுக்கு இது போன்ற ஆபத்துக்கள் உங்களை பின்தொடர்ந்தே தீரும். ஆனா கவலை படாதீர்கள். இவங்க உங்களுக்கு பாதுகாப்பாக இருப்பாங்க.” என்றார்.

மாஸ்டர் ஷா மூவரையும் அவருக்கு முன்னாடி உட்கார வைத்தார்

“இளவரசி… நாங்க முன்னாடி சொன்னது போலவே. நீங்கள் சாதாரண பெண் கிடையாது. உங்களுக்கு என்று தனித்துவமான சக்திகள் இருக்கு. அதெல்லாம் அதற்குரிய நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். உங்க அப்பா அம்மாவை இப்போ பார்க்க முடியாது. அதுக்கு ஒரு தகுந்த காரணமும் இருக்கு.”

“அது என்னது மாஸ்டர்… உண்மையை சொல்லணும் என்றால் எனக்கு என்னோட அப்பா அம்மாவை பார்க்க ரொம்பவே ஆசையா இருக்கு.” என்றாள் அலைஸ்.

“என்னதான் ஆசை இருந்தாலும்… அது இப்போது கூடாது. இளவரசி… அவங்க இன்னும் கொஞ்சம் பொறுமையா இருக்கட்டும் நீங்க உங்களோட மூணு சகோதரர்களையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம் இது”

“ஆனா அவங்கள நான் பார்த்ததே இல்லையே அப்படி இருக்கும் போது எப்படி என்னால அவங்கள கண்டுபிடிக்க முடியும்?” என்று கேட்டாள்.

“கிழக்கு திசையில் உங்க அக்கா கோரின் இருக்காங்க அங்கிருந்து தெற்கில் நயோமி இருக்கிறாங்க அதோட மேற்கில் உங்க அண்ணன் நாகடோ இருக்கிறார். உங்க திறமைகளே உங்களுக்கு வழிகாட்டி இதுதான் வரைபடம்.”

என்று அதை விரித்த போது, வடக்கு திசையில் சிவப்பு நிற புள்ளடியை கண்டு இவர்கள்.

“எதுக்காக உங்க வரைபடத்தில் வடக்கு பக்கத்துக்கு புள்ளடி போட்டிருக்கீங்க..”

“அட ஆமா மறந்துட்டேன் ரொம்ப ஜாக்கிரதை.. அந்த பகுதியில் நிழல் தேவதைகளும், டிராகன்களும் இன்னமும் வசித்து வருவதால் உங்களுக்கு ரொம்பவே ஆபத்து இருக்கு. அது எல்லாத்தையும் நீங்க ஜாக்கிரதை யாகபார்த்து கொள்ள வேண்டும். விளையாட்டு தனமாக இருக்க வேண்டாம். அடுத்த சூரிய கிரகணத்துக்குள் நீங்க அரண்மனைக்கு திரும்பிடனும்.” என்றார்.

அப்போது கியோன்,

“ஒரு வேளை மாஸ்டர்.. எங்களுக்கு அந்த நேரத்துக்குள்ள வர முடியாது போய்ட்டா…”

“அதுக்கப்பறம் நம்ம தலையெழுத்த மாற்ற யாராலும் முடியாது..”என்றார்.

“இதுக்கு நீ கேட்காமலே இருந்திருக்கலாம்..” என்றான் ரியூகி.

தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு மூவரும் பயணத்துக்கு ஆயத்தமானார்கள். மாஸ்டர் ஷாவிடம் இருந்து விடைபெற்று கொண்டு குதிரைகளையும் வரவழைத்து அதில் ஏறி கொண்டு சென்றனர். சற்று தூரம் சென்றதும் கியோன்.

“ஏய் உங்க யாருக்கும் பசிக்கலியா?”என்று கேட்டான்.

“இப்போதானே டா சாப்பிட்டு வெளியானோம். அதுக்குள்ள”

“ஸாரி…”

“விடு ரியூகி… இங்க எங்கயாவது இருந்து சாப்பிடிட்டே போவோம்.. எனக்கும் ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு.” என்றாள்.

“அப்போ சரி அலைஸ்..”

“பொண்ணு பசிக்குது என்றதும் பாரேன் ஒடனே ஓகே சொல்லிட்டான்.” என்று முணுமுணுத்து கொண்டே கியோன் குதிரையை விட்டு இறங்கினான். அங்கிருந்த ஆலமர நிழலில் குதிரைகளை கட்டிவைத்து விட்டு இளைப்பாறினார்கள்.

தொடரும்…….
ALF. Sanfara.

நடந்தது எதுவும் புரியாமல் அலைஸ் ரியூகியை மெல்ல அழைத்தாள். “ரியூகி…..!!!” “மன்னிச்சிடுங்க இதை தவிர வேற வழி… தெரியல்ல…” என்று அவன் சொன்னதும் என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அவனை நன்றி…

நடந்தது எதுவும் புரியாமல் அலைஸ் ரியூகியை மெல்ல அழைத்தாள். “ரியூகி…..!!!” “மன்னிச்சிடுங்க இதை தவிர வேற வழி… தெரியல்ல…” என்று அவன் சொன்னதும் என்ன நடந்திருக்கும் என்பதை அவளால் யூகிக்க முடிந்தது. அவனை நன்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *