அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 24

  • 9

“பிரின்ஸஸ் கோரின்… இந்த பழங்களை பாருங்க.” என்றாள் சோஃபி.

“வேண்டாம், இன்னிக்கி ராத்திரியே கெட்டுப்போய்டும். அதை எடு.” என்று வேறொரு பழக்கூடையை காட்டினாள்.

கியோன் ஒரு ஜோடி தோடுகளை கொண்டுவந்து,

“இது நல்லா இருக்கா?” என்று கேட்டான்.

“உன் மூஞ்சி மாதிரியே இருக்கு.” என்றாள் சோஃபி. அவன் ஏமாந்து வேறொரு தோடு வாங்க சென்றபின் சோஃபி விழுந்து விழுந்து சிரித்தாள்.

“அவன் உனக்காக என்னென்ன பண்ணுவான் என்னு டெஸ்ட் பண்ணி பாக்கிறே… இருந்தாலும் இது ரொம்ப அதிகம் சோஃபி.”

அங்காடிகள் நெருக்கத்தில் முப்பது அடி இடைவெளியில் ரியூகியும் அலைஸும் கண்டுகொண்டனர்.

“ரியூகி!!!”

“என்ன சொன்னே?”

என சின் கே கேட்க ரியூகியை நோக்கி ஓடினாள் அலைஸ். ஆனால் அப்போது சோஃபியை கொள்ளைக்காரர்கள் பிடித்து கொள்ள கோரின் அவர்களுடன் சண்டையிட்டாள்.

கியோன் ஒருவனை தாக்க மற்றவன் கத்தி முனையில் சோஃபி. சந்தைக்கலவரத்தில் என்ன நடக்கிறது என்று புரியாமல் சின் கே தானும் உதவி செய்ய முயன்ற போது அலைஸ் வானை நோக்கி கை உயர்த்த தேனீக்கள் கூட்டம் வந்து கொள்ளையர்களை பதம் பார்த்தது. சின் கேவுக்கு ஒன்றும் புரியவில்லை. அலைஸ் மயக்கம் போட்டு விழ, சந்தைக்கு வந்தவர்கள் ஆங்காங்கு கலைந்தோட சின் கே அவளை தூக்கி கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டான்.

“பிரின்ஸஸ் கோரின்! நான் அலைஸை இங்கே பார்த்தேன்.”

“யாரு அலைஸா! எங்க?”

“இங்க தான் இங்கே” அவன் எண்ணம் அலைஸை தூக்கி கொண்டு போன சின் கேவை எண்ணியது.

“அவன் யாரு… யாரா இருப்பான். அவனால் அலைஸுக்கு ஏதும் ஆபத்தா இருக்குமா… இதுக்கு முன்னாடி அவனை எங்கேயோ பார்த்து இருக்கேனே… எங்க?” என்றெல்லாம் எண்ணியது.

“வருத்தப்படாதே ரியூகி.. வரணும் என்னு நினைச்சி இருந்தா அவ எப்பயோ வந்திருப்பா… இன்னும் அதுக்கான நேரம் வரல.” என்று சோஃபி சமாதானம் சொல்ல ரியூகி அதை ஏற்றுக்கொண்டான்.

*********************************

சின் கே வீடு. மயக்கம் தெளிந்து கண்விழித்தாள் அலைஸ்.

“ஓஹ்… தேனீக்களின் ராணி எழும்பிவிட்டீர்கள் போல இந்தாங்க சூடு ஆறுவதற்கு முன்பு குடிச்சிடுங்க.” என்று ஏதோ ஒரு பானத்தை நீட்டினான் .அவள் அதை அருந்தி கொண்டிருக்கும் போது சின் கே அவளிடம்,

“அலைஸ்.. உன்கிட்ட முக்கியமான ஒரு சில கேள்விகளை நான் கேக்க போறேன். முன்னரை போல தயங்காமல் எனக்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று கேட்டான்.

“யார் நீ?”

“ரியூகி யாரு?” என்று அவன் கேட்க அதிர்ந்து நின்றாள் அலைஸ்.

தொடரும்……
ALF. Sanfara.

“பிரின்ஸஸ் கோரின்… இந்த பழங்களை பாருங்க.” என்றாள் சோஃபி. “வேண்டாம், இன்னிக்கி ராத்திரியே கெட்டுப்போய்டும். அதை எடு.” என்று வேறொரு பழக்கூடையை காட்டினாள். கியோன் ஒரு ஜோடி தோடுகளை கொண்டுவந்து, “இது நல்லா இருக்கா?”…

“பிரின்ஸஸ் கோரின்… இந்த பழங்களை பாருங்க.” என்றாள் சோஃபி. “வேண்டாம், இன்னிக்கி ராத்திரியே கெட்டுப்போய்டும். அதை எடு.” என்று வேறொரு பழக்கூடையை காட்டினாள். கியோன் ஒரு ஜோடி தோடுகளை கொண்டுவந்து, “இது நல்லா இருக்கா?”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *