அலீஸியா. (டிராகன்களும், நிழல் தேவதைகளும்.) பாகம்: 25

  • 14

“நான்! நான்! அலீஸியா. பிரின்ஸஸ் அலீஸியா…”

என்றதும் சின் கே எழுந்து நின்றான். உடனே அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்து நடந்த அனைத்து விடயங்களையும் சொன்னாள். அவள் ரியூகியை காதலித்ததும் அவன் அதற்கு மறுப்பு சொன்னதும் உட்பட எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த சின் கே கோபத்தில்,

“அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா உங்களை காயப்படுத்தி இருப்பான். அவனை..”

“பொறுமையா இரு சின் கே தப்பு என் மேல தானே நானா ஆசைப்பட்டு கேட்டா எப்படி.. என்னையும் யாருக்கும் பிடிக்கணுமே!” என்று சோகமாக சொன்னாள்.

உடனே சின் கே அவளை அணைத்து கொண்டாள். அவளும் உணர்ச்சி அற்றுப்போனாள். அவளுடைய கைகளும் ஆறுதலுக்காக அவனை தழுவின. சற்று நேரம் கழித்து சின் கே அவளிடம்,

“நாம இங்க இருக்குறதும் ரொம்ப ஆபத்து. இந்நேரம் ஷாடோவ் ஏஞ்செல்ஸ்க்கு நீ இங்க இருக்கும் விஷயம் தெரிஞ்சி இருக்கும். அதனால் அவர்கள் எப்போ வேணும் என்றாலும் நம்மள அட்டாக் பண்ணலாம்.”

“இப்போ நாம என்ன பண்ணுறது?”

“நாம ரொனின் வோரி என்கிற ஊருக்கு போகலாம். அங்க ஹெல்ப் பண்ண நிறைய பேர் இருக்காங்க.” என்றான்.

“அது தெற்கு நோக்கி செல்லும் ஊரா?”

“ஆமா”

“அங்க தான் ரியூகி என்னோட அக்கா கூட போய் இருப்பான்.” என்று அவள் சொல்ல முகம் மாறிய சின் கே,

“அவன் பெயரை சொல்லாதே! அருவருப்பாக இருக்கு.” என்றான்.

“அடக்கடவுளே! நாம சொன்ன விஷயங்களை வைத்து ரியூகியை இப்படி வெறுக்கிறானே. இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல்லியே.” என எண்ணினாள்.

அடுத்து பளிச் என்ற வெண்மையில் ஒரு குதிரையை கொண்டு வந்து அதில் தேவையான பொருட்களை ஏற்றி வைத்து கொண்டு அவளை அழைத்தான். ரியூகிக்கு எப்போதும் கறுப்பு நிற குதிரை மீது சவாரி செய்யவே பிடிக்கும் அதை எண்ணிக்கொண்டு இருக்கையில் சின் கே.

“சீக்கிரம் ஏறு” என்று சொல்ல அவனுடன் பயணத்தை ஆரம்பித்தாள்.

“நாம எதுக்கு இப்போ அவங்க போற இடத்துக்கே போறோம்?” என்று கேட்டாள் அவள்.

“அவங்களுக்கு முன்னாடி நயோமியை நாம கண்டுபிடிச்சிடலாம்.”

“ஆனா கோரின் அவங்க கூட தானே இருக்கா.”

“நாம உங்க அண்ணனையும் கண்டுபிடிச்சதும் அவங்களாவே இங்க வந்துடுவங்க.” என்றான்.

“ஐடியா நல்லா தான் இருக்கு.. ஆனா..”

“இந்த ஆனா ஊனா கதையே வேணா..”

“சரி சரி”

***********************************

“பிரின்ஸஸ் அலீஸியா பத்தி என்ன நினைக்கிறீங்க?” என கேட்டான் ரியூகி,

“அவ எப்படியும் நம்ம கூட வந்து சேர்ந்திடுவா அது தான் விதி.” என்றாள் கோரின்.

“உங்களுக்கு விதி பற்றி முன்னாடியே தெரியும் இல்லியா?”

“எல்லாம் தெரியாது. சில விஷயங்களை மட்டும் உணர முடியும். பல விஷயங்களை வெளில சொல்ல முடியாது. உதாரணமாக சிலரோட மரணம்.” என்றவுடன் நிறுத்தி கொண்டாள்.

**************************

ரொனின் வோரி ஊரின் அழகான பெண்ணொருத்தி சந்தைக்கு சென்று ரோஜா செடி ஒன்றை வாங்குகிறாள். அதை வீட்டுக்கு எடுத்து சென்று அவளது வலது உள்ளங்கையை மூடி திறக்க அதில் இருந்து நீர் பொழிகிறது. அதை பார்த்து ரசித்து கொண்டே வீட்டுக்குள் நுழைகிறாள். சமையலுக்கு வேண்டிய ஏற்பாடுகளை ஆடி பாடி கொண்டே செய்கிறாள். அதேபோன்று இடது கையால் தீயை வரவழைக்கிறாள். அவள் தான் பிரின்ஸஸ் நயோமி.

தொடரும்……
ALF. Sanfara.

“நான்! நான்! அலீஸியா. பிரின்ஸஸ் அலீஸியா…” என்றதும் சின் கே எழுந்து நின்றான். உடனே அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்து நடந்த அனைத்து விடயங்களையும் சொன்னாள். அவள் ரியூகியை காதலித்ததும் அவன்…

“நான்! நான்! அலீஸியா. பிரின்ஸஸ் அலீஸியா…” என்றதும் சின் கே எழுந்து நின்றான். உடனே அவன் கையை பிடித்து இழுத்து உட்கார வைத்து நடந்த அனைத்து விடயங்களையும் சொன்னாள். அவள் ரியூகியை காதலித்ததும் அவன்…