அழிந்து போன காலம்

[products]

தாயின் கருவறையில் உறங்கி நிமிடங்கள்
நிலவை காட்டி தாய் உணவு வந்த தருனங்கள்
தந்தை மார்பில்  தலை சாய்த்து உறங்கிய நொடிகள்

நண்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து உப்பு இல்லாமல்
சோறு சமைத்து கூட்டாஞ்சோறு உண்ட நாட்கள்
தட்டி தள்ளாடி முதல் முறையாய் தாயைப் பிரிந்து
ஆசிரியர் எனும் தாயின் அரவணைப்பு சென்ற  நாள்

வகுப்பறையில் நண்பர்கள் ஒன்று கூடி  சேட்டை செய்தா தருணங்கள்
முதல் முறையாய்  தோழிகளுடன் கதைபேச பயந்த நொடிகள்
பாடசாலைப் புத்தகத்தின் நடுவில்  மயிலிறகு வளர்த்தா நாட்கள்

பயந்து பயந்து முதன் முறையாய்
என்னவளை பார்த்து கண்ணடித்தா நிமிடங்கள்
கோபத்துடன் அவள் பார்த்த  பார்வை

ஒன்றய் இருக்கும் நண்பர்கள் போட்ட சண்டைகள்
பாடசாலை விட்டுப் பிரியும்போது வடித்த கண்ணீர்
என்னவள் கைபிடித்த நடந்த நொடிகள்
சில்லென்ற சிரிப்போடு வாழ்ந்த நாட்கள்

கூட்டுக்குடும்பம் ஒன்றாய் இருந்த தருணங்கள்
முகமறியா நண்பர்கள்
முகம் பாக்க நீண்ட தூரம் செய்த பயணங்கள்
கடிதம் எழுதி பதில் வரும் வரை காத்திருந்தா நாட்கள்

சகோதரியுடன் செல்ல சன்டை போட்ட தருணங்கள்
வாழ்வில் அழிந்துபோன காலங்கள்

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்