நித்யா… அத்தியாயம் -14

  • 36

ஓடி வந்தவள் வினோத்தினருகே வந்து,

”என்ன சொல்றீங்க…? கார்த்… உயிரோடயா..?”

வார்த்தைகள் கூட திக்கித் திக்கி வெளிவந்தன. அவளை ஒரு பார்வை பார்த்து சிரித்தவன்,

”ஆமா…. கார்த்திக்க கண்டுபுடிச்சாச்சு… ஆனா அவர காப்பாத்துறது அவ்ளோ ஈசியில்ல…. பொறுமையா இருங்க…”

அவனது வார்த்தைகளில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே பவித்ராவுக்குப் பட்டது.

”சரி…. ஆனா அவரு எங்கிருக்காரு என்ற விஷயத்த சொன்னா… நாம சேந்து காப்பாத்தலாமே…”

அவளை உற்று நோக்கிவிட்டு

”இங்க பாரு பவித்ரா…. இதுல நீங்க சம்பந்தப்படவேணாம்… நா பாத்துகுறன்….”

”ஆனா….” ஏதோ பேசப்போனவளைத் தடுத்த கல்யாணி,

”இங்க பாரு பவி…. அவரு சொல்றதும் சரி தானே?”

நடுவில் அவனும் ,

”ஆமா…ஆமா…. புரிஞ்சுக பவித்ரா….”

அவன் கெஞ்சுவது போல கேட்கவும் அவளையறியாமலே தலையாட்டி பொம்மை போல் தலையாட்டினாள்.

”அப்போ… நா போய் வாரன்…”

வானளவுக்கு உயர்ந்தவன் போல அவன் சென்ற திசையையே நெடுநேரமாக பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தை கைகளில் ஏந்தி,

”என்னடா இப்படி யோசிக்குற? ” அக்காவான் கைகளைப் பிடித்து புன்னகைத்தவள்.

”ம்…. ஒன்னுமில்ல… சும்மா தா…. சின்னக்கா நா ரூம் போய் ரெஸ்ட் எடுக்குறன். ஏதாச்சுமுனா கூப்பிடு… சரியா?”

அவளது கழுத்தில் தொங்கியபடியே அறையை அடைந்தவள். சற்று நேரமாக அங்குமிங்குமாக நடந்து ஏதோ யோசித்த பின் உடனே கைத்தொலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தாள்.

”ஹலோ பொலிஸ் டேஷன்…..”

ஏதோ கூறிவிட்டு  கட்டலில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அவளுக்கு எல்லாமே குழப்பமிகுதியாகவே இருந்தது.

‘சீ… இங்க நடக்குற நாடகத்த இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுகலாம்..’

மனதால் எண்ணியவள் நிம்மதியின்றி தவித்துக் கொண்டிருந்தாள். சில நாழிகை கழிந்ததும் மீண்டும் அவளது கைப்பேசி அலறியது. சட்டேன காதில் வைத்துப் பேசியவளுக்கு உலகமே இருண்டது போலானது.

”உண்மயா? செக் பண்ணீங்களா?” மறுமுனையில்,

”ஆமா மெடம் கன்போம் தா….” பெண் குரலுக்கு

”ஓகே…டேங்ஸ்…”

அழைப்பைத் துண்டித்தவள். கோபத்துடன் கதவைத் திறந்த சப்தம் கேட்டு ஓடி வந்தவள்

”பவி…பவி எங்க போற..?”

அவளின் வார்த்தைகளைக் கூட காதில் போட்டுக் கொள்ளாது சென்றவளை வினோதமாக நோக்கினாள் கல்யாணி.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

ஓடி வந்தவள் வினோத்தினருகே வந்து, ”என்ன சொல்றீங்க…? கார்த்… உயிரோடயா..?” வார்த்தைகள் கூட திக்கித் திக்கி வெளிவந்தன. அவளை ஒரு பார்வை பார்த்து சிரித்தவன், ”ஆமா…. கார்த்திக்க கண்டுபுடிச்சாச்சு… ஆனா அவர காப்பாத்துறது அவ்ளோ…

ஓடி வந்தவள் வினோத்தினருகே வந்து, ”என்ன சொல்றீங்க…? கார்த்… உயிரோடயா..?” வார்த்தைகள் கூட திக்கித் திக்கி வெளிவந்தன. அவளை ஒரு பார்வை பார்த்து சிரித்தவன், ”ஆமா…. கார்த்திக்க கண்டுபுடிச்சாச்சு… ஆனா அவர காப்பாத்துறது அவ்ளோ…

4 thoughts on “நித்யா… அத்தியாயம் -14

  1. 383796 892827Hi! I discovered your web site accidentally today, but am truly pleased that we did! Its not only entertaining, but in addition straightforward to make use of in contrast to lots that Ive viewed! 646067

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *