போரிடும் உலகை சாய்ப்போம் நாம்

  • 65

போரெனும் கொடியின் கீழ்
களி கொள்ளும் கயவர்களின்
கோரப்பிடியில் சிக்காது
சாதி மத பேதமற்ற
சாந்தியான வாழ்வுதனை
சாத்தியமாக்கிடவே
துணிந்து வா மனிதா!!

ஆயுத ரகங்கள் நீ தரித்து
யுத்தம் பல எதிர் கொண்டு
உயிர்கள் பல துறந்திங்கு
கறுப்புப் பதிவு – வேண்டாம் இனியும்
நம் வாழ்வினிலே!

நாடு பிடிக்கும் கொள்கையதில்
நயமாய் நீ வென்றிடவே
போரெனும் பேராபத்தை
பொடுபோக்காய்ச் செய்கின்றாய்!

அரசியல் இலாபமதை
அளவின்றிப் பெற்றிடவே
அரசியல் அரங்கிற்குள்
அச் சமரைப் புரிகின்றாய்!

இன – மத பேதமின்றி
இணைந்து வாழும் உலகமதில்
இன்பங்களைத் துறந்திங்கு
போரெனும் கேட்டை நீ
போற்றுதலோடு பார்க்கின்றாய்!

நிரந்தரமில்லா இவ்வுலகில்
நிம்மதியாய் நாம் வாழ
நிறுத்திடுவோம் போர்தனை – என்றும்
அறுத்திடுவோம் பகைமைதனை

பட்டம் பதவி புகழுக்காய்
போரிடும் இவ்வுலகில்
பாமரர் பலருக்கும்
புரிந்திடுவோம் – பல் பணிகள்

ஒரு தாய் மக்களென
ஒற்றுமையங்கு தலைத்தோங்க
நாடெனும் இல்லமதில்
நம்பகமாய் நாம் வாழ
போரெனும் விருட்சத்தை
சாய்த்திடுவோம் வேருடனே!

J.Noorul Shifa
SEUSL

போரெனும் கொடியின் கீழ் களி கொள்ளும் கயவர்களின் கோரப்பிடியில் சிக்காது சாதி மத பேதமற்ற சாந்தியான வாழ்வுதனை சாத்தியமாக்கிடவே துணிந்து வா மனிதா!! ஆயுத ரகங்கள் நீ தரித்து யுத்தம் பல எதிர் கொண்டு…

போரெனும் கொடியின் கீழ் களி கொள்ளும் கயவர்களின் கோரப்பிடியில் சிக்காது சாதி மத பேதமற்ற சாந்தியான வாழ்வுதனை சாத்தியமாக்கிடவே துணிந்து வா மனிதா!! ஆயுத ரகங்கள் நீ தரித்து யுத்தம் பல எதிர் கொண்டு…

6 thoughts on “போரிடும் உலகை சாய்ப்போம் நாம்

  1. 830053 547284Hey there, I think your blog might be having browser compatibility issues. When I look at your website in Chrome, it looks fine but when opening in Internet Explorer, it has some overlapping. I just wanted to give you a quick heads up! Other then that, very good blog! 502621

  2. 159810 870390Following study several with the content material inside your website now, we genuinely such as your technique of blogging. I bookmarked it to my bookmark internet website list and will also be checking back soon. Pls take a look at my web-site likewise and make me aware what you believe. 220431

  3. 494236 388436Oh my goodness! an outstanding article dude. Thank you Nonetheless Im experiencing issue with ur rss . Do not know why Cannot register for it. Could there be any person obtaining identical rss difficulty? Anybody who knows kindly respond. Thnkx 588256

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *