குரங்கு மனசு பாகம் 44

  • 12

சர்மி தாயாகப் போகும் பரவசம் அதீக் உள்ளத்தில் ஆனந்தமாய் கிடந்தாலும் தன் தாயிடம் இந்த சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடியாதே என்ற வருத்தம் வெகுவாய் அவன் உள்ளத்தை தாக்கியது.

“சர்மி…” ஏதோ ஆறுதல் வேண்டி தன்னவளை அழைத்தவன் பேசியதுமே ஓடி வந்து பக்கத்தில் நிற்கும் மனைவியை காணாமல் அறையை விட்டு வெளியே வந்தான்.

“ஹலோ ஆன்ட்டீ நா… நா.. நான் சர்மி பேசுறன்” யார்கூடவோ லேன் லைனில் பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு இடைஞ்சலின்றி தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அதீக்.

“ஓஹ் நீ யா? என்னா சொல்லு?”

“அதுவந்து ஆன்ட்டீ… ஆஹ், நீங்க சுகமா இருக்குறீங்களா?”

“நான் எப்புடிப் போனா உனக்கு என்னா? விஷயத்த சொல்லு…”

“ஆன்ட்டீ அது… அது… உங்க மகன் வாப்பாவாகப் போறாரு.”

தான் தன் தாயிடம் குறித்த விடயத்தை ஒப்புவிக்க முடியா வருத்தத்தில் இருக்க, தன் மனைவி தான் நினைத்ததை செய்து கொண்டிருப்பது அதீகிற்கு பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்த அவளுக்குத் தெரியாமல் அவள் பின்னால் வந்து நின்று கொண்டான்.

பேச்சு தொடந்தது.

“பழசு எல்லாம் மனசுல வெச்சிக்காம அதீக் கூட பேசுங்க ஆன்ட்டீ. அவர் என்கிட்ட நல்லா நடந்து கொண்டாலும் மனசு முழுக்கா உங்க நினைவா இருக்காறு. பிலீஸ் ஆன்ட்டீ, பிலீஸ்.”

“இங்கபாரு எனக்கு ஒரு மகன் தான் இருக்கான். வேற எவனும் என் புள்ளயில்ல, அதுவும் உன்னப் போய் முடிச்சானே அவன என் வயித்தால பெத்ததுக்கு வயித்துல வெச்சே அழிச்சிருக்கனும்.”

“ஆன்ட்டீ பிலீஸ் இதுக்கு மேல ஒன்னும் பேசாதிங்க, நான் வெச்சுட்றன்…

“வெச்சுட்டு போடி”

சர்மியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அனல் பறக்கும் வார்த்தைகளால் தன் அகத்தை வருத்திய அத்தையை எண்ணி மிகவும் நொந்து போய், திரண்டு வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு திரும்பினாள்.

“அ.. அதீ.. அதீக், நீங்க.. நீங்க எப்போ வந்தீங்க?”

“நான் எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தன் சர்மி..”

அது ஒன்னுமில்லடா, வாங்க நாம ரூம்கு போய் பேசிக்கலாம்”

கணவனின் முதுகுப்புறம் பிடித்து அவனைத் தள்ளிக் கொண்டே தம் அறைக்கு வந்தாள்.

“ஹபி இன்னக்கி ஔவ்ட் ல எங்க சரி போய் வருவோமா?”

பேச்சை மாற்ற கதை போட்டவளுக்கு பதில் சொல்லும் மனநிலையில் அதீக் இருக்கவில்லை.

“ஹபி பேசுங்களே!!”

அவன் பேசவில்லை. வேகமாய் எழுந்து மாட்டியிருந்த ஷேர்ட்டை போட்டுக் கொண்டு, மேசையில் கிடந்த மோட்டார் வண்டியுடைய சாவியை எடுத்தவனாய் வேகமாக வெளியிறங்கிப் போனான்.

“ஹபி.. ஹபி எங்க போறிங்க, ஹபி… சொல்லிட்டு போங்க, ஹபி..”

மனைவியின் வார்த்தைகளை காதில் வாங்கிக் கொள்ளாது கிளம்பிப் போனவனால் சிறிது காலம் சந்தோஷமாய் இருந்த சர்மியின் வாழ்க்கைக்குள் அடுத்து என்ன பூகம்பம் வெடிக்கப் போகின்றதோ தெரியாது.

கதை தொடரும்…
Aathifa Ashraf

சர்மி தாயாகப் போகும் பரவசம் அதீக் உள்ளத்தில் ஆனந்தமாய் கிடந்தாலும் தன் தாயிடம் இந்த சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடியாதே என்ற வருத்தம் வெகுவாய் அவன் உள்ளத்தை தாக்கியது. “சர்மி…” ஏதோ ஆறுதல் வேண்டி…

சர்மி தாயாகப் போகும் பரவசம் அதீக் உள்ளத்தில் ஆனந்தமாய் கிடந்தாலும் தன் தாயிடம் இந்த சந்தோஷத்தை பரிமாறிக் கொள்ள முடியாதே என்ற வருத்தம் வெகுவாய் அவன் உள்ளத்தை தாக்கியது. “சர்மி…” ஏதோ ஆறுதல் வேண்டி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *