குரங்கு மனசு பாகம் 52

  • 44

“ஹபி, ஹபி” அந்த இருட்டறையில் கணவனை கைகளால் தேடினாள்.

“எனக்கு என்னமோ போல இருக்கு ஹபி, கொஞ்சம் எழும்புங்களே” கணவன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

“ஹபி, ஹபி”

ஆம் அவள் கூப்பாடு எதையும் வாங்கிக் கொள்ள அவன் பக்கத்தில் இருந்தால் தானே? மெதுவாக எழுந்தவள், அறை மின்குமிழைப் போட, தன்னவனைக் காணாது பயந்து போனாள்.

“ஹபி… ஹபி…”

வீடு முழுவதும் கணவனைத் தேடியவளுக்கு விளக்கம் கொடுக்குமாறு வந்து நின்றாள் ராபியா.

“மகன் காலையில ஏர்லியா கிளம்பி போனாறு மா. நீ நல்ல தூக்கம்னு எழுப்ப வேணாம்னு சொன்னாறு.”

“எங்க? எங்க போனாறு?”

“ஆபிஸ் ல இன்னக்கி என்னமோ வோர்க்ஸ் இருக்குன்னு சொல்லிட்டு போனாரு. நான் என்னா? ஏதுன்னு கேக்கல்ல சர்மி…”

“என்கிட்ட சும்மா சரி சொல்லல்ல, ராத்திரியில சொல்லிட்டு தூங்கியிருக்கலாமே!” அவளுக்கு ஏதோ தப்பாகத் தோன்றியது.

அறைக்குள் சென்றவள் மொபைலை எடுத்து கணவன் இலக்கத்துக்கு அழுத்தினாள். ஆயினும் அதீக் பதில் வழங்காது இணைப்பைத் துண்டித்து விட, மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டே இருந்தாள்.

“இவள் ஒருத்தி” என்றுமில்லாதவாறு மனைவியின் அழைப்பு எரிச்சலாய் இருந்தது அவனுக்கு,

என்ன சர்மி, கொஞ்சம் பிஸி யா இருக்கன், சும்மா உன் இஷ்டத்துக்கு கோல் பண்ணிட்டே இருக்க? கட் பண்ணிவிட்டா என்னமாச்சும் இருக்கும்னு யோசிக்க தெரியாத அளவுக்கு புத்தியில்லயா? படிச்சுத் தானே இருக்க? ஒன்னும் யோசிக்க மாட்டியா? எல்லாம் என் தலயெழுத்து

கோவமாய் அழைப்புக்குப் பதில் கொடுத்தவன், தன்னவளை, தன் ஆசை மனைவியைக் கண்டபடி திட்டித் தீர்க்க, ஒரு கணம் “இது தன்னோட அதீக் தானா?” என சந்தேகம் கொண்டாள் சர்மி.

“ஐ யம் ரியலி சொறி டா, நா.. நான் வெச்சிட்றன்.. நீங்க நீங்க…”

சர்மி சொல்லி முடிக்கும் முன்னதாகவே மறுமுனையில் அழைப்பைத் துண்டித்து விட்டான் அதீக். ஆயினும் அவனுக்கு மனைவி மீது திடீரென இந்தளவு கோவம் காட்டுவதற்கான காரணம் உண்மையில் தெரியவில்லை. வழமையாக ஆபிஸ் வேலைகளில் மூழ்கிப் போனாலும்,

“சர்மி சாப்பிட்டியா? புள்ள என்ன செய்றான்? கவனமா இரியுங்கம்மா?”

என அடிக்கடி குறுந்தகவல் அனுப்பி தன் நினைவிலேயே தன்னவன் இருப்பதனை உறுதி செய்பவன் தரப்பிலிருந்து அன்று எந்தவித குறுந்தகவல்களும் சர்மி மொபைலுக்கு வரவுமில்லை. வரும் அழைப்புக்கள், குறுந்தகவல்கள் என எல்லாம் ஓடிச் சென்று பார்த்தவள் தன்னவனாக இருக்கக் கூடாதா என ஏங்கி, ஏமாந்து போனாள்.

“அதீக் யேன் இப்புடி நடந்து கொள்றான்? என்கூட கடுமையா பேசினது சரியில்லயே, ஒருவேள நான் வேணாம்னு போயிட்டனோ? அப்புடி ஒரு நிலம வந்தா, நா… நான்.. நோ, அப்புடி இருக்காது.”

உள்ளம் உடைந்து, எண்ணங்களை படர விட்டு, யன்னல் ஓரமாய் தன்னந்தனி நின்று, வெளிப்புறம் தனை வெருச்சோடிப் பார்த்துக் கொண்டிருந்தாள் சர்மி. இங்கு மறுபக்கத்தில் தன்னவள் குறித்த எந்த வருத்தமும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தான் அதீக்.

“எக்ஸியூச் மீ சேர்!”

“இயஸ் கமிங்…”

“சேர் உங்கள் பார்க்க யாரோ வந்திருக்காங்க,”

“யாரு?”

“லேடி ஒன்னு சேர்…”

“கருமம் புடிச்சவள் ஆபிஸ்கே வந்துட்டாளா?” அகத்தில் அனல் பறக்க, தன் சர்மி என்றெண்ணி

“ஹ்ம்ம் உள்ள வர சொல்லுங்க,”

“ஓகே சேர்.”

“நல்லா திட்டி அனுப்பனும்” ஏதோ ஆத்திரத்தோடு அறைக் கதவைப் பார்த்திருந்தான் தன் மனைவிக்காகவே.

கதை தொடரும்…
Aathifa Ashraf

“ஹபி, ஹபி” அந்த இருட்டறையில் கணவனை கைகளால் தேடினாள். “எனக்கு என்னமோ போல இருக்கு ஹபி, கொஞ்சம் எழும்புங்களே” கணவன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. “ஹபி, ஹபி” ஆம் அவள் கூப்பாடு எதையும்…

“ஹபி, ஹபி” அந்த இருட்டறையில் கணவனை கைகளால் தேடினாள். “எனக்கு என்னமோ போல இருக்கு ஹபி, கொஞ்சம் எழும்புங்களே” கணவன் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. “ஹபி, ஹபி” ஆம் அவள் கூப்பாடு எதையும்…

7 thoughts on “குரங்கு மனசு பாகம் 52

  1. Hey very nice website!! Guy .. Excellent .. Amazing .. I will bookmark your blog and take the feeds alsoKI am happy to seek out so many useful info right here within the publish, we’d like develop more strategies in this regard, thank you for sharing. . . . . .

  2. Hmm it seems like your blog ate my first comment (it was super long) so I guess I’ll just sum it up what I wrote and say, I’m thoroughly enjoying your blog. I too am an aspiring blog blogger but I’m still new to everything. Do you have any suggestions for inexperienced blog writers? I’d definitely appreciate it.

  3. Greetings from Carolina! I’m bored to tears at work so I decided to browse your site on my iphone during lunch break. I love the info you present here and can’t wait to take a look when I get home. I’m surprised at how quick your blog loaded on my phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, superb blog!

  4. After study a number of of the weblog posts on your web site now, and I truly like your way of blogging. I bookmarked it to my bookmark web site record and shall be checking again soon. Pls try my website online as effectively and let me know what you think.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *