தாருல் உலூம் அல் மீஸானியா அரபுக் கல்லூரி

தாருல் உலூம் அல் மீஸானியா அரபுக் கல்லூரி 1992 இல் ஒரு குர்ஆன் மத்ரஸாவாக ஆரம்பிக்கப்பட்டது. இதை மீ்ஸான் ஹாஜியார் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். அன்னாரின் மறைவுக்கு பின்னர் அவரது மகன் இஹ்திசாப் ஹாஜியார் இவ் அரபுக் கல்லூரியை இன்று வரை மிக சிறப்பாக நடாத்தி வருகின்றார். இவ் அரபுக் கல்லூரியின் செலவுகள் அனைத்தும் எந்த வித வசூலும் இன்றி மாணவர்களிடம் மாதாந்த பணம் அறிவிடப்படும் மாதக் கட்டணங்கள் ஊடாகவும் மற்றைய இதர செலவுகள் அனைத்தும் மீஸான் ஹாஜியாரின் குடும்பத்தினர்கள் தான் இன்றுவரை இக் அரபுக் கல்லூரிகாக செலவு செய்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ்

தாருல் உலூம் மீஸானியா அரபுக் கல்லூரியின் வளர்ச்சியும் அண்மைக்கால போக்கும்.

ஆரம்பத்தில் மீ்ஸானியா மாணவர்கள் கலாச்சார திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மீலாத் போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். இன்னும் அதிகமானோர் வெளிநாடுகளில் நடாத்தப்பட்ட அல்குர்ஆன் மனனம், கிராத் போட்டியில் தேசிய, சர்வதேச மட்டத்தில் பங்குகொண்டு வெற்றி கண்டுள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்.

இக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை சுமார் 150 க்கு மேற்பட்ட ஹாபிழ்களும் 100க்கு மேற்பட்ட ஆலிம்களும் பட்டம் பெற்றுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் மீஸானியவானின் அடைவுகள் என பார்க்கையில் இலங்கை கிழக்கு, தென்கிழக்கு மற்றும் பேராதெனியா போன்ற பல்கலைக்கழகங்களில் பல மீஸானி மாணவர்கள் படித்து பட்டம் பெற்றுள்ளனர். இன்னும் அநேகமானோர் வெளிநாட்டு பல்கலைக்கழக மான ஹசிம், அபுஹா, ரியாத் மற்றும் மதீனா போன்றவற்றில் படித்து வருவதுடன் இளமானி பட்டம் முடித்தவரும் உள்ளனர். அதேபோல் வெளி நாட்டு பல்கலைக்கழகங்களில் கலாநிதி கற்கையை தொடரும் மீஸானியா பட்டதாரி மாணவர்களும் உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்

அந்த வகையில் அக்குறனையில் அமைந்துள்ள. தாருல் உலூம் மீஸானியா அரபுக் கல்லூரி எமது நாட்டின் தேசியத்தில் பங்குதாரராக ஆரம்பம் தொடக்கம் இருந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

மேற்படி அனைத்து விடயங்களையும் தன்னகத்தே கொண்டு இலங்கை வாழ் சமூகத்தில் அனைத்து துறைகளிலும் பாரிய பங்களிப்பை செய்யும் முன்னணி அரபுக் கல்லூரியாக தாருல் உலூம் மீஸானியா அரபுக் கல்லூரி காணப்படுவது வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

நபீஸ் நளீர் (இர்பானி)
Diploma in counseling (R)
Editor of veyooham media center.

Leave a Reply

Your email address will not be published.