கொரொனாவும் நாமும்

  • 11

[cov2019]

இன்று எட்டுத் திக்குகளிலும் சிறியவர் முதல் பெரியோர் வரை பேசு பொருள் அல்லவா! தன்னால் தனித்து இயங்க இயலாத, கண்களுக்கே புலப்படாத ஓர் உயிரி திடகாத்திரமாக இயங்கும் ஒட்டு மொத்த மனித இனத்தையும் தன் பிடியினில் சிக்க வைத்திருப்பது ஆச்சரியத்திற்குரியதே! அதுமட்டுமா, சிறியோர் முதல் பெரியோர் வரை எல்லாம் மறந்து பல தடவை ஏதோ மந்திரத்தை ஜபிப்பது போல் கொரொனா என்ற சொல்லையே ஜபிக்கிறார்கள். இத்துடன் நிற்க வில்லையே!

  1. வேலைப்பளுவென ஓடிக் கிடந்த மேலைத்தேயர் துவக்கம் அனைவரையும் ‘Stay Home’ என்ற கருப்பொருளின் அடிப்படையில் முடக்கியது.
  2. பூகோள உலகை ஒரு மயப்படுத்தி தனிமைப் படுத்தியது.
  3. களைத்துப் போய் இருந்த ஒரு கூட்டத்தை STRESS லிருந்து RELAX பண்ணியது.
  4. இன்னும் சிலரை தனிமை படுத்தி STRESS துவக்கம் DEPRESSION வரை கொண்டு சென்றது.
  5. குடும்பங்களில் புரிந்தணர்வு மேலோங்கியது இன்னும் சிலவற்றில் பிளவு மேலோங்கியது.
  6. இருப்பினும் கொரொனாவுக்கு இன மத சாதி வெறி இல்லை
  7. அது மட்டுமா இல்லையில்லை ஆண், பெண்/ முதலாளி, தொழிலாளி வர்க்க பேதமில்லை .

இவ்வளவு வளர்ச்சி கண்ட நாகரிகத்தின் உச்சத்தை அடைந்த மானிட இனத்துக்கு தனித்தே இயங்க இயலாத ஓர் உயிரியை வெல்ல இயலாது. வெள்ளையர் கருப்பர் என பாகு பாடின்றி காவு கொண்ட போதும் ஏன் விடியலை நோக்கி புறப்பட இயலவில்லை. வூகானில் இனிதே தன் பயணத்தை தொடங்கினாலும் இந்நிமிடம் வரை இப்பூலோகம் முழுதும் களம் அமைத்து பயணித்து மானுட குலத்தையே அச்சுறுத்தி நாம் இன்னும் நாகரிகமடையவில்லையோ என எண்ணுமளவிற்கு சிந்தனையிலே திருப்பத்தை ஏற்படுத்தி கொரோனாவும் நாமும் பின்னிப்பினைந்துள்ளமையை பறை சாட்டுகிறதல்லவா??

M.Afra (BA)

Monetize your website traffic with yX Media

[cov2019] இன்று எட்டுத் திக்குகளிலும் சிறியவர் முதல் பெரியோர் வரை பேசு பொருள் அல்லவா! தன்னால் தனித்து இயங்க இயலாத, கண்களுக்கே புலப்படாத ஓர் உயிரி திடகாத்திரமாக இயங்கும் ஒட்டு மொத்த மனித இனத்தையும்…

[cov2019] இன்று எட்டுத் திக்குகளிலும் சிறியவர் முதல் பெரியோர் வரை பேசு பொருள் அல்லவா! தன்னால் தனித்து இயங்க இயலாத, கண்களுக்கே புலப்படாத ஓர் உயிரி திடகாத்திரமாக இயங்கும் ஒட்டு மொத்த மனித இனத்தையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *