பன்னிரெண்டு மாதங்களில்
பலகோடி நன்மைகளுடன
பவனி வரும் பல்சுவை மாதம்
ரமழானே வருக…
கல்புகளைக் கழுவி
பாவக்கறை போக்கி
ஒளியேற்றும் உன்னத மாதம்
ரமழானே வருக…
அற்புத கலாம் அருளப்பட்ட
அல்குர்ஆனிய மாதம்
ரமழானே வருக…
ஈகை குணத்தை
இதயங்களுக்கு அளித்திடும்
இனிய மாதம்
ரமழானே வருக…
பசி,தாகம் பரிசளித்து
பாமரர்களின் பண்பாட்டை
பறைமுழங்கும் மாதம்
ரமழானே வருக…
அருளையும், மன்னிப்பையும்
உவந்தளிக்கும்
உயர்ந்த மாதம்
ரமழானே வருக…
ஷைத்தானை விலங்கிட்டு
சதா இறைவனை துதி பாட
தூதுவரும் மாதம்
ரமழானே வருக…
வருடம்தோறும் மறவாமல்
மலரும் ரமழானே
இம்முறையேனும் இறைவனின்
அடிமையாக்கிடு இதயங்களை!