இருமுகம் கொண்டவன்

மனமெங்கும் மனக்கவலை
பெரு வெள்ளமாகிய போதும்
சிரிப்பென்ற முகம்
கொண்டவன்தான் நான்

நடிப்பென்று தெரிந்தும்
சில உறவுகள்
முன் உண்மையாய்
இருப்பவன்தான் நான்

இரக்க குணம் கொண்டதால்தான்
நெருப்பை கக்கும் உறவுகளிடமும்
நெருக்கம் கொள்ள முயல்கிறேன்
செறுப்பாய் கருதுவதால்தான்
பொறுப்பாய் என்னை
வெளியேற்றுகிறார்கள்

ஆம்
இருமுகம் கொண்டவன் நான்
இறத்த உறவுகள் போல்
இருக்கும் உறவுகளை நினைத்தேன்
சொந்தங்கள் என்று மட்டுமே எண்ணி
சோதனை செய்வது அறிந்தும்
சிரித்தே உண்மையாய் இன்னும்
இருப்பதால்

ஏற்றத்தாழ்வு பார்க்கும்
உலகில்
உறவுகள் தேடும் நானோ
இருமுகம் கொண்டவன்தான்
என்மன வேதனையோ
என்னை உணர்பவர்களுக்கே
உண்மையான என் முகம் காட்டும்

ஐ.எம்.அஸ்கி
கவியிதழ் காதலன்
அட்டாளைச்சேனை -08

Leave a Reply

Your email address will not be published.

Open chat
Need Help