ரமழானில் கோமான் நபியின் கொடைவள்ளல்

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நல்லவற்றை அதிகமாக வாரி வழங்குபவர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ரமழான் மாதத்தில் இன்னும் அதிகமாக வாரி வழங்குவார்கள். ஏனென்றால், (வானவர்) ஜிப்ரீல் ரமழானின் ஒவ்வோர் இரவும் – ரமழான் முடியும் வரை – நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பது வழக்கம். (அப்போது) அவரிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். (அவ்வாறு)  ஜிப்ரீல் தம்மைச் சந்திக்கும்போது தொடர்ந்து வீசும் (மழைக்) காற்றை விட நபி (ஸல்) அவர்கள் அதிகமாக நல்லவற்றை வாரி வழங்குவார்கள்!” (நூல்: புகாரி – 4997)

இஸ்லாமிய அறிஞர் அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுவதாவது; “மக்களுக்கு கொடுத்து, உதவி ஒத்தாசை செய்வது, வள்ளல் நபிக்கு, ரொம்ப விருப்பத்திற்குரியதாக இருந்தது. தான் கொடுக்கும் பொருள் மூலம் பெருமானார் அடையும் சந்தோசமும் மகிழ்ச்சியும், அதைப் பெற்றுக் கொல்வதினால், ஒருவர் அடையும் மகிழ்ச்சியை விட மிகப் பெரிதாக இருந்தது. மக்களுக்கு  நல்லவற்றை வாரி வழங்கும் மிகப்பெரும் வள்ளலாக அவர்கள் இருந்தார்கள். வேகமாகத் தொடர்ந்து வீசும் (மழைக்) காற்று போன்று அவர்களது வலக்கரம் இருந்தது; தேவையுள்ள ஒருவர் தன் தேவையை அவர்களிடம் எடுத்துக் கூறினால், தன் தேவையை விட, பிறருடைய தேவையையே அவர்கள் முற்படுத்தி, முதன்மைப்படுத்துபவர்களாக இருந்தார்கள். சிலபோது தனது உணவைக்கொண்டும், இன்னும் சிலபோது தனது உடையைக்கொண்டும் அவர்கள் உதவுவார்கள்.

வள்ளல் நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்கும்படி, ஏவக்கூடியவர்களாகவும், அதைத் தூண்டுபவர்களாகவும், அதன் பால் அழைப்பவர்களாகவும், இருந்தார்கள். இதனால்தான் நபியவர்கள் மனிதர்களிலேயே மிக விரிந்த, பரந்த உளம் படைத்தவர்களாகவும், மிக நல்ல மனமுடையவர்களாகவும், அவர்களிலேயே மிக்க மகிழ்வுடைய உள்ளமுடையவர்களாகவும் இருந்தார்கள். உளம் விரிவாக தர்மம் புரிவதற்கும், நற்காரியம் செய்வதற்கும் வியப்பிக்கத்தக்க தாக்கம் உள்ளது. (நூல் : ஸாதுல் மஆத் 02/ 22,23)

عن عبد الله بن عباس رضي الله عنهما بأنه: (كان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل، وكان يلقاه في كل ليلة من رمضان، فيدارسه القرآن، فلَرَسول الله صلى الله عليه وسلم أجودُبالخير من الريح المرسلة) متفق عليه.

قال العلّامة ابن القيم الجوزية رحمه الله تعالى:-

[ وكان العطاء والصدقة أحبّ شيئ إليه صلّى الله عليه وسلم، وكان سروره وفرحه بما يعطيه أعظم من سرور الآخذ بما يأخذه. وكان أجود الناس بالخير؛ يمينه كالرّيح المرسلة؛ وكان إذا عرض له محتاج آثره على نفسه؛ تارة بطعامه، وتارة بلباسه.

وكان صلّى الله عليه وسلّم يأمر بالصّدقة ويحثّ عليها ويدعو إليها. ولذلك كان صلّى الله عليه وسلّم أشرح الخلق صدرا، وأطيبهم نفسا، وأنعمهم قلبا؛ فإن للصّدقة وفعل المعروف تأثيرا عجيبا في شرح الصدر! ]

(¬6) زاد المعاد في هدي خير العباد (2/ 22 – 23) بتصرف.

ஐய்யூப் அப்துல் வாஜித்
(இன்ஆமீ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *