செல்வந்தர்கள் ஸகாதின் நோக்கத்தை உணர வேண்டும்!

  • 10

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையில் இறுக்கமான இணைப்பை ஏற்படுத்தி தோள் கொடுக்கும் அழகிய முயற்சியை இஸ்லாம் அதன் பிரதான நான்காவது கடமையாக ஸகாதை அடையாளப்படுத்தியுள்ளது.

அந்தவகையில் ஸகாதின் பிரதான நோக்கம் ஸகாத் பெற தகுதியானவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தி, மேலெழுந்து முன்னேறி வந்து மீண்டும் ஸகாத் பெறும் நிலை வராமல் இருக்க உதவுவதாகும்.

ஸகாத் நாளாந்த உணவுத் தேவைகள் மற்றுமுண்டான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக பொருளாதார ரீதியாக அடித்தளத்தில் இருப்பவரை ஒரு உயரிய நல்ல நிலைக்கு கொண்டுவந்து நிறுத்துவது தான் உண்மையான நோக்கமாகும்.

இன்று ஸகாதின் நோக்கத்தை சரியாக விளங்காததன் காரணமாக ஒரு சில செல்வந்தர்கள் ஸகாத் பணத்தை சில ஆயிரங்களாக பிரித்து வறுமைக்கோட்டிலுள்ள சில குடும்பங்களுக்கு பகிர்ந்தளித்துவிட்டு தாம் ஸகாதை கொடுத்ததாக அக மகிழ்கின்றனர். இவ்வாறு பிரித்து கொடுப்பதால் பெறுபவர்களது வெறும் குறிப்பிட்ட சில தினங்களது தேவை நிறைவேறுமே தவிர நிரந்தர தீர்வாகாது.

ஸகாத் பெற தகுதியான ஒருவருக்கு ஸகாத் பணத்தை (உ+ம் இரண்டு இலட்சத்தை) கொடுத்து தொழிலுக்கு உதவுதல் அல்லது தொழில் ஒன்றை ஆரம்பித்துக் கொடுத்தல் அல்லது தொழிலுக்கான உபகரணங்களை கொள்வனவு செய்து வழங்குதல் போன்ற இன்னோரன்ன வகையில் ஒருவரது பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவது தான் ஸகாத் கடமையாக்கப்படதன் பிரதான நோக்கமாகும். ஆதலால் ஒருவரது வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் என்பவற்றை முன்னேற்றுவதற்கு ஸகாத்திற்கு பாரிய பங்களிப்பு உண்டு.

அதிகமான மக்களுக்கு அல்லது வறியவர் அனேகருக்கு உதவும் நோக்கமிருப்பின் குறித்த செல்வந்தர்கள் ஸகாத் பணத்தை அதற்கு செலவிடாது ஸதகாக்களாக தாராளமாக பகிர்ந்து வநியோகிக்கலாம். ஆனால் ஸகாத் என்பது குறித்த எட்டுக் கூட்டத்தாரில் ஒரு சாராரையாவது பொருளாதார ரீதியில் தூக்கிவிடுவதை வேண்டிநிற்கிறது.

ஸகாத் மற்றும் ஸதகாவுக்குமிடையிலான வேறுபாடுகளை அறிந்து ஸகாதை ஸகாதாவும் ஸதகாவை ஸதகாவாகவும் வழங்க முயல்வது, ஸகாத் கொடுக்க தகுதியான செல்வந்தர்களது கடமையாகும்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்!

நட்புடன்
அஸ்ஹான் ஹனீபா

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையில் இறுக்கமான இணைப்பை ஏற்படுத்தி தோள் கொடுக்கும் அழகிய முயற்சியை இஸ்லாம் அதன் பிரதான நான்காவது கடமையாக ஸகாதை அடையாளப்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஸகாதின் பிரதான நோக்கம் ஸகாத் பெற தகுதியானவர்களின் பொருளாதார நிலையை…

செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையில் இறுக்கமான இணைப்பை ஏற்படுத்தி தோள் கொடுக்கும் அழகிய முயற்சியை இஸ்லாம் அதன் பிரதான நான்காவது கடமையாக ஸகாதை அடையாளப்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஸகாதின் பிரதான நோக்கம் ஸகாத் பெற தகுதியானவர்களின் பொருளாதார நிலையை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/youthcey/public_html/wp-includes/functions.php on line 5373

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (1) in /home/youthcey/public_html/wp-includes/functions.php on line 5373