உயிரினில் உன்னை விதைக்கையில்
உணர்வுகள் நீரூற்றாகுதே
விழி நீரில் என் காதல் முளைக்கையில்
விதியங்கு விலை பேசுதே
நாகரீகம் தொலைந்து போக
நடை பாதையெங்கும்
நாணங்கெட்ட பெண்கள் பலகோடி கண்டும்
பாவி மனம் பாலடைந்த வீடாய்
நீ வந்து குடியேறவே தவங்கிடக்கிறது
உன் புகைப்படம் என் விழிகளை
விலை பேசிக் கொண்டதும்
விழி நீர்
விரலுக்குக் குத்தகையானது
அழும் விழிகளை
துடைத்தே தூளாகிப் போகிறேன்
துரதிஸ்டவாதி நானென்று
நாள் தோறும் !!
கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08