முஸ்லிம்கள் இன்னமும் பாடம் படிக்கவில்லை

  • 10

ஒரு தனித்த சம்பவம் சமூகப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. நாட்டின் ஒரு நகரில் சம்பத் வங்கியின் கிளையில் ஒருவர் வாக்குவாதம் செய்வது ,நியாயம் கேற்பது மொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக மாற்றப்படுகிறது.

அது சிங்கள மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கி் என அதன் ஒரு பங்குதாரர் குறிப்பிடுகிறார். அதில் என்ன தவறு இருக்க முடியும், அதில் முஸ்லிம் வாடிக்கையாளர்களையும் உள்ளடக்கி் உள்ளதை நாம் நேரான மனப்பாங்குடன் பார்க்காமல்,ஒரு தனித்த நிகழ்வு மொத்த சமூகத்திலும் பகிரப்படும் போது ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி நாங்கள் சிந்திக்க மறுக்கின்றோம்.

அமானா வங்கி முஸ்லிம் மக்களின் சட்ட விதிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட வங்கி அதில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிமல்லாதவர்கள் கணக்குகளை வைத்துள்ளனர். இவ்வாறான நிகழ்வுகளில் ஒரு ஜனநாயக நாட்டின் சுபிட்சத்திற்கு முக்கியமானது.

உண்மையில் அந்த சகோதரன் செய்திருக்க வேண்டியது. நுழைவாயிலில் இருந்து கொண்டு சத்தம் போடுவதை விட வங்கி முகாமையாளர் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு இருக்க வேண்டும். அவ்வாறு முடியாதவிடத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தனக்கு நடந்த அநீதிக்கு எதிராக முறைப்பாடு செய்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறையே சிறப்பானதாக அமைய முடியும். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அமைய முடியும்.

எங்களில் பலர் பிரச்சினைகளை சமூக ஊடகங்களில் தீர்க்க முயற்சிக்கின்றனர். எப்போதும் எதிர்ப்பு மனோநிலையை ஆயுதமாக கையாள்கின்றனர். மொத்த பெரும்பான்மையும் ஒரு பக்கமும் சிறுபான்மை மக்களை இன்னொரு பக்கமும் வைத்து துருவ ரீதியாக சிந்திப்பது எவ்வளவுப் பெரிய பின் விளைவுகளை கொண்டு வரும் என்பதை நான் விளங்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு சிறுபான்மையாக வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு விடயத்தையும் சட்டரீதியாக அணுகுவதே சிறந்த முறையாக இருக்க முடியும். அரசியல் வியாபாரம் செய்யும் நாட்டில் சின்ன விடயமும் அரசியலாக மாற்றப்படுகிறது.

இவ்வாறான விடயங்கள் முஸ்லிம்களுக்கு மாத்திரம் நடப்பதில்லை பலவிடங்களில் பெரும்பான்மை சமூக மக்களுக்கும் அரசு அரச மற்றும் ஏனைய நிறுவனங்களில் பல்வேறுபட்ட வாக்குவாதங்கள் ஏற்படுவதுண்டு அவற்றை அவர்கள் பல்வேறுபட்ட துறைகளில் தீர்ப்பர் ஆனால் அதையும் சமூக பிரச்சினையாக மாற்றிக் அதில் ஆதாயம் தேட முற்படுவதில்லை.

நாம் முதலில் நிதானமாகப் பேசவும், நிதானமாக நிகழ்வுகளை கையாளவும் கற்றுக்கொள்ள வேண்டும். எந்தவொரு நடவடிக்கையில் இறங்கும் போதும் நன்றாக கலந்தாலோசனை செய்து அதன் சாதக பாதகங்களை கலந்துரையாடிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

நிதானம் இல்லாத நடவடிக்கைகளும் பேச்சுக்களும் மிகப்பெரிய அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பயங்கரமானது. முதலாவது நாம் இலங்கைநர்களாக சிந்திக்கப் பழக வேண்டும்.

இன உணர்வுகளைத் தூண்டி விபச்சார அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு தீனி போடும் சமூகமாக நாங்கள் இருக்கக் கூடாது.

இது ஒரு சிறுபான்மை நாட்டில் வாழ்வது தொடர்பான சட்ட ஒழுங்குகளை மிகக் கடுமையாக பேச வேண்டிய காலம் இந்த விடயத்தில் முஸ்லிம் அறிஞர்கள் தனது பங்களிப்பை காத்திரமாக செய்ய முன்வரவேண்டும்.

எம் .என் முஹம்மத்.

ஒரு தனித்த சம்பவம் சமூகப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. நாட்டின் ஒரு நகரில் சம்பத் வங்கியின் கிளையில் ஒருவர் வாக்குவாதம் செய்வது ,நியாயம் கேற்பது மொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. அது சிங்கள மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட…

ஒரு தனித்த சம்பவம் சமூகப் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. நாட்டின் ஒரு நகரில் சம்பத் வங்கியின் கிளையில் ஒருவர் வாக்குவாதம் செய்வது ,நியாயம் கேற்பது மொத்த முஸ்லிம்களின் பிரச்சினையாக மாற்றப்படுகிறது. அது சிங்கள மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *