இந்தக் காலத் திருமணங்கள்

  • 12

திருமணவீட்டை நாடி
ஊரே வருகிறது ஒன்றுகூடி
ஆண்களுக்கு ரெண்டு பந்தல்
பெண்களுக்கு ரெண்டு பந்தல்
மொத்தமாக முற்றத்தில்
இருக்கிறது நாலு பந்தல்

பந்தலிலே பாய்மேலே
இருக்கிறது நெய்ச்சோறு
உன் கையிலுள்ள மொய்போட்டு
வந்தாலுனக்கு வாய்ச்சோறு

நபிகால வலீமாக்கள்
எங்கேயோ போனது
அழகாக நடைப்போட்டு
புதுவலீமா வந்தது
திருமணத்தை பகிரங்கப்படுத்தி
அன்று கொடுத்த வலீமா
ஏழையின் பசியதனை ஒருநேரம்
தடுத்தது
திருமணத்தை பெருமிதப்படுத்தும்
இன்றைய வலீமா
மொய்யென்ற பெயரினிலே
ஏழை வயிற்றைக் கடித்தது

உணவுண்டு கைகழுவி
மொய்கொடுக்க நான் வந்தால்
அலங்கார மணமேடையில்
இருக்கிறது மணபொம்மை

அலங்கார மணப்பெண்ணை
பார்ப்பதற்கு
திருமணத்தில் கலந்துகொண்ட
ஆடவர்கள் காத்து நிட்க
காத்தவர்கள் பார்த்துச் செல்ல
பார்க்காதவர்கள் காத்துநின்றனர்.

திருமணப்பெண் உடுத்திருந்த
வண்ணம் நிறைந்த ஆடையை
எவ்வளவு விலைதந்து
வாங்கினாரோ அவளப்பா.
திருமணப்பெண் அமர்ந்திருந்த
அலங்கார இருக்கையை எடுக்க
எத்தனைக்கடை ஏறிஏறி
இறங்கினானோ அவளண்ணன்.

இந்தக் காலத் திருமணங்களில்
இஸ்லாம் சொல்லிடாத அறிமுகங்கள்.
வலீமாவின் பெயர்ச்சொல்லி
நடக்கிறது நம் சமூகத்தில்
அந்நியவர் வழிமுறைகள்.

இதையறிந்தும் அறியாத நம்மவர்கள்
நகர்கின்றனர் மெதுவாக
பித்அத்தை நோக்கி.
நபிவழியைப் புறக்கணித்த
அவர்கள் மெதுவாக நகர்கின்றனர்
நரகத்தை நோக்கி.

Rusdha Salam
South Eastern university of Sri Lanka

திருமணவீட்டை நாடி ஊரே வருகிறது ஒன்றுகூடி ஆண்களுக்கு ரெண்டு பந்தல் பெண்களுக்கு ரெண்டு பந்தல் மொத்தமாக முற்றத்தில் இருக்கிறது நாலு பந்தல் பந்தலிலே பாய்மேலே இருக்கிறது நெய்ச்சோறு உன் கையிலுள்ள மொய்போட்டு வந்தாலுனக்கு வாய்ச்சோறு…

திருமணவீட்டை நாடி ஊரே வருகிறது ஒன்றுகூடி ஆண்களுக்கு ரெண்டு பந்தல் பெண்களுக்கு ரெண்டு பந்தல் மொத்தமாக முற்றத்தில் இருக்கிறது நாலு பந்தல் பந்தலிலே பாய்மேலே இருக்கிறது நெய்ச்சோறு உன் கையிலுள்ள மொய்போட்டு வந்தாலுனக்கு வாய்ச்சோறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *