Advertisements

திருப்பு முனை
பாகம் 7

லீனா அவனது விவாக பத்திரத்தை நோட்டமிட்டு கொண்டிருந்தாள். அது ஒரு  வழக்கு தாள். அதில் பஸ்கு divorce என்று குறிப்பிட்டிருந்தது. மனைவியால் வழங்கப்படும் விவாகரத்துக்கே பஸ்கு divorce எனக் கூறப்படும். அப்படி என்றால் இவர் divorce குடுத்தில்ல. அவங்க தான் divorce பண்ணி இரிப்பாங்க. but மாமி எனக்கிட்ட இவர்  தலாக்  பண்ணினன்டு பொய் தான் சொல்லி இரிக்கிறாங்க.

சிந்தித்தவாறே மறு பக்கம் பார்த்தாள். அதில்,  ஷரீப் தனது மனைவிக்கும் மார்க்கத்திற்கும் முரணாக நடப்பதால் தான் விவாகரத்து செய்ய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று எழுதப்பட்டிருந்தது. லீனா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

இவர் மனைவிக்கி முரணா நடக்குறன்டா அதுட அர்த்தம் என்னா? அதும் முடிச்சி 8மாசத்துல divorce.

sure ஆ என்னமோ நடந்து இரிக்கி. நா எப்படி இத கண்டு புடிக்கிற. எனக்கு இங்க யாரயுமே தெரியாதே. அவங்கட number சரி கெடச்சா எவ்வளவு நல்லம். bcz வாழ்ந்தது அவங்க so அவங்களுக்கு தான் தெரியும் என்ன நடந்தன்டு. அவளுக்குள் தேடல் அதிகமானது. அவள் ஆசைப்பட்டது போல் number கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ். number கெடச்சிட்டு. but இந்த number இப்ப வேல செய்யுமோ இல்லயோ தெரியாவே.

பரவல்ல எதுக்கும் number அ note பண்ணி கொண்டா நல்லது என்று எண்ணி லீனா அதை எழுதிக் கொண்டாள். பின்னர் அந்த file ஐ இருந்த இடத்தில் அப்படியே வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டு பலவாறு சிந்திக்க துவங்கினாள்.

அவள் இப்போது சிந்திக்க ஒதுக்கிய நேரத்தை ஹனா அன்று சொல்லும் போது ஒதுக்கி இருந்தால் அவள் வாழ்க்கை இப்படி தத்தளித்துக் கொண்டிருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையே.

பேசி வெச்ச time ல கூட இவர்ட 4toவ நா ஹனாக்கு அனுப்பினன்டு சொன்னதுக்கு மாமி என்னா மாரி ஏசினாங்க. அதுக்கு பொறகு 4n ல இரிக்கிற இவர்ட 4to எல்லாதயும் delete பண்ணிட்டு இனி யார்க்கும் 4to அனுப்ப வானான்டு சொன்னாங்க. நா அழுதேன் அவங்க ஏசினன்டு. அதுக்கு அவங்க மாப்புளய கல்யாணதுல பார்க்குறது தான் surprise என்டு சொன்னாங்க. அத நானும் நம்பினேன். ச்சீ நா அப்பவே யோசிச்சி இரிக்கனும். இப்படி மோடயாவிட்டேனே. என்று தன்னை தானே கடிந்து கொண்டாள் லீனா.

யா அல்லாஹ்! பாரு எனய எப்படி மொடயாக்கி இரிக்கிறாங்க? எனக்கு எப்பவுமே நீ இரிக்கிறாய். எனக்கு நீ எந்த கெடுதலும் நடக்க உட மாட்டாய். please ரப்பே! இவங்க எல்லாரும் எனக்கு எத மறக்கிறாங்களோ அத ஏன்ட கண்ணுக்கு காட்டி தா. உண்மய மட்டும்  காட்டி தா. நீ தான் எனய காப்பாத்தனும் அல்லாஹ். please. என்று மனதார கதறினாள் லீனா.

அவள் மனதில் 1000 விடை தெரியாத கேள்விகள்.வெளியே எவரிடமும் சொல்லி அழ முடியாத அவல நிலை. ஏனென்றால் ஏமாற்றுக்காரர்கள் பொய்யை உண்மை எனக் காட்டி கோழைகளை ஏமாற்றுவார்கள். ஆனால் ஏமாற்றப்படுபவன் உண்மையை உணர்ந்து செயல்பட ஆரம்பித்தால்,  அவர்கள் தவறை சுவடே தெரியாமல் அழித்து விட்டு அந்த கோழையின் மீது வீண் பழி சுமத்தி அவர்கள் உத்தமர்களாக மாறுவார்கள்..

எனவே தான் லீனா அமைதி காத்தாள். ஆனாலும் அவளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்து சிதறியது. அவள் எதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இப்படி இருக்க ஒரு நாள் அவள் தாயுடன் தொலைபே‌சியில் உரையாடிக் கொண்டிருந்தாள்.

ஷரீப் வாசலில் அவன் நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான். அதனால் அவள் அன்று தாயுடன் மனம் திறந்து பேச  முடிந்தது. இல்லை என்றால் அவள் என்ன பேசுறாள் என்று உளவு பார்க்க ஷரீப் பக்கத்திலே 4nஐ loudspeaker போட்டு அமர்ந்திருப்பான். அது லீனாவுக்கு பிடிக்காது. அதற்காக அவள் எவ்வளவோ சண்டை போட்டு அழுதும் இருக்கிறாள். ஆனாலும் அவன் சொல்வது தான் சட்டம் என்றிருந்தது.

நீங்கள் யோசிக்கலாம். ஷரீப் லீனாவை சந்தேகப்பட்டு தான் இப்படி செய்கிறான் என்று. ஆம். இது சந்தேகம் தான். ஆனாலும் அது லீனாவின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் அல்ல. மாறாக தனது நடவடிக்கை குறித்து லீனா அவள் குடும்பத்தாரிடம் சொல்லி விடுவாளோ என்ற சந்தேகம் தான் இது.

இது வரை அவனது 4nஐ கூட அவள் எடுத்து பார்த்ததில்லை. அந்த 4n password கூட அவளுக்கு தெரியாது. அதை கேட்க போய் அவன் அவளிடம் கடிந்து கொண்டதே அதிகம். எனவே அவள் கேட்க விரும்புவதுமில்லை.

உண்மையில் அந்த 4n இல் என்ன தான் இருக்கிறது. அவன் எங்கு சென்றாலும் அவனுடன் ஒட்டியிருக்கும் உயிர் போல 4nஐ நினைக்க காரணம் தான் என்ன? என்ற கேள்விக்கு விடை காண விரும்பினாள் லீனா.

எனவே இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணியவளாக அவனது 4nஐ உளவு பார்த்தாள். திடீரென whatsAapp பக்கம் சென்றவள் கண்ணில். யாரோ ஒருத்தியின் ஒரு msg ஈட்டி போல் பாய்ந்தது. ஆம். அவள் தான் இனி லீனாவுக்கு வரப்போகும் ஜென்ம எதிரி.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

Leave a Reply

%d bloggers like this: