ஹஜ்ஜுப் பெருநாள்
தியாகத் திருநாள்
இப்ராஹிம் நபியின்
சோதனைகளுக்கான
வெற்றித் திருநாள்.
தாராள மனதுக்கும்,
தயால குணத்திற்கும்
வித்திட்ட திருநாள்.
பாளைவனம் தனில் விடப்பட்ட
ஹாஜரா நாயகியினதும்
இஸ்மாஈலினதும் பொறுமைக்கு
பெருமை சூட்டிய நாள்.
கஃபாவின் வாயில் தனில்
ஹாஜிகளின் வெள்ளோட்டத்தை
திறலச் செய்த பெருநாள்.
கலிதீர்க்க இனிய இன்பமும்
பசி தீர்க்க அரிதே குர்பானியும்
அன்புடனே அழைத்து வந்த திருநாள்.
ஸம் ஸம் நீரை ஊற்றெடுக்கச்செய்ய
முகவரி தந்த பெருநாள்
எமது இஸ்லாமிய இரு பெருநாட்களில்
அருள் நிறைந்த
ஈதுல் அல்ஹா பெருநாள்.
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகங்களின் திசை நோக்கி
எங்களையும் அழைத்துச் செல்ல
வந்ததே பெருநாள்.
பகைமைகள் யாவற்றையும்
மறந்து பணிவுடனே அனைவரும்
மனமுகந்து மொழிந்திடுவோம்.
தகப்பலல்லாஹ் மின்னா வமின்கும்